கைப்பேசி : +91 8286 99 8888
கடகம்:
கடக ராசிக்கு கெடுதல்கள் விலகி நல்லவை நடக்க பரம்பொருள் கை கொடுக்கும் மாதம் இது. கொரனாவினால் உலகமே முடங்கி கிடக்கும் இந்த நிலையில் உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும். இந்த மாதம் ராசியில் செவ்வாய் நீச்சனாகி
சனியின் பார்வையில் இருப்பதால் முதுகுக்குப்
பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம்
பார்த்துப் பேசுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள
வேண்டாம்.
இந்த மாத கிரக நிலைகளினால் இளைஞர்களுக்கு சோதனைகள்
இருக்கும். தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
இருக்கிறது. சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள்.
பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக
கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உடன் இருப்பவர்கள் மேல் ஒரு கண் எப்போதும்
இருக்கட்டும். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு சுணக்கம் இருக்கும். அரசு,
தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம்
உண்டு. கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி
பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும்.
எட்டாமிடத்தில் குரு இருக்கும் நிலையில் ஏழில் சனி
இருப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள்
ஏற்படும். வார்த்தைகளில் கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் மன
வருத்தங்கள் இருக்கும். மனைவியின் பேச்சை கணவர் கேட்க மாட்டார். அம்மாவைப்
பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும்
சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள்
உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. எந்தக்
காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதனால் பிரச்னைகள்
வரும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற
பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதுவரை பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப்
போய்க் கொண்டிருந்தவர்கள் இப்போது ஏதோ ஒரு விஷயத்தில் அடுத்தவருக்கு உதவி செய்ய
நினைத்து வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். அவசியத் தேவைகளைத் தவிர வேறு
எதற்கும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். லாக்டவுன் காலம் என்பதால் வீட்டிலேயே இருங்கள்.
சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். தவற விட்ட உறவுகளை இப்போது
உணருவீர்கள். சிலர் மறந்து விட்ட தொலைபேசி எண்களை தேடி எடுத்து நட்பு, உறவுகளை புதுப்பித்துக்
கொள்வீர்கள்.
3,5,8,9,10,12,13,14,15,19 ஆகிய நாட்களில்
பணம் வரும். 28 -ம்தேதி பகல் 1.00 மணி முதல் 30 -ந்தேதி இரவு 7.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும்
கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க
வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

No comments :
Post a Comment