கைப்பேசி : +91 8286 99 8888
மீனம்:
அனைத்து யோகக் கிரகங்களும் நல்ல நிலையில் இருப்பதால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு “பருத்தி புடைவையாய்க் காய்த்தது” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து விஷயங்களும் அதிக முயற்சி இன்றி நடக்கும். புதன் ஏழில் உச்சம் பெற்று ராசியை பார்ப்பதால் மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்கள்தான். முப்பது வயதுகளில் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை, குடும்பம், தொழில் போன்ற அனைத்திலும் செட்டில் ஆக வேண்டிய காலகட்டம் என்பதால் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு.
இளையவர்களுக்கு
அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. உங்களில் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு
அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் அமையும். செலவுகளும் அதற்கேற்ற
வருமானமும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும்
என்பதால் வீடு கலகலப்பும், சிரிப்புமாக
இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும்
அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கும், சுயதொழில்
செய்பவர்களுக்கும் வருமானம் வரும் ஆனால் சேமிக்கத்தான் முடியாது.
அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும்
ஏற்றம் தரும் மாதம் இது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

No comments :
Post a Comment