ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
எம். ராஜு, எஸ். புதுப்பட்டி.
கேள்வி.
இளையவனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்டான். மூத்தவனுக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எவ்வளவோ முயற்சித்தும் திருமணம் செய்து வைக்க என்னால் முடியவில்லை. நிம்மதி இழந்து விட்டேன். என் கடமை எப்பொழுது நிறைவேறும்? இவனுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா?
பதில்.
(சிம்ம லக்னம், மேஷ ராசி, 3ல் கேது, 4ல் சனி, 6ல் குரு, 7ல் சூரி, புத, 8ல் சுக், செவ், 9ல் சந், ராகு, 24-2-1985 மாலை 6-5 மதுரை)
திருமணம் என்பதே குழந்தை பிறப்பிற்காக செய்யப்படுவது என்பதால் கடுமையான புத்திரதோஷம் இருக்கும் ஒருவருக்கு தாமதமாக திருமணம் நடக்கும் அல்லது திருமண பாக்கியமே இருக்காது.
மகனுக்கு சிம்ம லக்னமாகி, லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு ஏழில் ராகு, எட்டில் சனி என்ற அமைப்பு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. அதைவிட மேலாக புத்திர ஸ்தானாதிபதியும் காரகனுமாகிய குரு, ஆறில் மறைந்து சனியின் பார்வையை வாங்கியிருப்பது கடுமையான புத்திர தோஷம். மகனை ஒரு முறை ஸ்ரீகாளகஸ்தி கூட்டிச்சென்று முதல் நாள் இரவே தங்கி ருத்ராபிஷேகம் செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.
வீ. பலராமன், க. பல்லாவரம்
கேள்வி.
என் மகன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கலெக்டர் ஆக வேண்டும் என்பது அவன் தாயின் ஆசை. அவன் தாய் இப்போது காலமாகிவிட்டார். தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நான்கு முறை ஐஏஎஸ் தேர்வு எழுதியும் அவன் தேர்ச்சி பெறவில்லை. அடுத்த வருடம் தேர்ச்சி பெற்று கலெக்டர் ஆவாரா?
பதில்.
(மிதுன லக்னம், துலாம் ராசி, 1ல் புத, 2ல் சூரி, 3-ல் கேது, 5ல் சந், 7ல் சனி, 9ல் ராகு, 10ல் செவ், 12ல் சுக், குரு, 23-7-1988 அதிகாலை 4-55 சென்னை)
எல்லா அம்மாக்களுக்கும் தன் மகன் கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறது. ஆனால் யாரோ ஒருவர்தான் கலெக்டரின் அம்மாவாக இருக்கிறார். தாயின் ஆசையை விட தனக்கே கலெக்டர் ஆகவேண்டும் என்ற வெறி உண்டாகி படித்தவர்கள் மட்டும்தான் இங்கே கலெக்டர் ஆகியிருக்கிறார்கள். ஐஏஎஸ் போன்ற அதி உயர் அரச பதவிகளைப் பெற ஒருவரது ஜாதகத்தில் சிம்மம் வலுவாகி, சூரியன் மிகுந்த சுபத்துவத்துடன் இருக்க வேண்டும்.
உங்கள் மகனுக்கு சிம்மத்தில் கேது அமர்ந்திருக்கிறார். சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் அமர்ந்து, ராசிக்கு பத்தாமிடத்தை சூரியன் பார்த்து, லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் இருப்பதாலும், தற்போது லக்னாதிபதியின் தசை நடந்து கொண்டிருப்பதாலும் மாநில அரசு வேலைக்கு தேர்வு எழுதச் சொல்லுங்கள்.
ஏ. பவித்ரா, கோவை-1
கேள்வி.
ஜோதிட மகாசக்திக்கு வணக்கம். எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது. ஆண் வாரிசு வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாக உள்ளது. இதற்காக பல விரதங்களை கடைப்பிடிக்கிறேன். கோவில்களுக்கும் சென்று வருகிறேன். எனக்கு ஆண்வாரிசு உறுதியாக கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? இரு மகள்களின் ஜாதகப்படி அவர்களுக்கு சகோதரன் உண்டா?
