கேள்வி:
        பி.இ. முடித்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தேன். கோர்ஸ் படிப்பதற்காக
        நாமக்கல் வந்துள்ளேன். பாஸ் செய்து விட்டேன். மீண்டும் வெளிநாடு
        செல்லலாமா? திருமணம் எப்போது? மனைவியோடு வெளிநாட்டில் வசிக்க வாய்ப்பு
        உள்ளதா? குருதசை எப்படி இருக்கும்? சூழ்நிலை காரணமாக கம்பெனி மாறிக்
        கொண்டே இருக்கிறேன். எப்போது ஒரே இடத்தில் வேலை செய்ய முடியும்? நல்ல
        சம்பளம் எப்போது கிடைக்கும்?
    
| 
ல
                 | |||
| 
ராசி
                 | |||
| 
சுக்,செ
                 | |||
| 
குரு,
                 
கே
                 | 
சனி
                 | 
சந்,சூ
                     பு | |
பதில்:
(மீனலக்னம், கன்னிராசி, ஆறில் சுக், செவ். ஏழில் சூரி, புதன். எட்டில் சனி.
    ஒன்பதில் குரு, கேது.)
நடைபெறும் தசாநாதன் குருபகவான் கேதுவுடன் இணைந்து எட்டில் உச்சமாக இருக்கும்
    சனியின் சாரம் பெற்றிருப்பதால் மனைவியுடன் வெளிநாட்டில்தான் இருப்பீர்கள்.
    திருமணம் நடைபெறுவதற்காகவே இந்தியா வந்திருக்கிறீர்கள். 33 வயதில் திருமணம்
    நடக்கும். கடந்த காலங்களில் கன்னிராசிக்கு ஏழரைச்சனி நடந்ததால் நிலையான வேலை
    இல்லாமல் இருந்தது. திருமணத்திற்கு பிறகு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை
    கிடைக்கும். குருதசைக்கு பிறகு வரும் சனி தசையில் சனி எட்டாமிடத்தில்
    சுபத்துவமாக இருப்பதால் வெளிநாட்டில் நீடித்து வெகுகாலம் இருப்பீர்கள்.
கவிதா, நாமக்கல்.
கேள்வி:
        தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை செய்கிறேன். அரசு வேலை கிடைக்குமா?
        தடைப்பட்டு கொண்டே வரும் திருமணம் எப்போது நடைபெறும்?
     
    
        மனதில் எப்போதும் பய உணர்வாகவே இருக்கிறது.  மனநல மருத்துவம் பார்க்கிறேன்.
        எப்போது சரியாகும்?
    
| 
ராசி
                 | |||
| 
சந்,சு
                     கே | |||
| 
ல,சூ
                     பு | 
குரு
                 | 
செ,
                     சனி | |
பதில்:
(விருச்சிகலக்னம், மகரராசி. லக்னத்தில் சூரி, புதன். மூன்றில் சுக், கேது.
    பதினொன்றில் செவ், சனி. பனிரெண்டில் குரு.)
லக்னத்தின் எட்டுக்குடையவன் அமர்ந்து லக்னமும், லக்னாதிபதியும் சனியுடன்
    சம்பந்தப்பட்டு ராசியும், ராகு-கேதுக்களுடன் இணைந்ததால் எதிலும் பயமும்,
    மனதில் எப்போதும் இனம் தெரியாத கலக்கமும் உங்களுக்கு இருக்கும். ஆயினும்
    திருக்கணிதப்படி புதன்-செவ்வாய் பரிவர்த்தனை என்பதால் திருமணத்திற்கு பிறகு
    நீங்கள் மருத்துவம் பார்க்க தேவையில்லாத அளவிற்கு குணமாவீர்கள்.
செவ்வாய், சனி இணைந்துள்ளதால் 35 வயதிற்கு பிறகுதான் திருமணம் நடக்கும்.
    குருபகவான் பனிரெண்டில் மறைந்து கடுமையான புத்திர தோஷம் இருப்பதாலும் திருமணம்
    தாமதமாகிறது. ராகுவிற்குரிய முறையான பரிகாரங்களை செய்யுங்கள். வரும் ஆகஸ்ட்
    மாதத்திற்கு மேல் எந்த நேரத்திலும் திருமணம் நடக்கும். அரசுவேலை வாய்ப்பு
    குறைவு.
பு. சீனிவாசன், அயனாவரம்.
கேள்வி:
        மகனுக்கு மூன்று வருடங்களாக பெண் பார்த்து கொண்டிருக்கிறோம். சரியான பெண்
        அமையவில்லை.
    
