Wednesday, October 31, 2018

கன்னி - 2018 நவம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி

கைப்பேசி: 8681 99 8888

கன்னி:

தனாதிபதி சுக்கிரன் தன ஸ்தானத்தில் மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் பிறக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கின்ற மாதம் இது. கடந்த சில வருடங்களாக கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். இதுவரை ஐந்தில் உச்சமாக இருந்த செவ்வாய் ஆறாமிடத்திற்கு மாறுவதால் உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் கடன்களும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில் நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இனி தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும். 

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இது சிக்கல் இல்லாத வாரம்தான். இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். செவ்வாய் ஆறில் மறைவதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி வரும் என்பது உறுதி. எனவே தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் என்றும் உங்களுக்கு சந்தோசம்தான். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர் பார்த்த ஒரு தொகை கிடைக்கும். 

பெண்கள் விஷயத்தில் சற்றுத் தள்ளியே இருங்கள். சிலருக்கு தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். அரசுவேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். மனைவிக்கு கழுத்து நகை வாங்கித் தருவீர்கள். வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை. தனஸ்தானம் வலுவடைவதால் மறைமுகமான வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 20-ம் தேதி அதிகாலை 6.33 முதல் 22-ம் தேதி இரவு 11.35 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்

No comments :

Post a Comment