கைப்பேசி : +91 9768 99 8888
கும்பம்:
ராசிநாதன் சனி பனிரெண்டில் ஏழரைச் சனி நிலையில் இருக்கிறார். ராஜயோகாதிபதி சுக்கிரன் ஆறில் இருப்பது கும்ப ராசிக்கு குழப்பம் தரும் ஒரு நிலைமைதான். ஆனாலும் சுக்கிரன் ராகுவிடம் இருந்து விலகி வந்து விட்டதும், புதன் உச்சம் அடைவதும் எதுவும் கை மீறிப் போகாமல் காப்பாற்றும் அமைப்பு என்பதால் உங்களுக்கு பரம்பொருளின் ஆசிர்வாதம் இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு பலனாக இந்த மாதம், உங்களில் சிலர் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அவரை பார்ப்பீர்கள். பிடிக்காத ஒருவருடன் இருந்தே தீர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவீர்கள். மனதைக் கெடுக்கும் மாதம் இது.
சூரியனும், செவ்வாயும் ஆட்சி வலு அடைந்திருப்பதால் சின்ன விஷயத்திற்கு கூட எரிச்சல் அடைவீர்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட்டு பெயரை கெடுத்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருங்கள். சனியின் நிலையால் வீடு, குடும்பம், வேலை, தொழில் போன்ற விஷயங்களில் தவிர்க்க முடியாத மாறுதல்கள் இருக்கும். அந்த மாறுதல்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லவையாக அமையும். வருகின்ற மாறுதல்களை ஏற்று கொண்டு அதன்படி நடப்பது நல்லது. உங்களில் சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல பலன்களும் நிம்மதியைத் தரக்கூடிய விஷயங்களும் நடக்கும்.
சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் கணவன் மனைவி உறவு சற்று அப்படி இப்படித்தான் இருக்கும். எதிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல விஷயங்கள்தான் நடக்கும். பணிபுரியும் இடத்தில் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் போவதற்கோ, சம்பளம் தாமதம் ஆவதற்கோ வாய்ப்புக்கள் இருப்பதால் அனாவசிய செலவுகள் செய்யாமல் சிக்கனமாக இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு குறிப்பாக தொலைக்காட்சி துறையினருக்கு இது தடை தரும் மாதம். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம். மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஏழில் இருக்கும் சூரியன் சில குழப்பங்களை ஏற்படுத்தினாலும் அனைத்துப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள்.
2,3,4,10,14,15,16,21,23,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ந்தேதி மாலை 3.07 மணி முதல் 19-ந்தேதி மாலை 2.42 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
No comments :
Post a Comment