பி. ஆனந்த். சேலம்.
கேள்வி :
மணமாகி ஏழு வருடமாகிறது. எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக
உள்ளது. அவள் எப்போதும் தாய் வீட்டில்தான் இருக்கிறாள். விவாகரத்து வழக்கு
தொடர்ந்திருக்கிறேன். தற்சமயம் நீதிமன்றத்தில் வாழ விருப்பம்
தெரிவித்திருக்கிறார். மனக்குழப்பத்தில் இருக்கிறேன்.
செய்து கொண்டிருக்கும்
வேலையும் கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு ஜோதிடரைப் பார்த்தேன். அவர் என்
ஜாதகத்தில் எட்டில் சனி அமர்ந்து, 10, 2, 5-மிடங்களை பார்க்கிறார். இரண்டாம்
அதிபதி செவ்வாய் ஆறில் மறைவு, பாதகாதிபதி உச்சம், இதனால் மனைவி, குழந்தைகள்,
தொழில் எதுவுமே உங்களுக்கு இல்லை. உங்கள் ஜாதகம் மிகவும் மோசமான ஜாதகம். மனைவி
ஜாதகம் இதைவிட மோசமாக உள்ளது. எதிர்காலத்தில் வரும் தசாபுக்திகளும்
இருவருக்கும் சரியாக இல்லை. சேர்ந்து வாழ்ந்தாலும் ஒன்றுதான், பிரிந்தாலும்
ஒன்றுதான். இருவருக்கும் பொருத்தம் இல்லை என்று பயமுறுத்துகிறார். வரப்போவதை
நினைத்தால் பயமாக இருக்கிறது. மனைவியுடன் சேர்ந்து வாழும் பட்சத்தில் ஏதேனும்
பரிகாரம் செய்ய வேண்டுமா? எங்கள் இருவரின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில் :
ல |
ரா |
||
11.10.1983 மாலை 4.50 சேலம் |
|||
சு செ |
|||
சந் குரு கே |
சனி |
சூ பு |
(மீனலக்னம், விருச்சிக ராசி. 3ல் ராகு, 6ல் சுக், செவ், 7ல் சூரி, புத. 8ல்
சனி, 9ல் சந், குரு, கேது. 11-10-1983 மாலை 4-50 சேலம்)
எந்த ஒரு கேட்டை நட்சத்திரக்காரரும் குடும்பம், தொழில் போன்றவற்றில்
நிம்மதியாக இல்லை. அதற்கு நீங்களும் விதிவிலக்காக இருக்க முடியாது. அதற்காக
இப்படி பயந்து சாக வேண்டாம். எல்லா சிரமங்களும் விலகிக் கொண்டிருக்கிறது.
இன்னும் சில வாரங்களில் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.
ஒரு ஜாதகத்தில் எத்தனை பெரிய தோஷம் இருந்தாலும் லக்னாதிபதி வலுவாக இருந்தால்
அவை அனைத்தும் விலகி ஜாதகர் நன்றாக இருப்பார். பிறந்தது முதல் ஆறு,
எட்டுக்குடையவர்களின் தசை நடப்பதால் 36 வயதுவரை உங்களுக்கு சிரமம்தான். அதேபோல
எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் கடுமையான ஏழரைச் சனி நடக்கும்போது
கஷ்டங்கள் இருந்துதான் தீரும். அதிலும் விருச்சிக ராசி அடைந்த வேதனைகள்
அதிகம்.
உங்கள் ஜாதகப்படி பத்து, இரண்டு, ஐந்தாம் வீடுகளை சனி பார்த்தாலும், பத்தாம்
வீடு குருவின் வீடாவதும், ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதும் சனியின் பார்வைக்
குறையை நீக்கும். இரண்டாம் அதிபதி ஆறில் மறைந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த
அதிநட்பு வீடான சிம்மத்தில், சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி வர்கோத்தமமாக
இருக்கிறார். பாதகாதிபதி தனித்து இருந்தால் மட்டுமே கெடுதல்களைச் செய்வார்.
இங்கே சூரியனுடன் அவர் இணைந்திருப்பதால் பாதக தோஷம் விலகுகிறது.
எல்லாவற்றையும்விட மேலாக ஜென்மச் சனி முடிந்துவிட்டதால், இனிமேல் மனைவியுடன்
சேர்ந்து வாழ முடியும். மனைவியின் அமைப்பின்படி தனுசு லக்னமாகி லக்னத்தில்
குரு பலம் பெற்று அமைந்த உங்களை விட யோக ஜாதகம். நீங்கள் இருவரும் குருவின்
லக்னங்களில் பிறந்திருப்பதால் பிரிவதற்கு வாய்ப்பில்லை. வழக்கை வாபஸ் வாங்கி
வாழ்க்கையில் இணையுங்கள். இனிமேல் கஷ்டம் வருவதற்கு வாய்ப்பில்லை. அடுத்த
வருடம் ஆறாம் அதிபதி சூரியனின் தசை முடிவடைவதால் வழக்கும் நீடிக்காது. அடுத்து
வரும் சந்திர தசை முதல் இருவரும் இணைந்து நன்றாக இருப்பீர்கள். சந்திரனில்
குழந்தை பாக்கியமும் கிடைக்கும். கஷ்டங்கள் முடியப் போவதால் பரிகாரம்
தேவையில்லை. வாழ்த்துக்கள்.
கே. சத்தியா, யாழ்ப்பாணம்.
கேள்வி :
பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம், விவசாய விஞ்ஞானம் படித்திருக்கிறேன். நான்கு
வருடங்களாக விவசாயம் மற்றும் நிர்வாகத் துறைகளில் அரச வேலைக்காக பல தேர்வுகளை
எழுதியுள்ளேன். நேர்முகப் பரீட்சைகளில் சில புள்ளிகள் குறைவால் வேலை
கிடைக்காது தடைபடுகிறது. எப்போது வேலை கிடைக்கும்? எனது துறை சார்ந்ததா அல்லது
வேறு துறையா? திருமணம் எப்போது? நல்ல வாழ்க்கை இருக்குமா? பெற்றோர்களை நன்றாக
பார்த்துக் கொள்ள முடியுமா?
பதில் :
செ |
சுக் குரு |
பு |
|
ரா |
25.7.1988
காலை
9.17
யாழ்ப்பாணம் |
சூ
|
|
கே ல
|
|||
சனி |
சந் |
(சிம்ம லக்னம், விருச்சிக ராசி. 1ல் கேது, 4ல் சந், 5ல் சனி, 7ல் ராகு, 8ல்
செவ், 10ல் சுக், குரு. 11ல் புத, 12ல் சூரி. 25-7-1988 காலை 9-17
யாழ்ப்பாணம்)
கடந்த ஐந்து வருடங்களாக உன்னுடைய விருச்சிக ராசிக்கு சனி நடப்பதால் அனைத்தும்
தடையாகி வருகிறது ஜாதகப்படி தொழில்ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிரனும்
குருவும் அமர்ந்து விவசாயத்தை குறிக்கும் சனி, குருவின் பார்வையில் இருப்பதால்
உனக்கு இலங்கை அரசாங்கத்தில் விவசாயத் துறை சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும்.
ராசிக்கு இரண்டில் சனி, லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் என்ற நிலை இருப்பதால்
திருமணம் இன்னும் தாமதமாகும். தாமத திருமணம், நல்ல வாழ்க்கை என்ற அமைப்பு
ஜாதகப்படி இருக்கிறது. நான்கு, ஒன்பதாமிடங்கள் வலுவாக இருப்பதால் பெற்றோருக்கு
உதவியாக இருப்பாய்.
டி. தீனதயாளன், துறையூர்.
கேள்வி :
சொந்தத்தொழில் செய்யலாமா? திருமணம் எப்போது? நான்கு வருடமாக நோய்த் தொற்று
உள்ளது. எப்போது தீரும்? காதல் திருமணம் செய்யலாமா அல்லது வீட்டில் பார்க்கும்
திருமணம் செய்து கொள்ளலாமா? இப்போதுதான் காதல் ஆரம்பித்திருக்கிறது.
கடன்சுமையில் இருக்கிறேன். அப்பாவுடன் இணைந்து சொந்தத் தொழிலை விரிவு
செய்யலாமா? அப்பா ஒத்துழைப்புத் தருவாரா? உங்கள் ரசிகனின் வாழ்க்கையை
நீங்கள்தான் தொடங்கி வைக்க வேண்டும்.
பதில் :
ல |
செ கே |
||
29.9.1992 இரவு 10.40 ஶ்ரீரங்கம் |
|||
சனி |
|||
ரா |
சந் சுக் |
சூ பு குரு |
(ரிஷப லக்னம், துலாம் ராசி. 2ல் செவ், கேது. 5ல் சூரி, புத, குரு. 6ல் சந்,
சுக், 8ல் ராகு 9ல் சனி 29-9-1992 இரவு 10-40 ஸ்ரீரங்கம்)
இப்போதுதான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேன், காதல் திருமணம் செய்யலாமா அல்லது
வீட்டில் பார்க்கும் திருமணத்தை செய்யலாமா என்று கேட்பதிலேயே உன்னுடைய காதலின்
ஆழமும், உண்மைத்தன்மையும் புரிந்து விடுகிறது. இதுபோல காதல் என்ற பெயரில் ஒரு
பெண்ணின் மனதைக் கெடுக்கும் வேலையை விட்டு விடு. இது பெரிய பாவம். உன்னைப்
போன்றவர்களுக்கு காதல் வராது.
அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கும் புதன்தசை முதல் கடனும், நோயும்
தீரும். சூரியன் குருவுடன் இணைந்து சுபத்துவமாகி, ஆட்சி பெற்ற ஒன்பதாம் அதிபதி
சனியை குரு பார்ப்பதால் தந்தையுடன் இணைந்து தொழில் செய்யலாம். அப்பா
ஒத்துழைப்பும் தருவார். புதன் தசை ஆரம்பித்ததும் திருமணம், குழந்தை பாக்கியம்
கிடைத்து வாழ்க்கையில் நன்றாக இருப்பாய், வாழ்த்துக்கள்
பே. லோகநாதன், சேலம்.
கேள்வி :
எனது மானசீக குருநாதரின் திருப்பாதங்களுக்கு வணக்கம். என்னுடைய ஜாதகத்தில்
சூரியன், சனி ,செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் கிரகயுத்தத்தில்
இருக்கின்றன, இதில் எந்த கிரகம் ஜெயித்திருக்கிறது? செவ்வாய் மிதுன
லக்னத்திற்கு நல்லது செய்யாது என்று அடிக்கடி சொல்கிறீர்கள். இந்த கிரக
யுத்தத்தில் செவ்வாய் ஜெயித்துள்ளதால் அடுத்து வரும் செவ்வாய் தசை எனக்கு
நன்மைகளைச் செய்யுமா?
பதில் :
வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்டு மாதம் 12- 8-2018 அன்று உங்கள் ஊருக்கு அருகில்
உள்ள ஈரோடு மாநகரில், மத்திய பஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள மல்லிகை அரங்கில்
காலை ஒன்பது மணி முதல் எனது தலைமையில் ஒரு ஜோதிட மாநாடு நடக்கிறது. அதில்
உங்களைப் போன்ற ஜோதிட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு மேடையில் நேருக்கு நேராக
விளக்கம் தர இருக்கிறேன். அங்கே நேரில் வாருங்கள். விளக்கம் தருகிறேன்.
மாலைமலரில் கிடைக்கும் ஒரு சிறிய பகுதியில் உங்களைப் போன்றவர்கள் கேட்கும்
கேள்விகளுக்கு விரிவான பதில் தர முடியாது.
வணக்கம் குரு ஐயா
ReplyDeleteஉங்கள் பதில்கள் மிக்க அருமை.
துலாம் லக்னம் தனுசு ராகு, ராகுவிற்கு வீடு கொடுத்தவன் நீச்சமாகி உச்ச செவ்வாய் சேர்க்கை பெற்று ஆட்சி பெற்ற சந்திரனுக்கு (வளர்பிறை) 7ல் கேந்திரம் இருந்தால் ராகு திசை கோதண்ட ராகுவாக நன்மை செய்வாரா அல்லது 6க்குடைய குரு வாக பாதகம் செய்வாரா?
nice explanation..
ReplyDeletehttp://www.dhivyarajashruthi.in
http://filminstitutechennai.in