ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மேஷம்:
மாத
ஆரம்பத்திலேயே ராசிநாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்து விலகி அதி நட்பு
வீட்டிற்கு மாறுவதால் உங்களின் தொழில், வேலை
போன்ற விஷயங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல வருமானத்துடன் இருக்கும். மேஷ
ராசிக்காரர்கள் வெற்றி பெறும் மாதம் இது. வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில்
இடைஞ்சல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். பிடிக்காத மேலதிகாரி மாறுதல் ஆவார்.
வியாபாரம் சூடு பிடிக்கும். எதிரிகளின் தொந்தரவு ஒழியும். உடல்நலம் இல்லாமல்
இருந்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள்
இருக்கும். கோர்ட், கேஸ், போலீஸ் விவகாரங்கள் பாதகம் தராது.
தொழிலாளர்களுக்கு பணிச்சுமை குறையும். தொழில் அதிபர்களுக்கு சிக்கல்கள் தீரும்.
குரு
எட்டில் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சிறிது தடைகள் இருப்பதாகத் தோன்றினாலும்
கடைசியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடியும். அக்டோபர்
குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னும் அதிக நன்மைகள் உண்டு. வேலை செய்யும்
இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும். நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள
உயர்வு போன்றவை இன்னும் சில வாரங்களில் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள்
நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.
பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல
நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல்
கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள்
வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு.
இளைய
பருவத்தினருக்கு திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு
சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள். பிரச்னைகளைச்
சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க முடியும்.
மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இளைய
சகோதரத்தால் செலவுகள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும்
பயணங்களும் வரும். பணவரவும் உண்டு.
1,8,9,10,15,16,19,21,22,29
ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ம் தேதி மதியம் 3.25 மணி முதல் 10-ம் தேதி இரவு
11.05 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய முயற்சிகள்,
புதிய ஆரம்பங்கள் எதையும் ஒத்தி வைப்பது நல்லது.
எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment