Tuesday, February 23, 2016

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 76 (23.2.2016)


ம். ரவிக்குமார், பாண்டிச்சேரி.

கேள்வி:

மணமாகி ஒன்பது வருடங்களாகிவிட்டது. குழந்தை இல்லை. குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளோம். எங்களுடைய ஜாதகத்தைப் பார்த்து ஒரு நல்வழி சொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


குரு,
கே
சூ,பு
சுக்
சந்
ராசி
செவ்,
சனி



செவ்
சூ,சுக்
ராசி
குரு,
பு
ல,சனி
ரா
சந்


பதில்:

(கணவனுக்கு மிதுன லக்னம், கும்பராசி. இரண்டில் செவ், சனி. பதினொன்றில் குரு, கேது. பனிரெண்டில் சூரி, புதன், சுக். மனைவிக்கு சிம்மலக்னம், தனுசுராசி. லக்னத்தில் சனி, ராகு. பத்தில் செவ். பதினொன்றில் சூரி, சுக். பனிரெண்டில் குரு, புத)

உங்கள் ஜாதகத்தில் புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து அந்த வீட்டை சனியுடன் இணைந்த நீசச்செவ்வாய் பார்த்து புத்திரஸ்தானாதிபதி சுக்கிரன் அந்த வீட்டிற்கு எட்டில் மறைந்து புத்திரகாரகன் குரு ராகு-கேதுக்களுடன் இணைந்ததால் புத்திரதோஷமும், மனைவி ஜாதகத்தில் புத்திர ஸ்தானாதிபதியும் காரகனுமான குருபகவான் பனிரெண்டில் மறைந்ததாலும் புத்திரதோஷம் உண்டானது.

மனைவிக்கு ராகுதசை நடந்து உங்களுக்கு ஐந்தில் ராகு இருப்பதால் தம்பதிகள் இருவரும் உங்களின் ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளவும். இன்னொரு ஜென்மநட்சத்திர நாளன்று ஆலங்குடி சென்று வழிபட்டு இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருக்கவும். இதோடு உங்கள் இருவரின் லக்னாதிபதியையும் வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் செய்ய வேண்டும். 2017-ம் ஆண்டு இறுதியில் குழந்தை பாக்கியம் உண்டு.

ஆர். எஸ். கல்யாண ராமன், பல்லாவரம்.

கேள்வி:

44 வயதாகியும் வெகுநாட்களாக திருமணத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. திருமண யோகம் உள்ளதா? தடைக்கான காரணம் என்ன? அடுத்து வரும் தசாபுக்திகள் எவ்வாறு உள்ளது?

சந்,சுக்
செவ்
சனி
சூ,பு
ராசி
ல,ரா
குரு


பதில்:

(மகரலக்னம், மீனராசி. லக்னத்தில் ராகு. இரண்டில் சூரி, புத. மூன்றில் சுக். நான்கில் செவ். ஐந்தில் சனி. பனிரெண்டில் குரு. 18.2.1972, காலை 5.25, திருச்சூர்)

மனைவியைக் குறிக்கும் ஏழாமிடத்தோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு ஏழாமிடத்தை வலுவான சனி செவ்வாய் பார்த்து குடும்பஸ்தானமான லக்னத்திற்கு இரண்டில் ஆறு, எட்டுக்குடையவர்கள் அமர்ந்து ராசிக்கு இரண்டில் செவ்வாய் அமர்ந்து கடுமையான தாரதோஷமும், புத்திரஸ்தானத்தில் சனி, ராசிக்கு ஐந்தில் கேதுவும் அமர்ந்த நிலையில் புத்திரகாரகன் குருவும் பனிரெண்டில் மறைந்து புத்திரதோஷமும் உண்டானதாலும் இதுவரை உங்களுக்கு திருமணம் ஆகவில்லை.

அதேநேரத்தில் தாம்பத்திய சுகத்தைக் கொடுக்கக் கூடிய உச்ச சுக்கிரதசை கடந்த இருபது வருடங்களாக நடந்து வருவதால் உங்களுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கவில்லை என்றும் நான் சொல்லமாட்டேன். மனைவி மூலமான நீடித்த தாம்பத்திய சுகம் இல்லை. அவ்வளவுதான். ஜாதகப்படி 2017 மார்ச்மாதம் ஆரம்பிக்க இருக்கும் கேதுபுக்தியில் திருமணமாகி அடுத்து நடைபெறும் அஷ்டமாதிபதி சூரியதசையில் மனைவியின் மூலமான பிரச்னைகளும் பிரிவுகளும் வழக்குகளும் உங்களுக்கு வரும்.

திருமணமும் நடைபெறும் கூடவே பிரச்சினைகளும் வரும் என்று பலன் சொல்லுவதற்கு எனக்கே வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? அனைத்தும் அவன் செயல். நான் ஒரு சாதாரண ஜோதிடன் மட்டும்தான். இதுபோன்ற ஜாதக அமைப்புகள் பூர்வஜென்ம கர்மவினையால் வருபவை. திருமணபாக்கியம் சிக்கல்களில் இருப்பதால் முறையான பரிகாரங்களைச் செய்த பின் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

ஆர். வரதராஜன், சென்னை.

கேள்வி:

எனது மகன் அவரது முறைப்பெண்ணை மூன்று வருடமாக காதலித்தார். ஜாதகம் பார்க்காமலேயே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நாங்கள் முடிவு செய்து இரண்டு வருடங்களுக்கு முன் திருமண தேதியும் குறித்த நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு எனக்கு இஷ்டமில்லை என்று சொல்லிவிட்டாள். எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பெண் கேட்கவில்லை. திருமணமும் நின்று விட்டது. அதிலிருந்து மகன் எங்களிடம் பேசுவது கிடையாது. நாங்கள் பேசினாலும் கோபமும், வெறுப்புமாக பேசுகிறார். வயதான காலத்தில் நானும் என் மனைவியும் மிகுந்த மனவேதனையில் உள்ளோம். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? எங்களிடம் அன்பாக பேசுவாரா? வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா? பரிகாரம் செய்ய வேண்டுமா?

சூ
ராசி
பு,சுக்
சந்
குரு
கே
ல,செவ்
சனி


பதில்:

(துலாம்லக்னம், மகரராசி. லக்னத்தில் செவ், சனி. இரண்டில் கேது. மூன்றில் குரு. ஒன்பதில் சூரி. பத்தில் புத. சுக்.)

லக்னத்தில் சனி, செவ்வாய் இணைந்துள்ள தோஷ அமைப்பால் உங்கள் மகனுக்கு நிச்சயித்தும் திருமணம் நடைபெறவில்லை. இதுபோன்ற ஜாதகங்களுக்கு 33 வயதில்தான் இந்த தோஷம் நிவர்த்தி அடையும்.

லக்னத்தோடு இரண்டு பாவக் கிரகங்கள் சம்பந்தப்பட்டு லக்னாதிபதியை உச்சசனி பார்த்து ராசியை செவ்வாய் பார்த்ததால் உங்கள் மகன் பிடிவாதமும், கோபமும் உடையவராகவும் தான் நினைப்பதே சரி என்று அடுத்தவரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத குணமுடையவராக இருப்பார்.

எங்களிடம் அன்பாகப் பேசுவாரா என்று கேட்டிருக்கிறீர்கள். மேலே சொன்ன குணமுடைய உங்கள் மகன் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்த விரும்பாத அழுத்தக்காரராகவே இருப்பார். திருமணத்திற்கு முன்பு வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் அடுத்து குருதசை நடக்க உள்ளதால் வங்கித்துறையில் வெளிமாநிலத்தில் இவருக்கு வேலை கிடைக்கும். முறையான பரிகாரங்களை எழுத மாலைமலரில் இடம் போதாது.

எம். கதிரவன், கோவை - 1.

கேள்வி:

செய்துவந்த தொழில் கடந்த ஒரு வருடமாக முடங்கிப்போனது. என்ன தொழில் செய்தால் முன்னேற்றமாக இருக்கும்? சொந்தவீடு, மனை, வெளிநாடு யோகம் உண்டா? எப்போது?

சுக்
பு
ராசி
சூ
குரு,
சனி
ல,ரா,
சந்,செ


பதில்:

(சிம்மலக்னம், சிம்மராசி. லக்னத்தில் செவ், ராகு. ஆறில் குரு, சனி. பத்தில் சுக். பதினொன்றில் புத. பனிரெண்டில் சூரி.)

‘’தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்...தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’’ என்று தமிழில் ஒரு அருமையான பழமொழி இருக்கிறது. 55 வயதிற்கு மேல் புதிதாக என்ன தொழிலைக் கற்றுக் கொண்டு முன்னேறப் போகிறீர்கள்?

உங்களுக்கு சிம்மலக்னம் சிம்மராசியாகி கோட்சாரத்தில் கடந்த ஒரு வருடமாக தொழில் ஸ்தானத்தை அர்த்தாஷ்டம சனி பார்ப்பதாலும் பிறப்பு ஜாதகப்படி ராகு தசையில் சனிபுக்தி நடந்து வருவதாலும் இருக்கும் தொழில் சரிவுக்கு உள்ளாகி இருக்கும். வீட்டில் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தாலும் இந்த சிக்கல்கள் வரும்.

