Warm Greetings to Guruji.
Your initiative and efforts to make
vague and abstract concepts of Astrology much simpler by bringing a new
dimension to it in the name of "Subathuvam and Sutchuma valu" (though
they were deciphered by our Great Astrologers centuries ago in an inexplicit manner)
is great. No doubt, it is a laudable effort you have undertaken, which rightly
brings you many laurals from all corners and everyone agrees that, you deserve
them.
Now, I have a query with respect to this video. Sir, I am sure that, no one can possibly have a second opinion about the knowledge of Dr. B.V. Raman and his contribution to Astrological science. We all know that, he has lived all his life serving the Astrological society and in his many articles and books (for eg. How to judge a horoscope), he has discussed in detail, the aspects of various planets in Navamsa for interpretation, justification and prediction.
To the followers of Dr. B.V. Raman,
your statement that, "planets do not have aspects in Navamsa chart"
comes as a huge shock. If this be true, most of his interpretations and
predictions would become invalid and would go haywire. Your statement is
contrary to and counters Dr. B.V. Raman's statements upfront.
Sir, do you not think that, your
statement of "No aspects for planets in Navamsa", need to be backed
by a very strong and a time-tested evidence/proof?. Kindly note that, this
query is only for fact finding and not for any criticism. Your reply would help
serve the readers and the followers of Dr. B.V. Raman to understand the actual picture
about all these. I know that, this query has become too long, but the point is
simple.
Awaiting your reply, Warm regards,.
Dr. K.B. Nagashanmugam, from Damascus, Syria.
மதிப்பிற்குரிய
திரு. டாக்டர். நாகஷண்முகம்,
ஆங்கில
அறிவு பெரிதாக இல்லாத எளிய ஜோதிடனாகிய நான்,
"நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை
இல்லை எனும் எனது எழுத்துக்கள் மற்றும் வீடியோக்கள் டாக்டர் பி.வி. ராமன்
அவர்களின் அனைத்துக் கணிப்புகளையும், கருத்துக்களையும் பொய்யாக்கும்" என்பதாக உங்களின் இந்தக் கமெண்டைப்
புரிந்து கொண்டிருக்கிறேன்.
ஆங்கிலம்
தெரியாத காரணத்தினால், நான் டாக்டர். பி. வி.
ராமன் அவர்களின் நூல்களைப் படித்ததில்லை. நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை
இருக்கிறது என்று சொல்பவர்கள் ஜோதிடத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். அப்படி
பார்வை இருக்கிறது என்று திரு. டாக்டர் பி. வி. ராமன் எழுதியிருந்தால் அது
நிச்சயம் தவறு.
உண்மையில்
ராசிச் சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான
தோற்றம். நவாம்சம் என்பது அதனுடைய நிழல்தான். ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும்
சுப, அசுப
வர்க்கங்களைக் கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்லப்பட்டது. அதில் கிரகங்களுக்கு பார்வை
இல்லை. மறைவு ஸ்தானங்களும் இல்லை.
ராசிச்
சக்கரம் எனும் உண்மை நிலையில் மட்டுமே கிரகங்களுக்குப் பார்வை உண்டு. நவாம்சம்
என்பது ராசிச் சக்கரத்தை ஒன்பதின் மடங்கில் பிரித்து எந்தக் கிரகம் எங்கே, எந்த துல்லிய நிலையில் சுபத்துவ, பாபத்துவ அமைப்பில் இருக்கிறது என்று
பார்க்க மட்டுமே.
நவாம்சத்திலும்
பார்வை இருக்கிறது என்பதை இன்னும் கொஞ்சம் நீட்டித்து திரேக்காணம், சஷ்டியாம்சம், தசாம்சம், ஷோடசாம்சத்திலும் பார்வை உண்டு என்று
போய்க் கொண்டே இருப்போமா? நிஜத்திற்கு இருக்கும் பார்வை நிழலுக்கும் உண்டு என்பது அறிவீனம். கொஞ்சம்
ஆழமாக யோசித்தால் உண்மை புரியும்.
எனது
கருத்துக்கு ஆதாரம் கேட்டிருக்கிறீர்கள். ஜோதிடத்திற்கு ஜோதிடமே ஆதாரம் திரு.
நாகஷண்முகம். விரைவில் இதுபற்றியும் விளக்கமாக எழுதுகிறேன்.
ஜோதிடம்
மட்டுமே என்றும் நிலையானது. நான் உட்பட எந்த ஒரு ஜோதிடரும் நிரந்தரமானவர்கள்
இல்லை. எனது எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் பொழுது எது உண்மை என ஜோதிடத்தில்
ஆர்வமுள்ள மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள்.
உண்மை
ஜோதிடம் கை வர வாழ்த்துகிறேன் டாக்டர்....
அன்புடன்,
ஆதித்ய குருஜி.
மேலே உள்ளது சிரியா தலைநகர், டமாஸ்கஸில் இருந்து திரு. டாக்டர். நாகசண்முகம் என்பவரால் சில வாரங்களுக்கு முன் சமூக வலைத்தளமான யூடியூப்பில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எனது பதில்
ஆகும்.
நவாம்சத்தின் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றி ஜோதிடர்களிடையே பல்வேறு விதமான
அபிப்பிராயங்கள் இருக்கின்றன. ராசியில் கிரகங்களுக்கு உள்ள பார்வை, நவாம்சத்திலும் உள்ளதா? நவாம்சக் கட்டத்தில் உச்சம், நீச்சம், எனும் ஸ்தான பலம், ஆறு, எட்டு போன்ற மறைவு ஸ்தானங்கள் உள்ளதா? நவாம்ச லக்னம் என்பது என்ன என்பதில் கருத்து பேதங்கள், குழப்பங்கள் உள்ளன.
நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச்
சக்கரங்கள் என்பது கிரகங்கள் வான்வெளியில் இருக்கும் துல்லிய நிலையை கணிப்பதற்காக சொல்லப்பட்டவை. பூமியைச் சுற்றி 360 டிகிரி அளவில் வியாபித்திருக்கும் இந்த பரந்த
வான்வெளியில் ஒரு ராசி என்பது முப்பது
டிகிரியை தன்னகத்தே கொண்ட ஒரு பகுதியாகும். இந்த முப்பது டிகிரிக்குள்ளும் கிரகங்கள் எங்கே, எந்த இடத்தில், எந்த நிலையில் இருக்கின்றன என்பதை மிகச் சரியாகக் கணக்கிட முந்தைய ஜோதிடமேதைகள் வர்க்கச் சக்கரங்களை அறிந்தார்கள்.
30 டிகிரி
கொண்ட ஒரு ராசி வீட்டினை, மேம்பட்ட கணித முறைப்படி நீங்கள் 300 பங்காகக் கூடப் பிரிக்க முடியும். அவ்வாறு பிரித்துக் கொண்டே உள்ளே செல்லும்போது இந்த பரந்த வான்வெளியில், ஜாதகர் பிறக்கும்போது ஒரு கிரகம் எந்த இடத்தில், என்ன நிலையில் இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.
ஒரு ராசியை தலா 15 டிகிரி அளவாகக் கொண்டு, இரண்டு சமமான பங்குகளாக்கி ஒரு கிரகத்தின் நிலை அறிவது ஹோரா சக்கரம்
எனப்பட்டது. தலா பத்து டிகிரி அளவாக மூன்று
பகுதிகளாகப் பிரித்து கிரகநிலை அறிவது திரேக்காணம் எனப்பட்டது. 7 பங்கு சம அளவாக பிரிப்பது சப்தாம்சம்
எனவும், 10 பங்காக பிரித்து பலன் அறிவது தசாம்சம்
எனவும் சொல்லப்பட்டது.
ஒரு ராசியை இவ்வாறு பிரிப்பது
வர்க்கச் சக்கரங்கள் எனப்பட்டன. அனைத்து வர்க்கச் சக்கரங்களிலும் ராசியை ஒன்பது பங்காகப் பிரிக்கும்
நவாம்சம் மட்டும் முதன்மையாக கருதப்படுவதற்கு காரணம், ஜோதிடமே இந்த மந்திர எண்ணான ஒன்பதின் அடிப்படையில் அமைந்தது
என்பதானால்தான். நவாம்சத்தின் ஒட்டுமொத்த நட்சத்திர பாதங்களும் 108 என்பதும் இதனை நிரூபிக்கும்.
