Wednesday, May 26, 2021

கன்னி: 2021 ஜுன் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

கன்னி:

கன்னியினர் தங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்த வேண்டிய நேரமிது.  எதிலும் ஒரு தயக்கத்துடன் இதுவரை இருந்தவர்கள் இனிமேல் முழுமையான திறனுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள். கடந்த சில வாரங்களாக ஏற்பட்டிருந்த லாக்டவுன் பிரச்சினைகளினால் தொழில் பற்றிய தீர்க்கமான உறுதியான முடிவைஎடுத்திருப்பீர்கள். அந்த முடிவினை இனி செயல்படுத்த முடியும். பெண்களுக்கு தலைவலி தரும் சம்பவங்கள் இருக்கும்.

தனாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் வலுவான நிலையில் இருக்கிறார். ஒரு நிலையில் அவர் குரு பார்வையில் இருப்பதால் ஜூன் மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் மாதமாக இருக்கும். கொரனாவினால் வந்த துன்பங்கள் போய் விட்டன. கன்னிக்கு இந்தமாதம் கெடுதல்கள் எதுவும் இல்லை. ஆறில் குரு அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பது தொல்லைகளை நீக்கும் ஒரு அமைப்பு. ஆகவே கன்னியினர்  இந்த மாதம் எதையும் துணிந்து ரிஸ்க் எடுத்து  சாதித்துக் காட்டுவீர்கள்.

பாக்கிய ஸ்தானம் வலுப் பெறுவதால் இதுவரை வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் நிலைத்தன்மை பெறாத இளைய பருவ கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் நிரந்தரமான வேலை, மற்றும் தொழில் அமைப்புகளுக்கான ஆர்டர்களைப் பெறுவீர்கள். யோகாதிபதி சுக்கிரன் சுபத்துவமாக இருப்பதால் வேலை விஷயமாக அலைச்சல்களும் அதிகம் பேசுதலும் அதன் மூலம் நல்லவிதமான வாழ்க்கை மாற்றங்களும் நடக்கும். இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும்.  தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு.

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இப்போது உங்களின் உண்மை மனதைப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு இருக்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு புதிய தொழில் ஆரம்பம் இருக்கும். குழந்தைகளின் சுப காரிய விஷயமாக சிலருக்கு அலைச்சல்களும், ஒன்றும் சரியாக அமையவில்லையே என்ற ஆதங்கமும் இருக்கும்.  வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. குறைகள் நீங்கும்  மாதம் இது.  சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். விவசாயிகள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லவைகளாக நடக்கும்.

4,5,6,8,10,12,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 5 ம் தேதி இரவு 11.27  மணி முதல் 8 -ம் தேதி மதியம் 12.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment