பி. அழகுராஜா, ராமநாதபுரம்.
கேள்வி :
குருவின் பொற்பாதங்களை தொட்டு வணங்கி கேட்கிறேன். எங்களுக்கு குழந்தை
பாக்கியம் எப்போது கிடைக்கும்?
பதில் :
ரா |
சூ |
||
குரு |
16.7.1986 காலை 6.45 இராமநாதபுரம் |
ல பு |
|
சுக் |
|||
செ |
சனி |
சந் கே |
(கடக லக்னம் துலாம் ராசி. 1ல் புத, 2ல் சுக், 4ல் சந், கேது. 5ல் சனி, 6ல்
செவ், 8ல் குரு, 10ல் ராகு, 12ல் சூரி. 16-7-1986 காலை 6-45 இராமநாதபுரம்)
குழந்தை எப்போது பிறக்கும் என்ற கேள்விக்கு கணவன்-மனைவி இருவரின் ஜாதகத்தை
சேர்ந்து பார்த்துத்தான் துல்லியமான பதில் சொல்ல முடியும். உங்கள் ஜாதகப்படி
ஐந்தில் சனி அமர்ந்து, ஐந்துக்குடையவன் ஆறில் மறைந்து, புத்திரகாரகன் குரு
எட்டில் இருப்பது கடுமையான புத்திர தோஷம். குரு அல்லது ஐந்தாம் அதிபதி
சம்பந்தத்தை பெற்ற கிரகங்களின் தசை புக்திகளில்தான் புத்திர பாக்கியம்
கிடைக்கும்.
உங்கள் ஜாதகப்படி குருவின் புனர்பூச நட்சத்திரத்தில், வர்கோத்தம நிலையில்
சூரியன் அமர்ந்து, குருவின் பார்வையையும் பெற்று, அம்சத்தில் குருவோடு
இணைந்திருப்பதால் அடுத்த வருடம் சூரிய புக்தியில் குழந்தை பிறக்க வேண்டும்.
ஆனால் இதை மனைவியின் ஜாதகத்தை வைத்துத்தான் உறுதி செய்ய முடியும். மனைவிக்கும்
இதே அமைப்பு இருந்தால் நிச்சயம் குழந்தை உண்டு. மனைவிக்கு இந்த அமைப்பு கூடி
வராத பட்சத்தில் அடுத்து ஆரம்பிக்க இருக்கும் குருவின் வீட்டில் அமர்ந்த
ஐந்தாமதிபதி செவ்வாய் புத்தியில் புத்திரபாக்கியம் கிடைக்கும். நிச்சயம்
குழந்தை உண்டு. வாழ்த்துக்கள்
எஸ். அழகர், தஞ்சாவூர்.
கேள்வி :
மகளுக்கு 38 வயது பூர்த்தியாகி விட்டது. பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் எந்த
வரனும் அமையவில்லை. பொறியியல் படித்து அரசுப்பணியில் நல்ல பதவியில் இருந்தும்
திருமணம் மட்டும் நடக்கவில்லை. வரன் அமையுமா என்று பதில் கூறி என்னை ஆறுதல்
படுத்த வேண்டுகிறேன்.
பதில் :
ல |
|||
சந் கே |
30.10.1979 மாலை 3.50 தஞ்சாவூர் |
செ |
|
கு ரா சனி
|
|||
பு சுக் |
சூ |
(மீன லக்னம், கும்ப ராசி. 5ல் செவ், 6ல் குரு, சனி, ராகு. 8ல் சூரி, 9ல் புத,
சுக். 12ல் சந், கேது. 30-10-1979 மாலை 3-50 தஞ்சாவூர்)
மகள் ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் நீச செவ்வாய் அமர்ந்து,
புத்திர ஸ்தானாதிபதி சந்திரன் பன்னிரண்டில் மறைந்து ராகு-கேதுக்களுடன்
சம்பந்தப்பட்ட நிலையில், புத்திரகாரகன் குரு ஒரே பாகை, கலையில் ராகுவுடன்
இணைந்து கிரகணமாகி, சனியுடனும் சேர்ந்ததால் கடுமையான புத்திர தோஷ அமைப்பு
இருக்கிறது. இதன்படி மகளுக்கு இயற்கையாக புத்திர பாக்கியம் இல்லை. அதனால்தான்
திருமணம் இழுத்துக் கொண்டே போகிறது.
