ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி:8870998888
மகரம்:
செப்டம்பர் மாதம்
உங்களுக்கு சுமாரான மாதம்தான். வரப்போகும் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு
மகரத்திற்கு நல்லபலன்கள் நடக்கும். அடுத்த மாதம் முதல் மனம் உற்சாகமாக இருக்கும்.
எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள். எதையும், யாரையும்
சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து
உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும் மனநலமும் சீராக இருக்கும்.
வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். எவரிடமும் கடன் வாங்க தேவை இருக்காது. கடன்
வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி
இருக்கும்.
செவ்வாய், கேது
ராசியில் இணைந்திருப்பதால் சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். நீண்ட
நாளாக தரிசிக்க நினைத்திருந்த புனிதத்தலங்களை இப்போது தரிசிக்க முடியும்.
மகான்களின் ஆசி கிடைக்கும். சித்தர்கள் அடங்கிய ஜீவசமாதிக்கு சென்று வர முடியும்.
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் உங்கள்
பேச்சைக் கேட்டு நடப்பார்கள் கணவன் மனைவி உறவு சுமுகமாய் இருக்கும். மனைவிக்கு
ஏதேனும் நல்ல பொருளை பரிசளிக்க முடியும். வீடு வாகனம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
ஒருசிலர் இந்த மாதம் வாங்கவும் செய்வீர்கள்.
வேலை தொழில் வியாபாரம்
போன்றவைகளில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும். வியாபாரிகள் வேலைக்காரர்களை
நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் நல்ல
நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வுகள் உண்டு. கணவர் உங்கள் பேச்சுக்கு
மதிப்பு கொடுப்பார். மாணவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள்,
வியாபாரிகள், போன்ற அனைவருக்கும் நல்லமாதம்
இது. சுயதொழில் செய்பவர்கள், விமான நிலையங்களில்
பணிபுரிபவர்கள், இன்ஜினியர்கள், ஏற்றுமதி
இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட துறையினருக்கு நல்ல பலன்கள் நடைபெறும். ஏழரைச்சனி
நடந்து வருவதால் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிரமங்களை குறைக்கும்.
2,3,4,5,6,9,11,13,14,15
ஆகிய நாட்களில் பணம் வரும். 8-ந்தேதி காலை 10.29 மணி முதல் 10-ந்தேதி காலை 11.08
மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உங்களின் புதிய
முயற்சிகள்,
ஆரம்பங்கள் எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகளையும் செய்யக்கூடாது.
No comments :
Post a Comment