Friday, February 26, 2021

மகரம்: 2021 மார்ச் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மகரம்:

மகர ராசி இளைஞர்களுக்கு இந்த மாதம் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை அனைத்து விஷயங்களிலும் இருக்கும். எல்லாமே இழுபறியாக தாமதமாகத்தான் முடியும். பெரியவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. பிறப்பு ஜாதகப்படி வலுவில்லாத தசா புக்தி அமைப்புகளைக் கொண்ட இளைஞர்களுக்கு வேதனை தரும் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தினர் எதிலும் காலூன்ற முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இளையபருவத்தினர் ஏழரைச்சனி காலத்தில்தான் அனைத்துக் கஷ்டங்களையும் அனுபவிப்பீர்கள் என்பதால் காதல், கீதல் என்றுஉங்கள் சக்தியை விரயம் செய்யாமல் படிப்பிலும், வேலையிலும் கவனத்தை செலுத்துவது நல்லது. சனிக்குப் பரிகாரமாக பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மைகளை தரும்.

இளைஞர்களுக்கு அனைத்திலும் ஒரு விரக்தி மனப்பான்மையும், ஏமாற்றம் தரும் நிகழ்வுகள் நடக்கும் என்பதால் இளையோர்கள் எதிலும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது நல்லது. அடுத்த முப்பது வருடங்களுக்கு வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டிய அனுபவங்களை மட்டுமே இப்போது சனி தருவார் என்பதால் ஏழரைச் சனியை நினைத்து கலக்கம் எதுவும் தேவையில்லை. சனி முடிந்ததும் நன்மைகள் நடக்கும் என்பதால் ஏழரைச் சனியைக் கண்டு பயப்படவும் தேவையில்லை. நான் என்னதான் சொன்னாலும் ஒருசிலர் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். மன அழுத்தத்திலும் சிலர் இருப்பீர்கள்.

யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். மாதத்தின் முதல்பாதியை விட பின்பாதியில் அதிர்ஷ்டகரமான நிகழ்வுகளும் மனம் சந்தோஷப்படும் காரியங்களும் இருக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். சகோதரிகளால் செலவு உண்டு. அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.

5,6,7,12,13,19,20,22,30,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம்தேதி இரவு 10.48 மணி முதல் 28-ம்தேதி அதிகாலை 1.20 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் செய்யவேண்டாம். மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment