Friday, January 22, 2021

மீனம்: 2021 பிப்ரவரி மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மீனம்:

பிப்ரவரி மாதம் முழுவதும் ராசிநாதன் குரு, லாபாதிபதி சனி இருவரும் பதினொன்றாமிடத்தில் இணைந்திருப்பது மீனத்திற்கு யோகம் தரும் அமைப்பு. இதனால் மீனத்தினருக்கு உழைப்பிற்கேற்ற பணவரவு இருக்கும். சாதகமான கிரக அமைப்புகள் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும். செவ்வாய் ஆட்சியாக  இருப்பது இன்னுமொரு சிறப்பு என்பதோடு மாதத்தின் ஆரம்ப நாள் சூரியனும், சந்திரனும் வலுவாக இருக்கும் நாளாக அமைவதால் இந்த மாதம் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரும்.

எதையும் முழுமையாகச் செய்ய முடியாமல் தயங்கித் தயங்கி தவித்துக் கொண்டிருந்த மீனத்தினர் இப்போது நல்ல சூழ்நிலைகள் அமைவதை உணர்வீர்கள். இந்த வருடம் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடுகின்ற மாதமாக பிப்ரவரி இருக்கும். வீட்டிலும் வெளியிலும் சுபமான நிகழ்ச்சிகளும், மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். மீன ராசியின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி விட்டன. உங்களில் சிலருக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்னைகள் இனி இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும்.

ராகுவின் இருப்பால் மூன்றாமிடம் வலுப் பெறுவதால் உங்களுடைய மனோ பலமும், எதையும் நேர்முகத்துடன் சந்திக்கும் தைரியமும் அதிகரிக்கும். இதுவரை சந்திக்கத் தயங்கிய பல விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். இளைய பருவத்தினருக்கு நல்லவேலை கிடைக்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும்.

3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி காலை 9.49 முதல் 5-ம் தேதி மதியம் 12.47 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment