Tuesday, November 2, 2021

தனுசு: 2021 நவம்பர் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

தனுசு:

ராசிநாதன் குரு இந்த மாதம் முதல் நீச்ச நிலையில் இருந்து மாறுகிறார். இன்னும் சில மாதங்களில் ஏழரைச் சனி முழுமையாக முடிகிறது. தனுசு ராசிக்காரர்களின் மனோபலம் அதிகரிக்கும் மாதம் இது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது பிறக்கும். உங்களில் சிலர் பணியிடங்களில் நல்ல பெயர் பெறுவீர்கள். குடும்பாதிபதி சனி ஆட்சியாகி இரண்டில் இருப்பதால்  வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. இளைய பருவத்தினருக்கு எதிர்காலத்தை பற்றிய பயங்கள் விலகும்.

தனுசுக்கு தொட்டது துலங்கும் நேரம் ஆரம்பித்திருக்கிறது. எடுத்த காரியம் யாவிலும் வெற்றிஎன்ற மகாகவியின் வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும். தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கோட்சார அமைப்புப்படி இனிமேல் எதிலும் யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய டீலர்ஷிப் எடுத்தல்,  முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருந்தவர்கள் தற்போது பக்கத்தில் வருவார்கள். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். பிள்ளைகளால் இனி நல்ல சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். பொதுவாழ்க்கை, ஊடகம் பத்திரிக்கை துறை, கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல மாதம். நீண்டநாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருளை வாங்குவீர்கள். தந்தை வழியிலும் செலவுகள் உண்டு. பூர்வீகச்சொத்தில் ஏதாவது மனக் கஷ்டங்கள் வரலாம். வயதான அப்பாவை கொண்டவர்கள் அவருடைய ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். எதுவும் எல்லை மீறாது. தனுசு இனிமேல் நன்றாக இருக்கும். கடவுள் துணையிருப்பார்.

2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் தேதி காலை 9.50 முதல் 26-ம் தேதி இரவு 8.36 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment