ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
ரிஷபம்:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில்
இருப்பதும், பிற்பகுதி நாட்கள் அவர் உச்சமடைவதும், ராசியைக்
குரு பார்ப்பதும் ரிஷப ராசிக்காரர்களின் கனவுகளை நனவாக்கும் அமைப்பு என்பதால் மார்ச்
மாதம் உங்களுக்கு ஆனந்த மாதமாக இருக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் பதினொன்றாமிடத்திற்கு
வருவதால் மாதத்தின் முதல் 15 நாட்கள் அனைத்து விஷயங்களும் மெதுவாக நகர்வது போலத்
தோன்றினாலும், மாதத்தின் பிற்பகுதியில் உங்களின்
செயல்கள் அனைத்திற்கும் பலன்கள் உண்டு. உங்களின் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும்
மாதம் இது.
இதுவரை வாழ்க்கையில் நிலை கொள்ளாத இளைய
பருவத்தினருக்கு திருமணம், வேலை வாய்ப்பு, புத்திர பாக்கியம் போன்ற நல்ல பலன்கள்
நடக்கும். ராசியில் சுபத்துவமாக இருக்கும்
ராகுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர்
நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.
யோகக் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் ஏற்கனவே நீங்கள் யோசனையின்றி
அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த மாதம் சீர்தூக்கி முறைப்படுத்திக்
கொள்ள முடியும். சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் மனமகிழ்ச்சியான சுபகாரியங்கள்
உண்டு சிலருக்கு குலதெய்வ, இஷ்டதெய்வ தரிசனம் கிடைக்கும்.
சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.
மாறாக சில நன்மைகளும் எதிர்கால முன்னேற்ற விஷயங்களும் இருக்கும்.
கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர்
நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன்
பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் இப்போது அவர் மூலமாக நல்லபலன்கள் கிடைக்கும். மாணவர்கள் நன்கு
படிப்பீர்கள். அரசுத்துறையினருக்கு இந்த மாதம் நல்லபலன்கள் உண்டு. அரசியல்வாதிகள்
ஏற்றம் பெறுவார்கள். கோட்சார அமைப்புப்படி
யோக காலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள்
இப்போது கைகொடுக்கும்.
1,5,6,8,17,18,24,25,27,29 ஆகிய நாட்களில்
பணம் வரும். 6-ம்தேதி இரவு 9.38 மணி முதல் 9-ந்தேதி அதிகாலை 9.38 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய
வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

No comments :
Post a Comment