Friday, February 26, 2021

துலாம்: 2021 மார்ச் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

துலாம்:

துலாம் ராசிக்கு யோகக் கிரக நிலைகளே இந்த மாதம் அமைகின்றன. மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் நல்ல நிலைகளில் இருப்பதும், குரு,சனி இணைந்திருப்பதும் கடன், நோய், எதிர்ப்புகளை விலக்கும் ஒரு அமைப்பு. இந்த நிலையால் உங்களில் சிலருக்கு நீண்டகாலமாக தொல்லைகளை கொடுத்து கொண்டிருக்கின்ற கடன் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். சிலருக்கு வேலையிடங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடியோடு விலகும். அனைத்திலும் திருப்தியான மாதம் இது. எண்ணியது எண்ணியபடி நடக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.

குரு, சனி இணைவது நல்ல அமைப்பு. எனவே எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்காமல் முன்னேற வேண்டிய மாதம் இது. சாதகமான கிரக அமைப்புகள் இருப்பதால் தயக்கமும், சோம்பலுமின்றி பரம்பொருளைப் பிரார்த்தித்து நீங்கள் எந்த முயற்சிகள் எடுத்தாலும் அனைத்தும் வெற்றியாகும். பனிரெண்டுக்குடைய  புதன் அந்த வீட்டிற்கு ஆறில் மறைந்தாலும் ராசிநாதன் ஆறில் உச்சமடைவதால்   சிலருக்கு மறைமுகமான லாபங்களும், எதிர்பாராத உதவிகளும் இருக்கும். ராகு எட்டில் இருப்பதால் வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் உண்டு. சிலர் வெளிநாடு, வெளி மாநிலம் செல்வீர்கள். சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் செயல்படும். எதிர்பாராத ஏதேனும் ஒரு நல்ல லாபத்தை இந்த மாதம் எதிர்பார்க்கலாம்.

மாதம் முழுவதும் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பது பெண்களால் லாபங்களும் இனிமையான சம்பவங்களும் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் உண்டு. குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களின் தேவைகள் நிறைவேறும். எட்டில் அமர்ந்து வாக்கு ஸ்தானத்தைப் பார்க்கும் செவ்வாய் பணியிடங்களில் உங்களை ஆத்திரமூட்டி பார்ப்பார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் சிறந்த மாதம்.

5,6,8,10,14,15,16,20,21,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம் தேதி மாலை 5.22 மணி முதல் 21-ம்தேதி காலை 6.08 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment