Wednesday, September 19, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 205 (18.09.18)

த.சந்திரசேகரன், புதுச்சேரி.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு மாணவனின் வணக்கம். ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளதால் அடிப்படை, உயர்நிலை முடித்து ஜோதிட கலாநிதி பட்டம் பெற்று விட்டேன். தங்களின் மாலைமலர் படைப்புகள் அனைத்தையும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் படித்து வருகிறேன். தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுக்கு ஜோதிடம் பார்த்தால் சொல் வாக்குப் பலிதம் உண்டாகுமா? எப்போது ஜோதிடம் பார்க்க ஆரம்பிக்கலாம்? ஐயா அவர்களின் மேலான அறிவுரைக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்.


பதில் :


செ

கே

16.12.1960
காலை
5.5
மாண்டியா

சுக்

சூ குரு
சனி

ல பு

சந்

ரா

(விருச்சிக லக்னம், துலாம் ராசி. 1ல் புத, 2ல் சூரி, குரு, சனி. 3ல் சுக், 4ல் கேது, 8ல் செவ், 11ல் ராகு. 16-12-1960 காலை 5-5 மாண்டியா)

வாக்குப் பலிதம் உண்டாகுமா என்று எப்படி எதற்காகக் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. முதலில் ஜோதிடம் என்பது ஒரு ஜோதிடரின் வாக்கில் இல்லை. அது விதிகளில் இருக்கிறது. சரியான விதிகளைப் பயன்படுத்தி முறையாக கணித்து நீங்கள் சொல்லும் போது அந்தச் செயல் நடக்கவே செய்யும். அப்போதுதான் நீங்கள் வாக்குபலிதம் உள்ள ஜோதிடராக ஆகிறீர்கள்.

விதிகளைத் தெரிந்து கொள்ளாமல் அல்லது விதிகளைப் புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்த ஏதோ ஒரு பலனை நீங்கள் சொல்வீர்களேயானால், நீங்கள் ஜோதிடர் என்ற நிலையிலிருந்து மாறி அருள்வாக்கு சொல்பவராக மாறி விடுவீர்கள். அதற்கு ஜோதிடம் முழுமையாக தெரிந்திருக்க தேவையில்லை. அரைகுறையாக தெரிந்தாலே போதும். நீங்கள் இப்போது 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறீர்கள். வயதைக் காரணம் காட்டியும், ஆடை அலங்காரத்தின் மூலமாகவும், வாக்கு சாமர்த்தியத்தை கொண்டும் காலத்தை ஓட்டிவிடலாம்.

ஜோதிடம் என்பது மிக நுணுக்கமான விதிகளுக்கும், அதைவிட மிகச் சிரமமான விதிவிலக்குகளுக்கும் உட்பட்ட ஒரு மகா கணிதம். ஜாதகத்தில் புதன் இருக்கும் அளவிற்கு ஏற்ப ஒருவருக்கு ஜோதிடம் கைவரும். உங்களுக்கு லக்னத்தில் புதன் திக்பலத்துடன் அமர்ந்து, லக்னாதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றதால் ஆட்சி நிலை உண்டாகி, தனது சொந்த நட்சத்திரத்திலும், அம்சத்தில் குருவின் வீட்டிலும் இருப்பதால் தாராளமாக உங்களால் விதிகளின்படி முறையான வகையில் பலன் சொல்ல முடியும்.

வந்திருப்பவருக்கு எதையோ சொல்ல வேண்டுமே என்பதற்காக, எதையாவது சொல்லி, அது பலிக்க வேண்டுமே இறைவா, என்று ஜோதிடம் கேட்க வந்தவர் போன பிறகு பரம்பொருளை வேண்டுகின்ற ஜோதிடனைப் போல இல்லாமல், இதுதான் முறையான பலன். விதிகளின்படியே நான் சொல்லி இருக்கிறேன் இது நிச்சயம் நடக்கும். என் வாக்கு பலிக்கும் என்று விஞ்ஞான ரீதியில் ஜோதிடத்தை உரைக்கும் ஜோதிடனாக உங்களால் வர முடியும்.

வரும் தைமாதம் ஆரம்பிக்கும் சுக்கிர தசை, ராகு புக்தி முதல், ராகு ஜீவனாதிபதியான சூரியனின் வீட்டில் அமர்ந்திருப்பதாலும், சூரியன் வாக்கு ஸ்தானத்தில் குருவுடன் இணைந்திருப்பதாலும், உங்களால் ஜோதிட தொழிலை மேற்கொள்ள முடியும். அடுத்த வருடம் முதல் ஜோதிடத் தொழில் செய்யுங்கள். முன்னுக்கு வருவீர்கள். வாழ்த்துக்கள்.

மீனாட்சி, மும்பை.

கேள்வி :

மகளுக்கு 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் மாப்பிள்ளை குடும்ப வாழ்க்கைக்கு தகுதி இல்லாத காரணத்தினால் விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளோம். அது எப்போது முடியும்? எங்களுக்கு இவள் ஒரே பெண். இவளின் நிலை கண்டு நாங்கள் அடையும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இவளது மறுமணம் நல்லபடியாக நடக்குமா? அது எப்போது? வாழ்க்கை எப்படி இருக்கும்? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? வரன் மும்பையிலேயே அமையுமா? தற்போது இவள் தனியார் வங்கியில் பணியில் இருக்கிறாள், தொடர்ந்து வேலையில் இருப்பாளா?