இன்னும் இரண்டு மாதங்களில் புதன்புக்தி ஆரம்பிக்க உள்ளதால் தொழில் நிலைமைகள் சீரடையும். நம்பிக்கை இழக்க வேண்டாம். சொந்தமாக முதலீடுத் தொழில் 2018-ல் செய்யலாம். வீடு வாங்கும் யோகம் ராகுதசை சுக்கிரபுக்தியில் 2020-ம் ஆண்டு அமையும். ராகுதசை நடப்பதாலும் லக்னாதிபதி சூரியன் பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும் வெளிநாடு யோகம் உண்டு.

எஸ். செல்வ விநாயகம், ராசிபுரம்.

கேள்வி:

உலகம் போற்றும் என் உன்னத ஆசானே... திருப்பூரில் தங்களின் திருப்பாதங்களில் பணிந்து ஆசிபெறும்போது தாங்கள் என் தலையைத் தொட்ட அந்த நிமிடமே என் ஜோதிட வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும்பேறு. பேஸ்புக்கிலும் மாலைமலரிலும் தாங்கள் எழுதிவரும் சூட்சும விளக்கக் கட்டுரைகள் எப்போது புத்தகமாக வெளிவரும்?

பதில்:

வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் கிடைக்கும்.

காதல் வசப்பட்ட மகளின் எதிர்காலம் எப்படி?

எஸ். தங்கமணி, கோவை – 2.

கேள்வி:

தங்களைத் திட்டிக் கேள்வி கேட்ட பெண்ணிற்கே அன்பும் கருணையும் கொண்டு பதில் தந்த குருஜி அவர்களே... என் இரண்டு மகள்களில் பெரியவளான 17 வயது மகள் காதல் வசப்பட்டு படிப்பில் கவனமில்லாமல் இருக்கிறாள். நானும் கணவரும் படும் வேதனையைச் சொல்லமுடியாது. பெற்றோரின் கனவு மகளை நன்றாகப் படிக்க வைத்து எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுப்பதுதானே? ஆனால், இப்பொழுது அவளின் நடவடிக்கையால் அவளது எதிர்காலத்தை நினைத்து பயந்து கொண்டிருக்கிறோம். என் மகள் நன்றாகப் படிப்பாளா? அவளுக்கு எந்த வயதில் திருமணம்? சொந்தமா அன்னியமா? அவளது எதிர்காலம் எப்படி?

சந்,வி
சனி
சூ
ராசி
பு,ரா
சுக்
செவ்


பதில்:

(விருச்சிக லக்னம், மேஷராசி, ஆறில் குரு சனி, எட்டில் சூரி, ஒன்பதில் புத, ராகு, பத்தில் சுக், பனிரெண்டில் செவ் 7.7.1999 மாலை 5 மணி, பழனி)

பள்ளிப்பருவத்தில் சுக்கிரதசை நடக்கும் பெண்களின் பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் அக்கறையுடன் கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் கண்டிப்புக் காட்டும் அதேவேளையில் நட்புடனும் பள்ளியிலும் வெளியிலும் நடக்கும் எதையும் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற சுதந்திரத்தையும் தர வேண்டும் என்று அடிக்கடி எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.

உங்கள் பெண்ணிற்கு விருச்சிக லக்னமாகி லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தோடு தொடர்பு கொள்ளாமல் பனிரெண்டில் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து தனது ஆறாமிடத்தை தொடர்பு கொள்வதால் தற்பொழுது எவருடைய பேச்சையும் கேட்காத குணத்தை கொண்டிருப்பாள். அவளது லக்னாதிபதி செவ்வாயை நீசசனி பார்ப்பதும் இதனை நிரூபிக்கிறது.

மேலும் அவளது ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய், குரு ஆகிய நான்கு முக்கியக் கிரகங்களும் ராகுகேதுக்களின் சாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் ராகு பகவான் அஷ்டமாதிபதியின் இணைவைப் பெற்றுள்ளார். ஜாதகப்படி அவளுக்கு அடுத்து சுக்கிரதசையில் நீசச்சனியின் புக்தி ஏப்ரல் 2017 முதல் நடக்கவிருக்கிறது. நான்காமிட அதிபதியான சனிபகவான் நீசமாகி உள்ளார். நான்காமிடம் ஒரு பெண்ணுக்கு ஒழுக்கத்தைக் காட்டுவதாகும்.

தற்பொழுது மகளின் மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதாலும் நல்ல பலன் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதேநேரத்தில் 25 வயது முடிந்தவுடன் ஆரம்பிக்கும் சூரிய சந்திர தசைகள் அவளுக்கு யோகதசைகள் என்பதாலும் ராசியில் சூரியனும் சந்திரனும் ஆறு, எட்டில் இருந்தாலும் நவாம்சத்தில் இருவரும் உச்சமாக இருப்பதாலும் அவளது எதிர்காலம் கஷ்டப்படாமல் நன்றாகவே இருக்கும்.

No comments :

Post a Comment