கைப்பேசி : 8681 99 8888
ஒரு கிரகம் தன்னுடைய முதல்நிலைக் காரகத்துவத்தை,
முதலில், தன்னுடைய தசையில் தன்னுடைய
சுபத்துவ, பாபத்துவ அமைப்புகளுக்கு
ஏற்பத் தரும்.
சுக்கிரனின் முதல்நிலைக் காரகத்துவம் காமமும், பெண்களும் ஆகும். (பெண்ணுக்கு ஆண்). எத்தகைய நிலையில் உள்ள சுக்கிரன் ஆயினும் ஒருவருக்கு சுக்கிரனின் தசை, புக்தி வரும் நேரங்களில், ஆணாயின் அவருக்கு பெண்களின் அறிமுகம் மற்றும் தொடர்பும், பெண்ணாயின் ஆண்களின் அறிமுகம் மற்றும் தொடர்பும் ஏற்படும். ஒருவரின் வயது, இருப்பிடம், தகுதிக்கேற்ப இந்த நிகழ்வுகள் இருக்கும்.
காமக் காரகனாகிய
சுக்கிரனின் தசை உடலும், மனமும் காமத்திற்குத் தயாராகும் சரியான பருவத்தில் வந்தால் மட்டுமே ஒரு மனிதனுக்கு முறையான விதத்தில் காமம் கிடைக்கும் என்பதன் அடிப்படையில்தான் “குட்டிச் சுக்கிரன்
குடியைக் கெடுக்கும்” என்பது போன்ற பழமொழிகள்
ஏற்பட்டன என்பதை ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேன்.
எனவே மிக முக்கியமாக காமத்திற்கு உடல் தயாராக
ஆரம்பிக்கும் 13 அல்லது
14 வயதில் ஆணாயினும், பெண்ணாயினும் சுக்கிரனின் தசா,
புக்திகள் வரக்கூடாது. அப்படி
வருமாயின் அவருக்கு எதிர்பாலினத்தவரைப்
பற்றிய அனுபவங்களும், புரிதல்களும்
நடக்கும். சுக்கிரதசை ஒருவருக்கு வராமல்
போனாலும் மற்ற தசைகளுக்குள் அடங்கிய சுக்கிரனின் புக்திகளில் இது நடந்தே தீரும்.
|
ராகு, |
|
|
ல/ |
13-9-2004 5-15 மாலை சென்னை |
சுக், சனி, |
|
|
சந், சூரி, செவ்,புத, |
||
|
|
கே, |
குரு |
மிகச்சிறிய
வயதில் குழந்தைகளுக்கு, தவறான வழியில் தொடுதல் போன்ற
காமம், தகுதியற்ற நபராலோ அல்லது மிகை வயதுடைய
உறவினர், வேலைக்காரர், அருகில் இருப்பவர் போன்ற நபர்களாலோ நடப்பது இதுபோன்ற பாபத்துவம் பெற்ற சுக்கிரனின் தொடர்புள்ள தசா, புக்திகளில்தான்.
தாயோ,
தகப்பனோ, வழிகாட்டும் குருவோ வாழ்க்கையைக் கற்றுத்
தந்தாலும் ஒரு மனிதன், தானே
சில விஷயங்களை அனுபவித்து அறிய வேண்டும் எனும் அடிப்படையில், இளம் வயதில் வரும் சிறிய கால அளவிலான சுக்கிரன்
தொடர்பான புக்திகள் ஒருவருக்கு காமம் பற்றிய தெரிதல், மற்றும் புரிதல்களை அறிமுகப்படுத்தும்.
பதின் பருவத்தில் அல்லது இருபது வயதுகளில் வரும்
சுக்கிரனின் புக்திகள் ஒருவருக்கு காதல் என்ற பெயரில் எதிர்பாலினத்தவரை தெரிந்து கொள்ள வைக்கும்.
சுக்கிரனின் புக்திகள்தான் என்றில்லை,
சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் அல்லது சுக்கிரனோடு இணைந்து, சுக்கிரனின் பார்வை போன்ற தொடர்பு கொண்ட புக்திகளிலும் இவை நடக்கும்.
இத்தகைய காமம்
மற்றும் எதிர்பாலினத்தவர் பற்றிய
அனைத்து அனுபவங்களும் நல்லவைகளாக இருக்குமா அல்லது கெட்ட அனுபவங்களாக இருக்குமா என்பது
சுக்கிரனின் சுபத்துவம் மற்றும் பாபத்துவ
அமைப்பைப் பொருத்தது.
ஜோதிடத்தில் காமத்தைக் குறிக்கும் வீடுகள் 3, 7, 12 ஆகும். இந்த
மூன்று இடங்களோடு சுபத்துவ சுக்கிரன் தொடர்பு கொள்ளும்போது ஒருவருக்கு காமம் முறையான வழியில் அபரிமிதமாகக் கிடைக்கும். உதாரணமாக சுக்கிரன் 3, 7, 12ம் வீடுகளில் அமர்ந்தோ அல்லது இந்தப் வீடுகளைப் பார்க்கும் நிலையில் 9, லக்னம், 6
ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தாலோ ஒருவருக்கு காமத்தில் ஆர்வம் அதிகமாக
இருக்கும்.
தனித்து
இந்த பாவகங்களில் இருக்கும் சுக்கிரன்
பாபர்களின் தொடர்பின்றி மிகுந்த சுபத்துவமாக இருக்கும் நிலையில் ஒருவருக்கு காமத்தில் கூடுதலான
செயல்திறனும், ஆர்வமும் இருக்கும். மேற்கண்ட 3, 7, 12 ஆகிய மூன்று வீடுகளிலும் பன்னிரண்டாம் பாவகமே, உறவின்போது ஒருவரின் செயல்திறன், அதனை அனுபவிக்கும் தன்மை, துணையை திருப்திப்படுத்துதல் போன்றவைகளைக் குறிக்கிறது.
என்னுடைய
அனுபவத்தில் சுக்கிரன் ஆறாம் இடத்தில் பாபர்களின் தொடர்பின்றி பெரும்பாலும் தனித்து, சுபமாக அமர்ந்து 12 ஆம் பாவகத்தைப் பார்க்கும் நிலையில் ஒருவர்
அதிகமான காம ஈடுபாட்டுடனும், செயல்திறனுடனும் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆகவே அயன, சயன, போகஸ்தானம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பன்னிரண்டாம்
பாவகமே ஒருவருக்கு எப்படிப்பட்ட நிலையில், எவ்விதத்தில் காமம் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது.
இந்தச் சிறுவனின் உதாரண
ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் இதில் வீரிய ஸ்தானமான மூன்றாமிடத்தில்
ராகு அமர்ந்து, எவ்வித சுப
சம்பந்தம் கிடைக்காத நிலையில், சுக்கிரனோடு இணைந்த சனியின்
பார்வையை மட்டும் ராகு
பெற்றிருக்கிறார்.
காமத்தைக் குறிக்கும் இன்னொரு
பாவகமான ஏழாம் வீட்டின்
அதிபதி சூரியன், சனிக்கு நிகரான பாபராகக் கருத வேண்டிய
பூரண அமாவாசை சந்திரனோடும், மூன்றாம் அதிபதியான சுபத்துவ, சூட்சும வலுக் கிடைக்காத செவ்வாயோடும் இணைந்திருக்கிறார். பாபியருடன் சேர்ந்தால் பாபர் ஆவார் எனும்
விதிப்படி மூன்று பாபக்
கிரகங்களுடன் சேர்ந்து மாட்டிக்கொண்ட நான்காவது பாபக் கிரகமாக இங்கே புதன் இருக்கிறார்.
இங்கே சனிக்கு நிகராக கருத வேண்டிய பூரண அமாவாசை
சந்திரன் என்று ஏன் குறிப்பிடுகிறேன்
என்றால், சிலருக்கு தேய்பிறை சந்திரன் என்றாலே அவர் பாபர்தான்
என்ற எண்ணம் இருக்கிறது.
ஜோதிடத்தில் உள்ள மகா நுணுக்கமான விஷயங்களில்
சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை
நிலைகளும் ஒன்று. ஒரு
கிரகத்தின் சுபத்துவ, பாபத்துவ
நிலைகளையும், எனது பாபக் கிரகங்களின் சூட்சும வலு கோட்பாட்டையும் நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டுமெனில், சந்திரனின் சுப, அசுப அளவினை ஓரளவிற்கேனும் தெளிவாகத்
தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
என்னுடைய பலன் சொல்லும் பதில்கள் மற்றும் ஜாதக
விளக்கங்களில் அடிக்கடி பௌர்ணமிக்கு அருகில் உள்ள 90
சதவிகிதம், 80 சதவிகிதம் ஒளி பொருந்திய சந்திரன் என்று தேய்பிறை
சந்திரனைக் குறிப்பிடுவேன். இந்த நிலையில்
தேய்பிறையாக இருந்தாலும் சந்திரனை, நான்
பாபராகக் குறிப்பிடுவது இல்லை.
உண்மையைச் சொல்லப்போனால் பௌர்ணமிக்கு அடுத்த
நிலையிலிருந்து சந்திரனின் தேய்நிலை ஆரம்பமானாலும் அவருடைய பாபத்துவம் பவுர்ணமிக்கு அடுத்த நிலையிலேயே ஆரம்பிப்பது இல்லை. பொட்டில் அடித்தாற்போல் சொல்வதாக இருந்தால்
பௌர்ணமிக்கு அடுத்த நாள் முழு நிலவு வானில் காணமல் போய் விடுவதில்லை.
பவுர்ணமிக்கு அடுத்த நாளில்
இருந்து நிலவு மெதுமெதுவாகத்தான் தேய்ந்து, 15
தினங்களில் அமாவாசை நிலையை அடைந்து,
முழுவதுமாக இருள் சந்திரனாகிறது. இந்த அமைப்பில் சந்திரனின் ஒளி படிப்படியாக குறைந்து
அதன் பாபத்துவத்தில் நுழைவதற்கு பஞ்சமி
தினத்திற்கு அதாவது பௌர்ணமிக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மேல் ஆகும்.
இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில், தேய்பிறையாக இருந்தாலும் பஞ்சமி திதி வரை சந்திரன் தன்னுடைய சுபத்துவத்தை முழுக்க இழக்க மாட்டார்
என்பதுதான். அதாவது
அவர் தேய்பிறைச் சந்திரன்தான். ஆனால் அவர் முழுமையான பாபர்
அல்ல. ஓரளவிற்கு அவரது ஒளிக்கு
சுபத்தன்மை இருக்கும்.
பாபத்துவத்தையும், சுபத்துவத்தையும்
முழுமையாகக் கணக்கிடத் தெரியும் பொழுதுதான்,
ஒருவருக்கு ஒரு கிரகம், அதனுடைய காரகத்துவங்களில்
சுப காரகத்துவங்களை செய்யுமா அல்லது பாப விஷயங்களைச் செய்யுமா என்பதை அறிய முடியும். அதேபோல
ஒரு வீட்டின் சுப
ஆதிபத்யம் நடக்குமா அல்லது பாப
ஆதிபத்தியம் நடக்குமா என்பதும் அந்த வீடு, அந்த வீட்டின் அதிபதி, அந்த வீட்டோடு தொடர்பு
கொண்ட கிரகங்களின் சுபத்துவம், பாபத்துவம், சூட்சும வலுக்களைப் பொருத்தது.
பாரம்பரிய ஜோதிட முறை
இந்தியாவில் உருவான அனைத்து ஜோதிட முறைகளுக்கும் தாய் போன்றது. பின்னாளில் வந்த ஜோதிடர்களால்
அறிமுகப்படுத்தப்பட்ட எத்தகைய முறையாயினும் அவை பாரம்பரிய ஜோதிடத்தினுள்
அடங்கியதுதான்.
உதாரணமாக சென்ற நூற்றாண்டின் மகாமேதை, ஜோதிட மார்த்தாண்டன், கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கேபி சிஸ்டம்
எனப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி மற்றும் அதன்பிறகு உருவான சார ஜோதிடம், நட்சத்திர ஜோதிடம் உள்ளிட்ட எத்தகைய முறைகளாக
இருந்தாலும், அவைகளின்
மூலமான துல்லியமான பதில் சொல்வதற்கும் நீங்கள் என்னுடைய சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டினை
நிச்சயமாக புரிந்துகொண்டாக வேண்டி
இருக்கும்.
ஜோதிடமே சுப, பாப ஒளியமைப்பின் கட்டமைப்பில்
உருவாக்கப்பட்டது என்பதாலும், இந்த சுப, பாப ஒளிநிலைகளே ஒரு மனிதனின் மனதை ஆக்கிரமித்து, அவனை இயக்குகின்றன என்பதாலும், தசா-புக்தி
வருடங்களே ஒளி மற்றும் ஈர்ப்பு விசையினை அடிப்படையாகக் கொண்டது
என்பதாலும், எப்போது
ஒரு ஜோதிடர், சுப, பாப மற்றும்
நான் சொல்லும் “பாபக் கிரகங்களின் சூட்சும வலுக் கோட்பாட்டினைப்” புரிந்து
கொள்கிறாரோ அப்போது மட்டுமே
ஜோதிடத்தின் எத்தகைய முறையாக இருப்பினும் துல்லியமான பலன் சொல்ல முடியும்.
இந்த காரணத்தினால்தான் சனி முழு பாபர், செவ்வாய் முக்கால் பாபர், சூரியன் அரைப் பாபர்,
தனித்திருக்கும் போது மட்டுமே புதன் சுபர்,
சந்திரனின் தேய்பிறை, வளர்பிறை நிலை போன்றவைகள் நமக்கு எடுத்துச் சொல்லப்பட்டன.
இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, பூரண அமாவாசை நிலையில் இருக்கும்போது சந்திரன் முழு பாபரான சனியின் தன்மையினைக் கொண்டிருப்பார் எனவும், அவர்
மெதுவாக வளர்ந்து அடுத்து முக்கால் பாபரும், கால்
சுபருமான செவ்வாயின் நிலையை அடைவார்
எனவும், அதன் பின்னர் பாதி சுபரான சூரியனின் நிலைக்கு வருவார் என்றும்,
பின்னர் 11 அல்லது 12ம்
நாளில் சுக்கிரனுக்குரிய சுப இயல்பை அடைந்து, இறுதி நிலையான பவுர்ணமி அன்று முழு சுபரான குருவின் நிலையை அடைவார் என்று கணக்கிட்டுக்
கொள்ள வேண்டும்.
இதையே
சந்திரனின் தேய்பிறை நிலையில் அப்படியே தலைகீழாக குருவில் ஆரம்பித்து சனியில் வந்து முடிக்க வேண்டும். இதுபோன்ற சூட்சும நிலை
அமைப்புகளை அடுத்து நான் தனியே எழுதும் சுபத்துவம், பாபத்துவம், சூட்சும வலுக் கட்டுரைகளில் டிகிரி வாயிலாக குறிப்பிட
இருக்கிறேன்.
ஒருவருக்கு கீழ்நிலைக் காமம்
அல்லது மேலான உன்னத காமம் இரண்டில் எப்படிப்பட்ட காமம் கிடைக்கும் என்பதைக்
குறிக்கும் ஏழாம் வீடு, இந்த சிறுவனின் ஜாதகத்தில் முழுக்க
முழுக்க இருள் கிரகங்களின்
ஆக்கிரமிப்பில் இருக்கிறது.
ஏழாம் வீடு
பலவீனமானாலே ஒருவருக்கு நீடித்த காமம் அல்லது
முறையான, தகுதியான காமம் கிடைக்காது. ஒருவர் ஒரே ஒரு வாழ்க்கைத் துணையோடு அல்லது வாழ்நாள் முழுக்க ஏகபத்தினி
விரதனாக, ஒரே உடல் உறவுத் துணையோடு வாழ்வதற்கு ஏழாம் வீடு
மற்றும் அதன் அதிபதி மிகுந்த சுபத்துவமாக இருக்க வேண்டும்.
நம்முடைய கலாச்சாரத்தின் அடிப்படையில் திருமணத்தின் நோக்கமே நீடித்த காமத்தின் அடிப்படையிலானது என்பதால்தான், ஏழாம் வீடு இருளடைந்து, ஏழாம்
அதிபதியும் பாபத்துவமாக இருக்கும்
நிலைகளில் ஒருவருக்கு திருமணம் ஆவதில்லை. அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கைத்துணை அமைகிறது.
காமத்தின்
வகை எப்படி இருக்கும் என்பதைக் குறிக்கும் பனிரெண்டாம் பாவகம், குரு, சுக்கிரன்
போன்ற சுபர்களின் பார்வையில் இருப்பதால் இந்தச் சிறுவனுக்கு இளம்
வயதிலேயே போக அமைப்புகள் கிடைத்தன. சனியும் இங்கு பன்னிரண்டாம் பாவகத்தைப் பார்ப்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் சில விளக்கங்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
/ஒரு வீடு முழுக்க முழுக்க சுபக்
ReplyDeleteகிரகங்களின் பார்வை, இருப்பு
போன்றவற்றை பெறும்போது,
தொடர்பினைத் தரும் சுபக் கிரகம்
தன்னுடைய ஒளியில் முழுமையாக
இருக்கும் பொழுது, அந்த வீட்டின்
ஆறுவிதமான நல்ல விஷயங்கள்
ஜாதகருக்கு நடைபெறும்.//
ஐயா 6ம் வீடு அதிக சுபத்துவம் பெற்றால் கடன் ,நோய், எதிரி போன்ற பாப காரகத்துவத்தை தராதா?