பதில்.
(கணவன் 24-12-1985, காலை 7-30, மேட்டூர், மனைவி. 30-6-1994, அதிகாலை 3-42, ஈரோடு)
கணவனுக்கு தனுசு லக்னமாகி, ஐந்தில் ராகு அமர்ந்து, புத்திரகாரகனும், லக்னாதிபதியுமான குரு நீசமாகி, சனியின் பார்வையையும் பெற்றிருந்தாலும் அம்சத்தில் குரு உச்சம் அடைந்திருக்கிறார், 5க்குடைய செவ்வாயும் ஆண் கிரகமாகி, கேதுவுடன் இணைந்து சூட்சும வலுப் பெற்று, ஐந்தாம் இடத்தைப் பார்க்கிறார்.
உன்னுடைய ஜாதகத்திலும் ஆண்குழந்தையை தரக்கூடிய புத்திர காரகனாகிய குரு ஆறில் மறைந்து, ராகுவுடன் இணைந்து வலுவிழந்திருப்பது போலத் தோன்றினாலும், குருவிற்கும் ராகுவிற்கும் இடையே 16 டிகிரி தூரம் இருக்கிறது. உன்னுடைய ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி ஆட்சி, ஐந்தாமிடத்திற்கு சந்திரனின் பார்வை என புத்திர ஸ்தானம் சுபத்துவமாகி இருக்கிறது.
உங்கள் இருவரின் ஜாதக அமைப்பு அதிகம் பெண் குழந்தைகள், ஒரு ஆண் வாரிசு என்பதைக் குறிக்கிறது. உன்னுடைய குழந்தைகளின் ஜாதகப்படியும் மூத்தவளின் அமைப்புப்படி மேஷலக்னமாகி, மூன்று, ஒன்பதாமிடங்களில் குரு, புதன் பரிவர்த்தனையாகி இருப்பதும், இளையவளின் ஜாதகப்படி மூன்றாம் இடத்தை ஆட்சி பெற்ற குரு பார்ப்பதும், இவர்கள் இருவருக்கும் ஒரு சகோதரன் உண்டு என்பதை உறுதியாக்குகிறது.
ஆயினும் இன்னும் இரண்டு வருடத்திற்கு உனக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை. உன்னுடைய ஜாதகப்படி புதன்தசை, ராகு புக்தியில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகுதான் ஆண் குழந்தை பிறக்கும். அதுவரை பொறுத்திருக்கவும். வாழ்த்துக்கள்.
Husband 07.05.1990 evening 5:30pm,Wife 31-12-1995 morning 8:00.My wife is pregnant now.There is chances for male child
ReplyDeleteஜோதிட மகாசக்திக்கு வணக்கம். எனக்கு ஓரு பெண் குழந்தை உள்ளது.ஆண் வாரிசு வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாக உள்ளது கோவில்களுக்கும் சென்று வருகிறேன். எனக்கு ஆண்வாரிசு உறுதியாக கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மகள்களின் ஜாதகப்படி அவர்களுக்கு சகோதரன் உண்டா? கணவர் 10/09/1989
ReplyDeleteமனைவி 24/06/1990 மாலை 6.47
பொண்ணு குழந்தை 27/07/218 மதியம் 2.30
ஜோதிட மகாசக்திக்கு வணக்கம். எனக்கு ஓரு பெண் குழந்தை உள்ளது.ஆண் வாரிசு வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாக உள்ளது கோவில்களுக்கும் சென்று வருகிறேன். எனக்கு ஆண்வாரிசு உறுதியாக கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? மகள்களின் ஜாதகப்படி அவர்களுக்கு சகோதரன் உண்டா? கணவர் 10/09/1989
ReplyDeleteமனைவி 24/06/1990 மாலை 6.47
பொண்ணு குழந்தை 27/07/218 மதியம் 2.30
This comment has been removed by the author.
ReplyDelete