லக்னாதிபதி வலுவிழந்த ஜாதகங்களுக்கு முறையான பரிகாரங்களைச் செய்த பிறகே
நன்மைகள் நடைபெறும். ராகுவினால் ஏற்படும் தடைகளை நீக்க மகளின் ஜென்ம
நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை
நடைபெறும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்ளச் செய்யுங்கள். குருவை
வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் செய்து கொள்ளுங்கள். அடுத்த வருடம்
ஆரம்பிக்க இருக்கும் சனிதசை, சுக்கிர புக்தியில் மகளுக்கு வாழ்க்கைத் துணை
அமையும்.
ஆ. மாரிமுத்து, ஆத்தூர்-சேலம்.
கேள்வி :
மகனுக்கு 31 வயதாகிறது. திருமணம் வேண்டாம் என்று கூறுகிறான். எனக்கு நிரந்தர
வேலை இல்லை. உடல்நிலை சரியில்லை, வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு இன்னும்
வரவில்லை என்று சொல்கிறான். சில ஜோதிடர்கள் தார தோஷம், புத்திர தோஷம் உள்ளதால்
பரிகாரம் செய்தால் மட்டும்தான் திருமணம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.
இல்லையெனில் சந்நியாசி யோகம் உள்ளதாகச் சொல்கிறார்கள். அதைவிட மேலாக என்
மகனுக்கு தாய் தந்தை இல்லாத சூழ்நிலையில்தான் திருமணம் நடைபெறும் என்றும்
சொல்கிறார்கள். பெரும் மனவேதனையில் இருக்கிறோம். அவனுக்கு எப்போது உடல்நிலை
சரியாகி திருமணம் செய்து கொள்வான்?
பதில் :
குரு ரா |
|||
22.12.1987 அதிகாலை 12.25 ஆத்தூர் |
|||
சுக் |
|||
சூ சந், புத, சனி
|
செ |
ல கே |
(கன்னி லக்னம், தனுசு ராசி. 1ல் கேது, 2ல் செவ், 4ல் சூரி, சந், புத, சனி. 5ல்
சுக், 7ல் குரு, ராகு 22-12-1987 அதிகாலை 12-25 ஆத்தூர்)
சேலம், ஈரோடு பகுதியிலிருந்து வரும் கடிதங்களில்தான் இதுபோல தாய், தகப்பன்
இல்லாத சூழ்நிலையில்தான் இவருக்கு திருமணம் நடக்கும் என்று பலன்
சொல்கிறார்கள். இது உண்மையா என்று கேட்டு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. உங்கள்
பகுதி ஜோதிடர்கள் இப்படிச் சொல்வதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள் போல்
தெரிகிறது. ஜோதிடர் ஒரு பலனை சொல்லும்போது அவர் எந்த விதியின் அடிப்படையில்
அதைச் சொல்கிறார் என்பதை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்துவது நல்லது. கேள்வி
கேட்பவருக்கு ஜோதிடம் புரிகிறதோ இல்லையோ இந்தக் கிரகம், இந்த நிலையில்
இருப்பதால் இந்த பலன் நடக்கும் என்று வாடிக்கையாளரிடம் சொல்லுவதே நல்லது.
மகன் ஜாதகப்படி கன்னி லக்னத்திற்கு வரக்கூடாத செவ்வாய் தசை கடந்த ஐந்து
வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. எட்டுக்குடைய செவ்வாய் உடல், மனம்
இரண்டையும் பாதிக்கச் செய்து வயதிற்கேற்ற எந்த நல்ல பலனையும் தராது. மேலும்
மகனுக்கு கடுமையான ஜென்மச் சனியும் நடந்து கொண்டிருக்கிறது. 40 வயதுக்கு
உட்பட்ட எந்த தனுசு ராசிக்காரரும் நன்றாக இல்லை என்றுதான் பலன் சொல்லிக்
கொண்டிருக்கிறேன். உங்கள் மகன் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.
அடுத்த வருடம் ஆரம்பிக்கும் சுக்கிர புத்தி முதல் மகனுக்கு திருமண காலம்
ஆரம்பிப்பதால் 2019 ஜூன் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறும். சன்னியாசி
யோகம் எல்லாம் இல்லை. 2021ல் ஆரம்பிக்கும் குருவுடன் இணைந்த ராகு தசையில்தான்
அவர் தகப்பனாகும் அமைப்பு இருப்பதால் 2019 இறுதியில் திருமணம் நடக்கும்.
ராகுதசை முதல் வாழ்க்கையில் நிலை கொண்டு நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.
No comments :
Post a Comment