அனைத்து வர்க்க சக்கரங்களையும் விட, ராசிக்கு அருகில் பதியப்படும் வர்க்கச் சக்கரமாக
நவாம்சம் மட்டுமே உள்ளதே அதன் முக்கியத்துவத்தை
உணர்த்தும்.
சம்ஸ்க்ருதத்தில் நவம்
எனப்படும், எண் ஒன்பது என்பது, கணிதத்திலும், ஜோதிடத்திலும் மிக மிக முக்கியமான ஒரு எண்ணாகும். ஒன்பதுடன், ஒன்பதைச் சேர்க்க அது ஒன்பதாகவே இருக்கும் என்பது, ஒன்பதாம் எண்ணிற்கு மட்டுமே உள்ள சிறப்பு. மற்ற எந்த எண்ணிற்கும் இந்தச் சிறப்பு
இல்லை. இதனை “ஒன்றுடன்
ஒன்றை இணைக்க, அந்த
மூல ஒன்றாகவே அது இருக்கிறது” என்று கூடச்
சொல்லலாம்.
மூலத்தினை முற்றிலும்
மாற்றாமல், வேறு ஒரு வடிவமாக்கி அப்படியே தரும்
ஒரு எண்ணாக ஒன்பது இருப்பதால்தான், இந்த ஒன்பதுக்குள் ஏகப்பட்ட மர்மங்கள், ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன என்பதன்
அடிப்படையில், எண்களில் ஒன்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நவாம்சத்தின் முக்கியத்துவம்
என்னவென்று பார்க்கப்போனால், ராசிக்கட்டம்
என்பது ஒன்பது கிரகங்களும் அமர்ந்திருக்கும் 27 நட்சத்திரங்களின் தலா 4
பாதங்கள் உள்ளிட்ட மொத்தம் 108 பாதங்களை அளவாக
கொண்டது. அதாவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12
ராசிகளுக்குள் அடங்கி
இருக்கும் பாதங்களை மொத்தமாக கணக்கிட்டால் அவை 108 ஆக வரும்.
ஒரு நட்சத்திரத்தை நான்கு பிரிவுகளாக்கி, அவற்றைப் பாதங்கள் என்று சொல்லி ஒரு நட்சத்திரத்தின் அளவையும்,
இருப்பையும் சற்றுச் சுருக்கி இன்னும்
துல்லியமாக்கப் பட்டதே
இந்த பாதங்கள் என்பவை.
இந்த 108 பாதங்கள்
எனப்படும் ஒரு விண்மீனின் சுருக்கப்பட்ட பகுதிகள், நவாம்ச சக்கரத்தில், மேஷத்தின் ஆரம்ப முனையில்
அஸ்வினியின் முதல் பாதமாக ஆரம்பித்து, இரண்டாவது பாதம் ரிஷபத்திலும், மூன்றாவது
மிதுனம், நான்காவது கடகத்தில் முடிந்து, அடுத்த பரணி நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்மத்தில்
நீட்டித்து, ஒன்பது சுற்றுக்களாக வளையங்கள் போன்று ஒன்பது முறை சுற்றி, இறுதி நட்சத்திரமான
ரேவதியின் கடைசிப் பாதம் நிறைவு வீடான மீனத்தின் இறுதிப் பகுதியில் முடியும்.
நவாம்ச சக்கரத்தில் ஒன்பது முறை சுற்றி வரும், ஒன்பது முழுச் சுற்றுகள் கொண்ட 108
பாதங்களில், ஒரு
கிரகம் சுபத்துவமாக அல்லது பாபத்துவமாக எந்த
நிலையில், எங்கே அமர்ந்திருக்கிறது என்பதை அறியலாம். அந்தக் கிரகம் நவாம்சத்தில் குரு, சுக்கிர வீடுகளில் இருக்கிறதா அல்லது
சனி, செவ்வாய் வீடுகளில் இருக்கிறதா என்பதை வைத்து அந்த
ஜாதகருக்கு நடக்கும் நன்மை, தீமைகளை அறிய முடியும். சுப வர்க்கம் எனப்படும் இதுவே நவாம்சத்தின் சிறப்பு.
இதற்காக மட்டும்தான் ராசியின் அருகில் நவாம்சமும் குறிக்கப்படுகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய
மேதையான வைத்தியநாத தீட்சிதர் அவர்கள் தனது “ஜாதக பாரிஜாதம்” நூலில்
சொன்ன புஷ்கர நவாம்சம் என்பதும் இதனை
அடிப்படையாகக் கொண்டதுதான். இதனைத் தவிர்த்து நவாம்சத்தில் வேறு முக்கிய சிறப்புக்கள்
கிடையாது.
வர்க்கச் சக்கரங்கள் என்பதே ஒரு கிரகத்தின் சுப, அசுப நிலைகளை கணக்கிடுவதற்காக, அதாவது அந்தக் கிரகத்திற்கு கிடைக்கும்
சுப வர்க்கம், பாப வர்க்கம் என்பதைக் கணிக்க மட்டும் சொல்லப்பட்டவைதான். ராசியில் ஏற்படும் பார்வை போன்ற நிலை வர்க்கச்
சக்கரங்களிலும் நீடிக்கும் என்பது
பொருத்தமற்றது.
ராசிக்
கட்டம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம்.
கிரகங்களின் பார்வை, இருப்பு, உச்சம், நீச்சம், மறைவு ஸ்தானங்கள் அனைத்தையும் ராசியில் உள்ள லக்னப்படி
மட்டுமே கணக்கிட வேண்டும். நவாம்சத்திலும் லக்னத்தைக்
கணக்கிட்டு, நவாம்ச லக்கினத்தில்
இருந்து ஆறில் அந்தக் கிரகம்
மறைந்திருக்கிறது என்று சொல்வது மகா தவறு. நவாம்சத்தில் மறைவு ஸ்தானங்கள்
இல்லை.
அதேபோல ஒரு
கிரகத்தின் பார்வை என்பதையும் ராசிக்கட்டத்தில்
மட்டுமே கொள்ள வேண்டும். நவாம்சத்தில் கிரகங்களுக்குப் பார்வைகள் இல்லை. நவாம்சத்தை விடுங்கள்.
துரதிர்ஷ்டவசமாக, ராசியில் உள்ள
கிரக பார்வைகளையே சரியாகப் புரிந்து கொள்ளாத
ஜோதிடர்களும் இங்கே இருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜோதிட
இதழில், ஒரு பிரபல ஜோதிடர், “ஜாதகத்தில் 6, 8, 12 ல் மறைந்த கிரகங்களுக்கு பார்வை கிடையாது” என்று எழுதியிருந்தார்.
நான் அவரிடம், “ஜாதகம் என்பது குழந்தை பிறக்கும்
நேரத்தில் இருந்த கிரகங்களின்
கோட்சார நிலை. அதில் லக்னம் என்பது குழந்தை பிறந்த பிறகே உருவாகிறது. லக்னம் எனும்
ஒன்றாம் எண்ணை வைத்துத்தான், ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களைச் சொல்கிறோம். நிஜ
வானில் ஆதிபத்தியங்கள் எனப்படும் ஸ்தானங்கள் இல்லை. லக்னம் உருவான பிறகே, கேந்திர, கோண, மறைவு ஸ்தானங்கள் வருகின்றன.
அதற்கு முன் அங்கே கிரகங்களின் நிஜ நிலைகள் மட்டும்தான்.
இன்றைய கோட்சார நிலையில், குரு விருச்சிகத்தில் இருக்கிறார்.
அவர் மீனம், ரிஷபம், கடகம் ஆகிய மூன்று ராசிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது
மாறவே மாறாத ஒரு ஜோதிட உண்மை.
எந்த ஒரு நிலையிலும் இன்று விருச்சிகத்தில் இருக்கும் குரு, வானத்தில் மீனம், ரிஷபம், கடகம்
ஆகிய ராசிகளை பார்த்துக் கொண்டிருப்பார். குரு பார்க்கிறாரா,
இல்லையா?” என்று கேட்டேன்.
அந்த ஜோதிடரும் “கண்டிப்பாக இன்று
குரு, மேற்சொன்ன மூன்று ராசிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று பதில் சொன்னார்.
“அப்படியானால், இன்று மேஷ,
மிதுன, தனுசு லக்னத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் அவர் 6, 8, 12 ல்
மறைவதால் கண்களை மூடிக் கொள்வாரா?” என்று கேட்டேன். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. போனை வைத்து விட்டார்.
இவருடைய இந்தக் கட்டுரைகள் புத்தகமாகவும்
வந்திருக்கிறது. இவரும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிட முன்னோர் ஆகிவிடுவார்.
அவரது இந்தக் கருத்துக் கொண்ட அந்தப் புத்தகமும் ஒரு மூலநூல் ஆகிவிடும். இந்த முட்டாள்தனமான
கருத்தையும், ஒரு ஞானம் குறைவான ஜோதிடர் படித்து விட்டு இன்னொருவரிடம், “நூலாக வந்து
விட்டதாலேயே அது புனிதம்” என்பதாக, இது சரிதான் என்று வாதிடுவார்.
இதைப்போலத்தான் கடந்த ஐம்பது
ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையற்ற, ஞானமில்லாத, முட்டாள்தனமான ஜோதிடநூல்கள் ஏராளமாக வெளி
வந்திருக்கின்றன. இதனால் ஜோதிடரும், ஜோதிடமும் திசை மாறிப் போனதுதான் மிச்சம்.
தன்னைப் பற்றிய மிகை மதிப்பீடு
கொண்ட ஜோதிடர்களாலும், அல்லது தனக்கு முன் இருந்தவர்கள் சொன்னதை ஆராயாமல் ஏற்றுக் கொண்டு, இதுபோன்ற
அர்த்தமும், ஆழமுமற்ற
விளக்கங்களை சொல்பவர்களாலும்தான்
ஜோதிடம் மதிப்பிழந்து போகிறது.
நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை இருக்கிறது
என்பதும் இது போன்ற ஒரு வகைதான். நவாம்சத்தில் கிரகங்களுக்கு பார்வை இருக்கிறது எனக்
கொண்டால் மற்ற வர்க்கச் சக்கரங்கள் அனைத்திலும் கிரகங்களுக்கு பார்வை இருக்கிறது என்று
எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் ராசியில் கடகத்தில்
இருக்கும் குரு, விருச்சிக, மகர, மீனத்தைப் பார்க்கிறார்
என்றால், அம்சத்தில் அவர் மகரத்தில் இருக்கும்போது ரிஷப, கடக, கன்னியைப் பார்க்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியே
திரேக்காணம், தசாம்சம், சதுர்த்தாம்சம்
போன்ற அத்தனை வர்க்கச் சக்கரங்களிலும்
குருவின் பார்வையைக்
கணக்கிட்டு ஒட்டு மொத்தமாக குரு, 12 ராசிகளையும்
பார்க்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
படிப்பதற்கு இது எத்தனை அபத்தமாக இருக்கிறதோ, அது போன்றதுதான் நவாம்சத்தில் ஒரு கிரகத்திற்குப் பார்வை
இருக்கிறது என்பதும்.
சரி... நவாம்சத்தில் எது
முக்கியம்?
அடுத்த அத்தியாயத்தில்
பார்க்கலாம்.
.jpeg)
Super Guruji Sir, Thank You.
ReplyDeleteகுருஜி அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteபொதுவாக ஒரு பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். அதனை சுபர் பார்த்தாலோ
அல்லது எட்டாம் வீடு அதிபதி சுபருடன் இருந்தாலோ சுமங்கலியாக இருப்பாள் என்ற கூற்று இங்கே அடி
பட்டு போகிறதே. தசை நாதன் மாரகாதிபதி ஆனாலும் பெரும் கோணமான 9ம் பாவத்திற்கும் அவரே அதிபதி ஆயிற்றே. அப்படி இருக்க இந்த அவல நிலைக்கு இந்த பெண்ணின் ஜாதகம் தவிர குழந்தை மற்றும் இறந்தவர் அவர் இறந்த கரணம் ஆகியவற்றை விளக்கி கூறினால் பொருத்தமாக இருக்கும்.
நான்கு ராசிகள் திதி சூன்யம் பெற்றுள்ளது. புதனும் குருவும் திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் . இங்கே அதனால் குரு கேடு பலன்களை செய்தார் என்று எடுத்து கொள்ளலாமா? தயவு கூர்ந்து விளக்கவும்.
நன்றி
GOOD
ReplyDeleteGOOD
ReplyDeleteM L G