பதில் :


சந் செ

2.12.1990
காலை
5.3
சென்னை


குரு
கே

ரா

பு சனி

சூ சுக்


(துலாம் லக்னம், ரிஷப ராசி, 2ல் சூரி, சுக். 3ல் புத, சனி. 4ல் ராகு, 8ல் சந், செவ். 10ல் குரு, கேது. 2-12-1990 காலை 5-3 சென்னை)

லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி என்ற நிலை அமைந்து சுக்கிரன் அஸ்தமனமான ஒரு பெண்ணிற்கு 26 வயதில் திருமணம் செய்து வைத்தது தவறு. இதுபோன்ற ஜாதகங்களுக்கு 30 வயதில்தான் திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும்.

பெண்ணிற்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் அடுத்த வருடம் ஜூலைக்குப் பிறகு வழக்கில் உங்கள் பக்கம் தீர்ப்பாகி, மகளுக்கு விவாகரத்து கிடைக்கும். அடுத்த வருடம் தீபாவளிக்கு பிறகு உங்கள் பெண்ணுக்கு மறுமணம் நடக்கும். இரண்டாவது திருமணம் நிலையாக, நன்றாகவே இருக்கும். மாப்பிள்ளை மும்பையில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. திருமணத்திற்குப் பிறகு பெண் தூர இடங்களுக்கு போக வேண்டி இருக்கும். லக்னத்திற்கு பத்தில் குரு, கேள யோகத்துடன் கேதுவுடன் இணைந்து இருப்பதால் உங்கள் மகள் வங்கிப் பணியில் இருக்கிறார். இது நீடிக்கும். இனிமேல் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். பரிகாரங்கள் எதுவும் தேவையில்லை.

எஸ். கண்ணன், சென்னை.

கேள்வி :

பூமி விற்ற வகையில் எனக்குச் சேர வேண்டிய பணம் 40 லட்சம் கிடைக்குமா? கிடைக்காதா? கிடைக்குமெனில் எப்போது? அலர்ஜியால் மிகவும் சிரமப்படுகிறேன். எப்போது குணமாகும்?

பதில் :


கே

14.9.1955
காலை
10.30
ஈரோடு


குரு

சூ சந் செ

ல ரா

சனி

பு சுக்

(விருச்சிக லக்னம், சிம்ம ராசி. 1ல் ராகு, 7ல் கேது, 9ல் குரு, 10ல் சூரி, சந், செவ், 11ல் புத, சுக். 12ல் சனி, 14-9-1955 காலை 10-30 ஈரோடு)

ராகுவிற்கு குருவின் பார்வை இருந்தாலும், அவர் நன்மைகளைச் செய்ய வேண்டுமென்றால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். மேற்கண்ட ஐந்து இடங்களில் இருக்கக்கூடிய ராகு மட்டுமே சுயமாக நன்மைகளைச் செய்ய தகுதி உள்ளவர்.

செவ்வாயின் ஸ்திர வீடான விருச்சிகத்தில் இருக்கும் ராகு கெடுதலையே தருவார். ஆயினும் இங்கு ராகுவிற்கு குருவின் பார்வை இருப்பதால் கெடுதல்கள் கட்டுக்குள் இருக்கும். ஜாதகப்படி நீங்கள் அவசரபுத்தி உள்ளவராக, இளிச்சவாயனாக இருப்பீர்கள். ராகு தசையில் இந்தக் குணம் அதிகமாக இருக்கும். லக்னத்தை உச்ச குரு பார்ப்பதால் நம்பக் கூடாதவரை நம்பித் தொலைத்திருப்பீர்கள்.

செவ்வாயின் வீட்டில், செவ்வாயின் பார்வையில் இருக்கும் ராகு, முன்யோசனை இல்லாமல் எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பை தருவார். அதோடு ராகு எட்டுக்குடைய புதனின் சாரத்தில் இருக்கிறார். ஆகவே கடந்த 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த புதன் புக்தி முதல் உங்கள் வாழ்க்கையில் கடுமையான மன அழுத்தமும், பிரச்சனைகளும் இருந்து கொண்டிருக்கும்.

அடுத்த வருடம் ஆகஸ்டில் ஆரம்பிக்கும் சூரிய புக்தி முதல் இப்போது இருக்கும் உங்களின் கஷ்டங்கள் தீர ஆரம்பிக்கும். ராகு தசை, சந்திர புக்தியில் நிலத்தின் பேரில் வரவேண்டிய பணம் ஓரளவு வரும். ஒருவருக்கு ராகு கடுமையான கெடுபலன்களை முற்பகுதியில் செய்யும் நிலையில், பிற்பகுதியான சூரிய, சந்திர, செவ்வாய் புத்தியில் நன்மைகளைத் தருவார். அந்த அமைப்பு உங்களுக்கு இருக்கிறது. எனவே சந்திர புக்தி இறுதியில் உங்களுடைய பணம் வரும். முயற்சிகளைக் கைவிட வேண்டாம். ராகுதசை முடிந்ததும் அலர்ஜி குணமாகும். வாழ்வின் இறுதியில் குருதசை முதல் சந்தோஷமாக நிம்மதியாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

No comments :

Post a Comment