ஜோதிடம் எனும்
மனிதனின் எதிர்காலம் சொல்லும் இந்த மாபெரும் கலையின், ஆரம்பப் புள்ளி அந்த மனிதனின் ஜாதகத்தில் லக்னம் எனும் முதல் பாவகத்தில் ஆரம்பிக்கிறது.
எதற்கும் ஒரு தொடக்கம்
என்பது உண்டு என்பதன் அடிப்படையிலும், நல்ல
துவக்கம் என்பது பாதி சுப முடிவைக் குறிக்கும் என்பதனாலும், பிறக்கும்போதே ஜோதிடப்படி எவர் ஒருவரின்
லக்னம் சுபத்துவமாக அமைகிறதோ, அந்த மனிதனின் வாழ்க்கை ஆரம்பம் முதல் இறுதிவரை சுகமாகவே அமைகிறது. இதில் லக்ன சுபத்துவ கூடுதல்,
குறைவு படிநிலைகளைப் பொறுத்து அவருடைய வாழ்க்கையின் சொகுசு நிலைகள் அமையும்.
லக்னம் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபக் கிரகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அல்லது லக்னத்தை பாபக் கிரகங்கள் தொடர்பு கொண்டு, லக்னாதிபதியும் பாபர்களின் தாக்குதலுக்கு ஆளாகி பலவீனப்பட்டு இருக்கும் நிலையில் பிறக்கும் ஒரு ஜீவன் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு வகையில் கஷ்டப்படுகிறது.
முதலாம் பாவகம் எனப்படும் லக்னமும், அதனுடைய லக்ன
புள்ளியுமே, ஜோதிடத்தில்
அனைத்திற்கும் ஆதாரமான
ஆதி விஷயமாக இருக்கும். லக்னமும், லக்னாதிபதியும் சுபத்துவமாகி, லக்னாதிபதி பாபக் கிரகமாக
இருப்பின் சூட்சும வலுப்பெற்று அமைந்த
ஒருவர், ஏனைய சில
பாவகங்கள் வலுவிழந்து இருந்தாலும், ஏதேனும் ஒரு நிலையில் சிறப்பானவராகவே இருப்பார்.
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கை ஜோதிடத்தில் பனிரெண்டு பாவகங்களாகப் பிரிக்கப்படுகிறது. இதில்
முதலாம் பாவகம்
எனப்படும் லக்னம், உங்களுடைய
உயிர், உடல், மனம், ஆயுள், உங்களை வழிநடத்தும் எண்ணங்கள்
உள்ளிட்ட உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பிரதிபலிக்கும்.
லக்னத்தின் அடுத்த பகுதியான இரண்டாம்
பாவகம், உங்களுடைய
நிதிநிலைமை மற்றும் உங்களின் குடும்பத்தைப் பற்றியும், அதனையொட்டிய மூன்றாம்
பாவகம் உங்களின்
செயல்திறன், முடிவெடுக்கும்
தன்மை, மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும்
நற்பெயர் அல்லது கெட்ட பெயர் ஆகியவற்றை சுட்டிக்
காட்டும்.
நான்காம் பாவகம் உங்களது வீடு,
வாகன, கல்வி அமைப்பையும், ஐந்தாம் பகுதி பரம்பொருளின்
அருளினால் முயற்சியின்றி அதிர்ஷ்டத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளையும், ஆறாம் பாவகம் உங்களது வேலை, கடன், நோய்,
எதிரி போன்றவைகளையும் காட்டும்.
ஏழாம் பாவகம் உங்களுடைய வாழ்க்கைத்துணை, அந்தரங்க ஆசைகள், உடலுறவு நாட்டங்கள், உடன் இருப்பவர்களையும், எட்டாம் பாவகம் எத்தனை காலம்
நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், எங்கே
இருப்பீர்கள், வாழ்வின் மிக
முக்கிய பகுதியில் திடீரென ஏதாவது அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்குமா
என்பதையும் சொல்லும்.
ஒன்பதாம் பாவகம் அதிர்ஷ்டம் வந்தாலும் அதை நீங்கள் அனுபவிப்பீர்களா? அல்லது உங்களது அடுத்த தலைமுறைக்கு
அந்த செல்வத்தை விட்டுச் செல்வீர்களா? நீங்கள் கஞ்சனா, செலவாளியா என்பதையும், பத்தாம் வீடு தொழில் செய்வீர்களா, அதில் சாதிப்பீர்களா, தொழிலில் பத்தோடு பதினொன்றுதானா அல்லது தனித்துத் தெரிவீர்களா
என்பதையும் அறிவிக்கும்.
பதினொன்றாம் வீடு வேலை, தொழில் மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவு, வழக்கு, போட்டி
ஆகியவற்றில் கிடைக்கும் வெற்றி, தோல்வி, உங்களின் நோய் குணப்படும்
தன்மை போன்றவைகளையும்,
இறுதி பாவகமான பன்னிரண்டாம் பகுதி உங்கள்
வாழ்வின் இறுதிப் பகுதி எவ்வாறு இருக்கும்,
ஒரு நாளின் இறுதி நிலையான தினசரி இரவு உங்களுக்கு நிம்மதியாக இருக்குமா இல்லையா, எதையும் விரையம் செய்வீர்களா என்பதையும், வெளிதேச வாசம் மற்றும் உங்களின்
அந்திம காலம் தொந்தரவின்றி இருக்குமா என்பதையும் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் லக்னப் புள்ளியில் குழந்தையாகத் தொடங்கும்
அவனது வாழ்க்கை, பன்னிரண்டாம் வீட்டின் இறுதி
புள்ளியில், அவன் அற்பாயுளில் இளைஞனாகவோ, நடுத்தர வயதிலோ அல்லது தீர்க்காயுள் நிலையில் முதுபெரும் பருவத்தில் இறக்கும் வரையிலான அத்தனை
நிலைகளையும் மிகத் துல்லியமாக
சுட்டிக்காட்டி ஒரு
வளையம் போல நிறைவுறும்.
ராசிகள் எனப்படும் இந்த
காலச்சக்கரத்தின் பனிரெண்டு பிரிவுகளே
ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இதில் பாபக் கிரகங்கள் எனப்படும் சனி, செவ்வாய், ராகு-கேதுக்கள் தங்களுடைய இருள் தன்மையை எந்த பாகத்தின் மீது அதிகமாக
செலுத்துகின்றனவோ, அந்த பாவகத்தின் தன்மை நலிந்து,
அந்த வீட்டின் நன்மை, தீமைகள் ஜாதகருக்கு முறையாகக்
கிடைப்பதில்லை.
சுப கிரகங்கள் எனப்படும் குரு, சுக்கிரன்,
வளர்பிறைச் சந்திரன்,
தனித்த புதன் ஆகியோர் எந்த வீட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அந்த வீட்டின் நன்மை, தீமைகள் அந்த மனிதனின் மேல் ஆதிக்கத்தை செலுத்தி, ஆதிபத்தியம் எனப்படும் அந்த வீட்டின் தன்மையை குறைவின்றி தந்து அந்த
மனிதனின் நல்ல, கெட்ட
வாழ்க்கையைத்
தீர்மானிக்கின்றன.
ஒரு மனிதன் பிறக்கும்போது குரு, சுக்கிரன்,
புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு ஒளித்திறனுடன் இருந்து தங்களது பார்வை அல்லது இணைவு எனும்
ஆதிக்கத்தை சனி, செவ்வாய், ராகு-கேதுக்களின்
மீது செலுத்தும் போது மேற்கண்ட பாபக் கிரகங்கள்
தங்களின் கெடுதல் தரும் தன்மைகளை இழந்து, காரக நன்மைகளை
தனது தசா, புக்தி வருடங்களில் தருகின்றன. பாபர்கள் லக்ன
சுபராகவும் இருக்கும் பட்சத்தில் நன்மைகள் கூடுதலாக அமைகின்றன.
சனி, செவ்வாய்
நன்மைகளைச் செய்வது இதுபோன்ற ஒரு நிலையில்தான். எந்த ஒரு நிலையிலும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள்
தனித்து ஆட்சியாகவோ, உச்சமாகவோ
இருக்கும் நிலையில் சுபத் தன்மைகளை
தருவதில்லை.
|
செவ் |
சந் |
ராகு |
|
|
சூரி |
12/13-3-2019 பகல்
மணி 3 முதல் 4 க்குள் |
ல |
|
|
சுக் |
|
||
|
சனி,கேது |
குரு |
|
|
இதுவரை பிறந்து விட்ட ஜாதகங்களை உதாரணமாக
காட்டிய நான், இப்போது ஒரு வித்தியாசமாக லக்னத்தின் அதி முக்கியத்துவத்தை உணர்த்த, இனி பிறக்க இருக்கும் ஒரு ஜாதகத்தை உதாரணமாகக் காட்ட இருக்கிறேன். (இந்தக் கட்டுரை 2019 மார்ச் முதல் வாரத்தில் எழுதப் பட்டது.)
கீழ்காணும் உன்னத கிரக நிலை
வரும் 12, 13ம் தேதிகளில் அமைகிறது. மேற்கண்ட நாட்களில்
பிறக்கப்போகும் ஒரு குழந்தை, ஒரு
துறையில் உச்சத்தைத் தொடும்.
சிசேரியனுக்கு நாள் குறிக்க என்னைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்ட
நிலையில், கீழ்காணும் நேரத்தையே இந்த மார்ச் மாதம் பிறக்க இருக்கும் குழந்தைகளுக்காக நான் கொடுத்திருக்கிறேன். லக்னத்தின் தனித்துவத்தை உணர்த்துவதாகவும் கீழ்க்காணும் விளக்கம் அமையும்.
அடுத்த வாரம் பிறக்கப்போகும் ஒரு எதிர்காலக் குழந்தையின்
இந்த ஜாதகத்தில், கடகம்
லக்னமாகி, லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை நிலையில், சூரியனுக்கு கேந்திரத்தில்
பன்னிரண்டாம் தேதி உச்சமாகவும். மறுநாள் மூலத் திரிகோண அமைப்பிலும் சுபத்துவமாக இருக்கிறார்.
லக்னத்தை பங்கப்படாத
தனித்த குரு, தனது 9-ஆம்
பார்வையாகவும், எவருடனும்
சேராத சுக்கிரன் தனது ஏழாம் பார்வையாகவும்,
ராஜயோகாதிபதி செவ்வாய் தனது பத்தாம் பார்வையாகவும் பார்க்கிறார்கள். இதில் குருவும், சுக்கிரனும் நட்பு நிலையில் அமர்ந்து, செவ்வாய் ஆட்சி அமைப்பிலிருந்து
பார்ப்பதால் லக்னம் மிகவும் வலுப்பெறுகிறது. தர்ம, கர்மாதிபதிகள் லக்னத்தை பார்ப்பது வெகு சிறப்பு. லக்னாதிபதியையும்
குரு பார்க்கிறார்.
லக்னமும்,
லக்னாதிபதியும் வலுத்துவிட்ட
நிலையில், மற்ற கிரகங்கள்
ஐந்தாமிடத்தில் தொடங்கி பன்னிரெண்டாம் இடம் வரை அமைந்து
கிரகமாலிகா யோகத்தைத்
தருகின்றன. ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து தனது
சிம்ம வீட்டைப்
பார்ப்பது வெகு
சிறப்பு. சனியின் மூன்றாம் பார்வை சூரியனுக்கு இருந்தாலும்
சனி, கேதுவுடன் இணைந்து சூட்சும
வலுப்பெற்றுள்ளதால் சனியின் பார்வை இங்கே முழு பாபத் தன்மையோடு இருக்காது.
அடுத்தடுத்து இந்த குழந்தைக்கு சூரிய, சந்திர,
செவ்வாய், ராகு,
குரு என யோக தசைகளே அமைகின்றன. அம்ச நிலையை எடுத்துக்
கொண்டால் சூரியன் சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி, புதனின் வீட்டில் இருப்பது சிறப்பு.
எந்த ஜாதகத்திலும் பலவீனங்கள் இல்லாமல் இருப்பது
இல்லை. இங்கே பலவீனம் என்று பார்த்தால் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும் கொடுக்கக்கூடிய புதன் நீச்ச நிலையில் இருந்தாலும், அவர் இங்கே தனித்து இருக்கிறார். மேலாக
குருவின் பார்வையில் தன்னுடைய நீச்சத் தன்மை
நீங்கி சுபத்துவமாகி, தன்னுடைய காரகத்துவங்களை, இந்த எதிர்கால ஜாதகருக்குத் தரும் நிலையிலேயே இருக்கிறார்.
முக்கியமாக,
இந்த ஜாதகத்தில் பாவத் பாவக அமைப்பு ஏறக்குறைய
முழுமையாக இருக்கிறது. லக்னாதிபதி, லக்னத்திற்கு 11-ல்
இருக்கிறார். இரண்டாமதிபதி
இரண்டிற்கு ஏழில் இருந்து இரண்டைப் பார்க்க, மூன்றோனும், மூன்றுக்குக்கு
கேந்திரத்தில் அமர்ந்து தன் வீட்டைப் பார்க்கிறார். நான்கோன், நான்கிற்கு கேந்திரத்தில் இருக்க, ஐந்தாம் அதிபதி திரிகோணத்திற்கு அதிபதியாக பாபர் வந்தால் அவர் அந்த வீட்டிற்கு 6,8,12ல் மறைய வேண்டும்
எனும் சூட்சும வலு விதியின் படி ஐந்திற்கு ஆறில் இருக்கிறார்.
ஆறாமதிபதி ஆறுக்கு 12-ல்
மறைய, ஏழோன் 7-க்கு
பனிரெண்டில் மறைவது ஒரு குறைதான். ஆயுளைக்
கொடுக்கும் எட்டாம் வீட்டோன், எட்டிற்கு 11ல் அமர, பாக்கியத்தான் ஒன்பதுக்கு
ஒன்பதிலும்,
பத்துக்குடையவன் பத்தாம் கேந்திரத்திலும்,
11க்குடையவன் சுபராகி, 11க்கு ஒன்பதிலும், 12க்குடையவன்
12க்கு 10ம்
இடத்திலும் மிக மிகச் சிறப்பாக
அமைந்திருகிறார்கள்.
மேற்கண்ட நாளில் பிறக்கும் குழந்தைகள் உறுதியாக தனது
துறையில் முதன்மையானவனாக இருப்பார்கள். லக்ன பாவக முனை நிலைக்கேற்ப அவர்களில்
ஒருவர், உலகின் எங்கோ ஒரு பகுதியில், மிக மிக உயர்நிலையில் அரசனாக, அதிபராக, பிரதமராக ராஜயோகத்துடன் இருப்பார். இன்னொன்று, புதன் இங்கே நீச்ச பங்க
அமைப்பில் இருப்பதால் நான் எழுதிய இந்த வரிகளை, அவர்களில் ஒருவர் எதிர்காலத்தில் படித்து,
ஜோதிடத்தின் உண்மைத் தன்மையினை உணர்ந்து, மெய்சிலிர்ப்பார்.
அடுத்த அத்தியாயத்தில்
பார்க்கலாம்.

நேரு, இந்திராகாந்தி, வாஜ்பாயைப்போல் எளிமையாக இவர் இல்லையே... இவர் உடுத்தும் உடை இலட்சக்கணக்கில்... இவர் ஆட்சியில் மக்கள் துன்பங்களைத்தான் அனுபவித்தனர். இந்தியாவில் விலைவாசிதான் உயர்ந்தது...
ReplyDeleteவணக்கம் குருஜி, முதல் ஜாதகத்தில் அவருக்கு விருச்சிக ராசி அயிற்றே..? ஏழரை சனி காலத்தில் எவ்வளவு பெரிய யோக ஜாதகம் என்றாலும் வேலை செய்யாது என்று சொல்லி இர்இுக்கிறீர், அது சற்று குழப்பமாக உள்ளது..?
ReplyDeleteகட்டுரை முடிவில் சரியான ஜாதகத்திற்கு பதில் தவறான ஜாதகத்தை குறிப்பிட்டு விட்டீா்கள். மேலும் மத்திய அமைச்சர் பற்றிய விளக்கத்தில் துலாம் ராசிக்கு பதிலாக சிம்ம ராசியென்றும் தவறாக பதிவாகி இ௫க்கிறது. புத்தகமாக வ௫வதற்குள் தி௫த்தம் செய்ய வேண்டுகிறேன்.
ReplyDelete