மேஷம்:
ஆனிமாதம் மேஷராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். செய்யும் முயற்சிகள் மாத ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் மாத பிற்பகுதியில் வெற்றி பெறும். ஒன்பதில் இருக்கும் சனி வர வேண்டிய வருமானங்களைத் தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக யோசிப்பது நல்லது. உங்களில் சிலர் இந்த மாதம் பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.
ராசிநாதன் செவ்வாய் நீசம் அடைவதால் சிலருக்கு மனம் எதிலும் ஒட்டுதல் இன்றி படபடப்பாக இருக்கும். பிறவிக் கோபக்காரராகிய நீங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. செவ்வாய் உங்களை சட்டென்று கோபம் வரும் விஷயங்களைச் செய்து அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்குவார் என்பதால் அனைத்து விஷயங்களிலும் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்கள் இருக்கலாம். குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது இருவரில் ஒருவர் பொறுத்து போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்:
ஆனி மாதம் ரிஷபராசிக்கு தடைகளைக் கொடுத்தாலும் ராசிநாதன் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பதால் எல்லாவற்றையும் நீங்கள் சமாளிக்கும் மாதமாக இருக்கும். மாத ஆரம்பத்தில் நம்பிக்கை இழப்பது போல சில விஷயங்கள் நடந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு எதையும் ஜெயித்து காட்டுவீர்கள். எட்டாமிடத்து சனியால் உங்களில் சிலருக்கு மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அனைத்தும் உங்களுக்கு நன்மைகளைத் தரும்.
மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். மகள் சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். ரிஷபத்தினர் இனி அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக் கம்பத்தை தொடப் போகிறீர்கள் என்பது உறுதி. அரசுத் துறை மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.
மிதுனம்:
உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் மிதுன ராசிக்கு திருப்புமுனையான மாதமிது. ராசிநாதன் புதன் நல்ல நிலையில் இருப்பதாலும், மாத ஆரம்பத்தில் யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி வலுவுடன் இருப்பதாலும் பெண்களால் நன்மைகளும், வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ள மாதம் இது. மாத இறுதியில் புதன் பகைவீட்டில் இருந்தாலும் குருவின் பார்வையில் அமர்வதால் சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி விடும் என்பது உறுதி.
ஒரு குறிப்பிட்ட பலனாக இந்த மாதம் பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கலாம். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரவு இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள்.
கடகம்:
ஆனிமாதம் கடக ராசிக்கு மேன்மையான மாதம்தான். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் உங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது.
தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும் அவற்றால் நன்மைகள் கிடைக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். பதவி உயர்வு உண்டு.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு ஆனி மாதத்தின் முக்கிய பலனாக பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் விரயங்களும் உண்டு. அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற உறவுகளில் சில மனக் கஷ்டங்கள் இந்த மாதம் இருக்கும். தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை தள்ளி வையுங்கள். மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியனுடன் ராகு இணைவதால் மனம் தெளிவான நிலையில் இருக்காது. முக்கிய முடிவுகளை இந்த மாதம் தள்ளி வையுங்கள்.
இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட மற்றவர் அடங்கி போவது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் உண்டு.
கன்னி:
மாத ஆரம்பத்தில் கன்னிநாதன் புதன் ஆட்சி நிலையில் இருப்பதாலும், கன்னியின் யோகாதிபதி சுக்கிரனும் வலுவாக உள்ளதாலும் ஆனிமாதம் கன்னிக்கு பொருளாதார மேன்மைகள், மற்றும் திருப்தியான பணவரவுகள் உள்ள மாதமாக இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனிமேல் முயற்சி இல்லாமலே வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்களும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டுவர். வெகுநாட்கள் திருமணம் தாமதமான குழந்தைகளுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு.
சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்பவராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும்.
துலாம்:
துலாம் ராசிக்கு இந்த மாதம் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும், பாராட்டுக்களும், சம்பள உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உண்மை நிலை புரிந்து நண்பராக மாறுவர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள் போன்ற அனைவருக்கும் நல்ல மாதம் இது.
வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும் அனுகூலமும் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. சிறப்பான மாதம் இது.
விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் நீசமாக இருந்தாலும் குருவின் பார்வையில் இருப்பதால் பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினர் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். மாதம் முழுவதும் உங்களுக்கு மனதைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும். ஆனி மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். விருச்சிக ராசிக்காரர்கள் படவேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் அனுபவித்து விட்டீர்கள். இனிமேல் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனதைத் தளர விட்டு விட வேண்டாம். இனி உங்களுக்கு நல்ல காலம்தான்.
இளைய பருவத்தினர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆனி உங்களுக்கு ஆகாத மாதம் இல்லை. இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். என்ன இருந்தாலும் பற்றாக்குறை வராது. கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும்.
தனுசு:
ஆனி மாதம் முழுவதும் ராசியில் இருக்கும் ராகு-கேதுக்கள் சூரிய தொடர்பைப் பெறுவதால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் சிக்கல்கள் வரும். தந்தைவழி சொந்தக்காரர்களால் வம்புச் சண்டைகள் உண்டு. அப்பாவின் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டும். தனுவினருக்கு குறுக்குவழி சிந்தனைகள் இப்போது வேண்டாம். எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக கோபத்தை தவிருங்கள். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.
ஆறாம் அதிபதி வலுவாக இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். எதிரி என்றும் தெரிந்தும் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணமுதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது செய்ய வேண்டாம். சிலருக்கு தேவையற்ற பிரயோஜனம் இல்லாத பயணங்கள் இருக்கும். ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குடும்பத்தில் சகோதரர்களிடம் சிறுசிறு சண்டைகள் வரும்.
மகரம்:
ஆனிமாதம் மகர ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். யோகாதிபதி சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் முதலில் ஏமாற்றத்தைத் தந்தாலும் பிறகு வெற்றி பெறும். விரயத்தில் இருக்கும் சனி லாப நிலைகளையும், வர வேண்டிய வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. ஆறுக்குடையவன் அதற்கு இரண்டில் அமர்வதால் எதிர்பாராத வகையில் வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும்.
வேலை செய்யும் இடங்களில் சண்டைகளை தவிருங்கள். நண்பர்கள் எதிரியாகும் அமைப்பு இருக்கிறது. பழகியவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். செவ்வாய் நீசம் அடைந்து ராசியைப் பார்ப்பதால் சுற்றியுள்ளவர்கள் உங்களை கடுப்பேற்றும்படி நடந்து கொள்வார்கள். எந்த ஒரு விஷயமானாலும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. செவ்வாய் உங்களை கோபக்காரனாக்கி அதன் மூலம் ஏதாவது சிக்கலை உண்டாக்குவார். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இந்த மாதம் உண்டு.
கும்பம்:
யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதால் ஆனிமாதம் முழுவதும் கும்ப ராசிக்கு சுப நிகழ்ச்சிகளும், தூர இடங்களில் இருந்து நல்லசெய்திகளும், பணவரவும் இருக்கும். செவ்வாயின் ஆறாமிட நீசம் உங்களுக்கு யோகம் தரும். வருமானம் குறையாது. பணவரவும் நன்றாக இருக்கும். எந்தக் குறையும் இல்லாமல் இந்த மாதத்தை சமாளிக்க உங்களால் முடியும். சிலருக்கு மாத முற்பகுதியில் எதிர்பாராத பணவரவுகளும், அதிர்ஷ்டம் கை கொடுத்தலும் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு. சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.
மீனம்:
ஆனி மாதம் முழுவதும் யோகாதிபதி செவ்வாய் ஐந்தில் நீசமாக இருந்தாலும் குருவின் பார்வையில் உள்ளதாலும், ராசிக்கு குருவின் பார்வை இருப்பதாலும் உங்களின் யோகமாதம் இது. நான்கில் சுக்கிரன் ராகுடன் இணைவதால் பெண்களால் சுப விரையங்களும், வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். வீட்டில் சந்தோஷம் உண்டு. புதன் ஐந்தில் அமர்வதால் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்தும் ராசிநாதன் வலுவால் சூரியனைக் கண்ட பனிபோல ஓடி விடும். இதுவரை உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் மீன ராசிக்கு திருப்புமுனையான மாதமிது.
தடங்கலாகி வந்த சில விஷயங்கள் இப்போது நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். சிலருக்கு வாகன மாற்றங்கள் உண்டு. பணவரவிற்குத் தடை இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். உயர்கல்வி படிக்க தடை நீங்கும். எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். உங்களில் சிலருக்கு தூரப் பயணங்கள் ஏற்படும்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment