கைப்பேசி : +91 8286 99 8888
கடகம்:
மாதம் முழுவதும் குருவும், சனியும் ராசியைப் பார்ப்பது மாதத்தின் முதல் பகுதியில் பின்னடைவுகளையும், 15-ம் தேதிக்குப் பிறகு எதிலும் வெற்றியை தரும் அமைப்பு என்பதால் மார்ச் மாதம் உங்களுக்கு மாற்றங்களை தருகின்ற மாதமாக இருக்கும். ஏழில் இணையும் சனி, குரு உங்களில் சிலருக்கு வட மாநில பிரயாணங்களையோ, சிலருக்கு வெளிமாநில வெளிநாடு வேலை மாறுதல்களையோ தருவார் என்பதால் கடக ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கின்ற மாதம் இது. ஒரு சிறு பயணமாவது இப்போது உங்களுக்கு இருக்கும்.
ஏழில் சனி இருப்பது சுற்றியிருப்பவர்கள் உங்களை
வெறுப்பேற்றி கோபம் வரவழைக்கும் ஒரு அமைப்பு. எனவே பேச்சிலும் செயலிலும் நிதானம்
வேண்டும். எதற்கும் பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். நிதானமாக இருங்கள். பாக்யாதிபதி
குரு மற்றும் பத்தாமிட அதிபதி செவ்வாய் வலிமையாக இருப்பது தொழில் அமைப்புகளில் நல்ல
பலன்களைத் தரும் என்பதால் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகள் லாபத்தை தரும். பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு
வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள்
இருக்கும்.
மாதம் முழுவதும் செவ்வாய் லாபத்தில்
இருப்பது சிறந்த அமைப்பு. பாபக் கிரகமான சனி, குருவுடன் இணைந்து ராசியைப்
பார்ப்பதால் உங்களில் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். இந்த நிலைமை இந்த மாதம் மட்டும்தான்.
அடுத்த மாதம் குரு பகவான் அதிசார நிலைக்குச் செல்வதால் கடகத்திற்கு நல்ல பலன்கள்
உண்டு. மூன்றாமதிபதி புதன் எட்டில்
மறைவதால் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட பொறாமை கொண்டவர்களால் தடுக்கப்பட்டு
கிடைக்காமல் போகும். இருந்தாலும் சூரியன் சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தனி
ஒருவராகவே சாதித்துக் காட்டுவீர்கள். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க
மாட்டீர்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும் என்பதால் மார்ச் மாதம் சோதனைகளைக்
கொடுக்காத மாதம்தான்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment