ராசிநாதன் செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற
அனைத்திலும் நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும் வாரம் இது. உங்களில் வில்லங்கமான
விவகாரங்களில் மாட்டிக் கொண்டு சிக்கலில் இருந்தவர்கள் பிரச்சினைகளில் இருந்து
வெளியே வருவீர்கள். தனாதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் சொல்லிக்
கொள்ளும்படியான பணவரவு இருக்கும். கடன் தொல்லைகளால் அவதிப்பட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு அதனை தீர்ப்பதற்கான வழிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
உங்களில் 30- வயதிற்குட்பட்டவர்களுக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் நபர் ஒருவர் அறிமுகமாவார். அவர் மூலமாக உங்களின் எதிர்கால வாழ்க்கை தீர்மானிக்கப்படும்.. ஐந்திற்குடைய சூரியன் நீசம் பெறுவதால் சிலர் வெளியே சொல்லிக் கொள்ள முடியாத நீச வழிகளில் பணத்தை செலவு செய்வீர்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்வதற்கு முன் ஒன்றுக்கு நான்கு முறை யோசிப்பது நல்லது. அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. சகோதர உதவி உண்டு.
ரிஷபம் :
ராசிநாதன் சுக்கிரன் ஆறில் அமர்வு, அவருடன் நீச சூரியன் இணைவு என்ற சாதகமற்ற
அமைப்புடன் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. ஆறுக்குடையவன் வலுப் பெறுவது கடன்,
நோய், எதிரி, தொந்தரவுகளை கொடுக்கும் என்றாலும் அவரே ராசினாதனும் ஆவதால்
ரிஷபத்திற்கு கெடுதல்கள் எதுவும் வராமல் நன்மைகள் மட்டுமே நடக்கும். சிலருக்கு
கடன் விவகாரங்களில் மனஅழுத்தம் இருக்கும் என்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது
நல்லது. சிலருக்கு நீண்ட தூரப் பிரயாணங்கள் உண்டு.
செவ்வாய் மூலம் பூமிலாபம் ஏற்படுவதால் உங்களில் சிலருக்கு வீடு கட்டுவதற்கு
அல்லது கட்டிய வீடு வாங்குவதற்கு தடையாக இருந்த அமைப்புகள் விலகுகிறது.
பெண்களுக்கு மன அழுத்தத்தைத் தந்து கொண்டிருந்த அலுவலக விஷயங்கள் இனி
நல்லபடியாக தீர ஆரம்பிக்கும். குறிப்பாக டார்க்கெட் வைத்து வேலை செய்யச்
சொல்லும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நிம்மதியைப் பெறுவீர்கள். அஷ்டமச்
சனி நடப்பதால் காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
மிதுனம் :
ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய்
உச்சம் பெறுவதாலும், குருவுடன் இணைந்திருப்பதாலும் யோகநிலை பெறுகிறார். எனவே
இது மிதுனத்திற்கு நல்லபலன்கள் நடக்கும் வாரம்தான். அதேநேரத்தில் ராசிநாதன்
ஆறாமிடத்தில் இருப்பதால் எல்லா விஷயங்களும் இழுத்துக் கொண்டு போய்தான் நல்லதாக
முடியும். எதிலும் ஒரு மந்தநிலைக்குப் பிறகு நன்மைகளை நீங்கள் அனுபவிக்கும்
வாரம் இது. பணிபுரியும் இடங்களில் உண்டான சிக்கல்கள் தீர்ந்து மீண்டும்
அலுவலகங்களில் சாதகமான நிலைமை உண்டாகும்.
உங்களை பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து இனி நீங்கள் மேலே வருவீர்கள். நீண்ட
நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த விஷயங்கள் இப்பொழுது வெற்றியடையும்.
வராது என்று கைவிட்ட பணம் வரும். பெண்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள்
சிறப்படைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல
செய்திகள் உண்டு. வீட்டில் மதிப்பு மரியாதை உயரும்படியான நிகழ்ச்சிகள்
சிலருக்கு புத்திரர்கள் மூலம் பணவரவு வந்து அதன் மூலம் ஏதேனும் வீடோ, மனையோ
வாங்கும் அமைப்பு உள்ளது.
கடகம் :
ராஜயோகாதிபதி செவ்வாய் உச்சத்தில் இருக்க ராசிக்கு குருபார்வை கிடைக்கிறது.
கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை சமாளிக்க முடியாமல் இருந்த சிக்கல்களும்,
பிரச்சினைகளும் தீர ஆரம்பிக்கும் வாரம் இது. சுக்கிரன் நான்கில் சூரியனுடன்
வலுவாக இருப்பதால் பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசி கிடைக்கும்.
குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். சனி ஆறில்
இருப்பதால் அனைத்திலும் யோகபலன்கள் நடக்கும். கோட்சார ரீதியாக இன்னும்
சிலகாலத்திற்கு கடகத்திற்கு நல்லபலன்கள் மட்டும்தான்.
உங்களில் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக அப்பா விஷயத்தில் நன்மைகளோ,
தந்தையிடமிருந்து பணம் கிடைப்பது அல்லது நீண்டநாட்களாக சம்மதிக்காத ஒரு
விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பது போன்ற பலன்கள் இந்த வாரம் உண்டு. இப்போது
இருக்கும் பிரச்னைகள் அனைத்தும் இனி நல்லவிதமாக முடியும். சகோதரிகள் மூலம்
சாதகமான பலன்கள் நடக்கும். சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பிரச்னைகள்
தீரும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாடு போன்ற தூரப் பிரயாணங்கள்
அமையும்.
சிம்மம் :
ராசிநாதன் சூரியன் நீசத்தில் இருப்பதால் எதையும் ஒரு தயக்கத்துடன் நீங்கள்
அணுகும் வாரம் இது. உங்களில் சிலருக்கு எந்தப் புற்றில் எந்தப் பாம்பு
இருக்கிறதோ என்கிற யோசனை இருக்கும். சிறு விஷயத்திற்கும் கோபப் படுவீர்கள்.
பிள்ளைகள் உங்களின் கோபத்தை பார்த்து அருகில் வருவதற்கு கொஞ்சம் தயங்கவே
செய்வார்கள். செவ்வாய் கேது இணைவால் சிலருக்கு சகோதரர்களால் தேவையற்ற
பிரச்னைகளும், மனக் கசப்புகளும், விரயங்களும் இருக்கும் என்பதால்
வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது.
தொழில் அமைப்புகளிலும், வீட்டிலும் சங்கடங்களை சந்தித்து
கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் தரும் நல்ல செய்திகள் உண்டு. என்னதான் நன்மைகள்
நடந்தாலும் சூரியன் நீசமாக இருப்பதால் இது நன்றாக நடக்குமா என்ற
சந்தேகத்தில்தான் நீச சூரியன் உங்களை வைத்திருப்பார். உங்களுடைய
எண்ணங்களிலும், செயல்களிலும் தன்னம்பிக்கை சற்றுக் குறைவாகத்தான் இருக்கும்.
பனிரெண்டு ராசிகளில் சிம்மத்தை மட்டுமே ராஜராசி என்று ஞானிகள் சொல்வதால்
சிம்மத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் சோடை போக மாட்டீர்கள்..
கன்னி :
ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் பகை வீட்டில் இருந்தாலும் அவருக்கு வீடு
கொடுத்த செவ்வாய் உச்சம் பெறுவதாலும், புதனே குருவுடன் இணைந்து சுபத்துவம்
பெறுவதாலும் வேலை தொழில் அமைப்புகளில் நீங்கள் நல்ல பெயரை சம்பாதிக்கும் வாரம்
இது உங்களில் சாப்ட்வேர் துறையை சேர்ந்தவர்கள் மேலதிகாரிகளிடம் பாராட்டு
பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் இருக்கும் ராகுவிற்கு குருபார்வையில்
கிடைப்பதால் சிலருக்கு அன்னியமத நண்பர்களின் ஆதரவு இருக்கும். இதுவரை
நல்லபலன்களை தராத ராகு இனி யோகம் தருவார்.
விரையாதிபதி சூரியன் குடும்ப ஸ்தானத்தில் நீசபங்கம் அடைவதால் குடும்ப
செலவுகளின் மூலம் விரையங்கள் இருக்கும். சிலர் வங்கி சேமிப்பை கரைய
வைப்பீர்கள். அரசுத் துறையினருக்கு அதிகாரிகளின் ஆதரவு இந்த வாரம்
இல்லையென்றாலும் அவர்களின் தொந்தரவு கண்டிப்பாக இருக்காது. உங்களில்
வெளிநாட்டு கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இடமாறுதல் இருக்கும். சிலருக்கு
எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் உண்டு. சிலர் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கும்
பயணம் செய்வீர்கள். அது ஆன்மிகப் பயணமாக இருக்கலாம்.
துலாம் :
சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி நிலையில் வலுவாக இருப்பது துலாம் ராசிக்கு
நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் இது உங்களுக்கு நன்மையான வாரம்தான். உங்களைப்
பிடிக்காமல் மறைமுகமாக உங்கள் முதுகிற்குப் பின்னால் தவறாக பேசியவர்கள் இந்த
வாரம் அதற்கு வருந்துவார்கள். எதிர்ப்புகளையும், எதிரிகளையும் நீங்கள்
ஜெயிக்கும் வாரம் இது. ராசியில் சூரியன் நீசநிலை அடைந்திருப்பதால் மூத்த சகோதர
விஷயத்தில் வீண்செலவுகளும் மன வருத்தங்களும் இருக்கும். சுக்கிர வலுவால்
எதையும் சமாளிப்பீர்கள்.
வயதான தகப்பனாரை கொண்டவர்களுக்கு தந்தையால் செலவுகளும், மன வருத்தங்களும்
தரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். அப்பாவின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.
அதனால் வீண் வாக்குவாதங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க முடியும். கணவன்
மனைவி உறவு சிறப்பாக இருக்கும். காவல்துறை மற்றும் சட்டத்துறையை
சேர்ந்தவர்களுக்கு மேன்மையான பலன்கள் நடக்கும். குறிப்பாக வக்கீல்கள் வளம்
பெறுவீர்கள், அரசியல்வாதிகளுக்கு குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் உண்டு.
அந்தஸ்து கௌரவம் கூடும்.
விருச்சிகம் :
எல்லாவகையிலும் சிக்கல்களை சந்தித்த விருச்சிகத்தினருக்கு குறைகள் தீரும்
வாரம் இது. இதுவரை கிணற்றில் போட்ட கல்லாக இருந்தவை அனைத்தும் இனி சாதகமாக
மாறி நன்மை அளிக்கும். அதேநேரத்தில் வாழ்க்கை என்பது தமிழ் சினிமா அல்ல.
சினிமாவில்தான் ரஜினி ஒரே பாட்டில் கோடீஸ்வரன் ஆகி விடுவார். நிஜ வாழ்க்கையில்
அதே ரஜினி ஒரு கட்சி ஆரம்பிப்பதற்கு இன்னும் யோசித்துக் கொண்டுதான்
இருக்கிறார். இனிமேல் விருச்சிகத்திற்கு நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும்.
அவரசரப் படாதீர்கள்.
இளைய பருவத்தினர் இனிமேல் அனைத்தும் மாறி தங்களுக்குரிய வேலை வாய்ப்பு,
திருமணம் போன்றவைகள் நிறைவேறப் பெறுவார்கள். 1,2,5, ஆகிய நாட்களில் பணம்
வரும். 28-ம் தேதி மாலை 6.51 முதல் 30-ம் தேதி இரவு 10.10 வரை சந்திராஷ்டமம்
என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட
தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக
மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தனுசு :
தனுசுக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக அயல்நாட்டு யோகம் கிடைக்கும் வாரம் இது.
பிறந்த இடத்தை விட்டு தூரத்தில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவீர்கள். இரண்டில்
செவ்வாய் பாபத்துவமாக இருப்பதால் குடும்பம், நட்பு வட்டாரங்களில் கூடுதலாக
கோபப்படுவீர்கள். ‘’தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’’
என்ற தெய்வப் புலவரின் திருவாக்கு இந்த வாரம் உங்களுக்கு பொருத்தமாக
இருக்கும். எனவே பேச்சில் கவனமாக இருங்கள். ராசியில் இருக்கும் சனி பகவானால்
பணத்திற்காக பொய் சொல்ல வேண்டி இருக்கும்.
இளைஞர்கள் சிலருக்கு அடங்கி இருந்த கடன் அமைப்புகள் மீண்டும் தலை தூக்கும்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் எனும்படி
கடன் கொடுத்தவனை நேரில் சந்தித்து தவணை கேளுங்கள். 29,3,4 ஆகிய நாட்களில் பணம்
வரும். 30-ம் தேதி இரவு 10.10 முதல் 2-ம் தேதி அதிகாலை 1.16 வரை சந்திராஷ்டம
நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய
முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.
மகரம் :
கோட்சார அமைப்புகள் சாதகமான அமைப்பில் இருப்பதால் பெரும்பான்மையான
மகரத்தினருக்கு பிரச்னைகள் எதுவும் தற்போது இல்லை. இளைய பருவத்தினர்
உல்லாசங்களை அனுபவிக்கும் வாரம் இது. புதிய ஆண், பெண் நண்பர்கள் இந்த வாரம்
கிடைப்பார்கள். எந்த ஒரு சுகத்தையும் வரம்புக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏழரைச்சனி நடப்பதால் எதிலும் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். இப்போது
கிடைக்கின்ற சுகங்களில்தான் பின்னால் மன அழுத்தம் வரும் என்பதை மறந்து
விடாதீர்கள். முக்கியமாக குடிப்பழக்கம் வரும் வாரம் இது.
உங்களில் சிலருக்கு அரசனை நம்பி புருசனைக் கைவிடும் நிகழ்வுகள் இருக்கும்
என்பதால் முடிவெடுக்கும் முன் எச்சரிக்கையும் நிதானமும் தேவைப்படும் வாரம்
இது. 30,2,3, ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி அதிகாலை 1.16 முதல்
4-ம்தேதி அதிகாலை 4.26 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில்
புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம்
அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள்
எதையும் எடுக்க வேண்டாம்.
கும்பம் :
எவ்வளவு வருமானம் வந்தாலும் சம்பாதித்த பணம் எங்கே போனது என்று தேடும்
நிலையில்தான் வாரம் முழுவதும் இருக்கின்றது. உங்களில் சிலருக்கு ஆலயப்பணி
செய்வதற்கு வாய்ப்புகள் வரும். ஆற்றோரத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில்
இறைவாக்கும் தரிசனமும் கிடைக்கும். சிலர் குலதெய்வ தரிசனம் பெறுவீர்கள்.
அலுவலகத்தில் சில பெண்கள் தலைமைப் பொறுப்பிற்கு வருவீர்கள். கும்பத்தினருக்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமாகும் வாரம் இது.
கைகளில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவர்கள், டெய்லர்கள், இறைச்சிக்
கடையில் பணிபுரிபவர்கள், காவல்துறை, செக்யூரிட்டி உள்ளிட்டவர்கள் இந்த வாரம்
நல்ல திருப்பு முனையான பலன்களைப் பெறுவீர்கள். 1,2,3, ஆகிய நாட்களில் பணம்
வரும். 4-ம் தேதி அதிகாலை 4.26 முதல் 6-ம்தேதி காலை 8.13 வரை சந்திராஷ்டம
நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல்
இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால்
முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.
மீனம் :
கடந்த காலங்களில் பொருளாதார சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்த மீனத்தினர் இனி
அவை நீங்கி நல்ல வருமானம் தரும் வேலை, தொழில் அமைப்புகளை பெறுவீர்கள்.
குறிப்பாக மனைவியின் மூலமாக பொருளாதார உயர்வு இருக்கும். பெண்களுக்கு சிறப்பான
வாரமிது. ஆரோக்கியம் மேம்படும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம்
சாதகமாக முடிவதும், திரும்ப வராது என்று கைவிட்ட பணம் கிடைத்து
சந்தோஷப்படுதலும் நடக்கும். சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு
வெளிமாநிலம் செல்லும் அமைப்பு இருக்கிறது.
சந்திரன் நல்ல அமைப்புகளில் இருப்பதால் திடீர் தனலாபம் உண்டு. பங்குசந்தை கை
கொடுக்கும். அதேநேரத்தில் பேராசைப்பட்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.
கடமைக்காக பொய் சொல்ல வேண்டிய வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில்
இருப்பவர்கள் மேன்மை அடைவீர்கள். 30 வயதுகளில் இருப்பவர்களுக்கு எதிர்கால
முன்னேற்றத்திற்கான அமைப்புகள் இப்போது உருவாகும். கேது பதினொன்றில்
இருப்பதால் சனி, கேது தசை நடப்பவர்களுக்கு தியானம், யோகா போன்ற ஆன்மிக
விஷயங்களில் ஈடுபாடு வரும்.

No comments :
Post a Comment