    ஏதாவது தடங்கல்
     
    
        நடந்து கொண்டே இருக்கிறது. எம்.இ. படித்து நல்ல வேலையில் இருக்கும்
        இவனுக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும் என்று தயவு செய்து கூறவும்.
    
| 
சுக்
                 | 
சூ,
                     பு | ||
| 
ராசி
                 | |||
| 
சந்
                 | |||
| 
கே
                 | 
ல,
                     குரு | 
செவ்,
                     சனி | |
பதில்:
(துலாம்லக்னம், மகரராசி. லக்னத்தில் குரு. மூன்றில் கேது. ஆறில் சுக். எட்டில்
    சூரி, புதன். பனிரெண்டில் செவ், சனி.)
ஒரு ஜாதகத்தில் சனி, செவ்வாய் 2, 7, 8, 12 போன்ற திருமணம் சம்பந்தமான
    பாவங்களில் இணைந்தாலே ஆணாக இருந்தால் 35 வயதும், பெண்ணாக இருந்தால் 30 வயது
    தாண்டியும்தான் திருமணம் ஆகும் என்பதை அடிக்கடி எழுதிக் கொண்டுதான்
    இருக்கிறேன். உங்கள் மகனுக்கு துலாம் லக்னமாகி குரு தசை நடப்பதும் தாமத
    திருமணத்திற்கு காரணம். வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே உங்கள் மருமகள்
    அடையாளம் காட்டப்படுவார். அடுத்த வருட ஆரம்பத்தில் மகனுக்கு திருமணம்
    நடக்கும்.
மகள் டாக்டர் ஆவாளா?
    
மஞ்சுளாசுந்தரி, சிங்காநல்லூர்.
கேள்வி:
எனது மகள் வரும் மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுதப்
     
    
        போகிறாள். டாக்டர் ஆகும் ஆசையில் கஷ்டப்பட்டு படித்து கொண்டிருக்கிறாள்.
        பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் வாங்கியும் உரிய பலன் எதுவும்
        கிடைக்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் டாக்டர் ஆவது பேராசை என
        அவளை மட்டம் தட்டி வருகிறார்கள். என் மகளின் ஆசை நிறைவேறுமா? அவளது
        எதிர்காலம் எப்படி இருக்கும்?
     
    மிகவும் கவலையாக இருக்கிறது. எனக்கு
    க்
     
    
        கிடைக்காத ஒவ்வொரு வாய்ப்பும் என் மகளுக்காவது கிடைக்குமா? இரண்டில் கேது
        உள்ளதே அவளும் கஷ்டவாழ்க்கைதான் வாழ்வாளா என்பதை தயவு செய்து கணித்து
        கூறும் படி கேட்டு கொள்கிறேன்.
    
| 
பு,
                     குரு | 
சூ,
                     சனி | 
சந்,
                     சுக் | |
| 
ராசி
                 | |||
| 
கே
                 | |||
| 
ல
                 | 
செவ்
                 | ||
பதில்:
(தனுசுலக்னம், ரிஷபராசி. இரண்டில் கேது. நான்கில் புதன், குரு. ஐந்தில் சூரி,
    சனி. ஆறில் சுக். பதினொன்றில் செவ். 18.4.1999, 10.50 இரவு, கோவை)
ஒளிக்கிரகங்களான சூரியனும் சந்திரனும் உச்சம் பெற்று லக்னத்திற்கு பத்தாம்
    வீட்டை குருபகவான் பார்த்து நவாம்சத்தில் செவ்வாய் உச்சம் பெற்ற ஜாதகத்தினைக்
    கொண்ட உங்கள் மகள் டாக்டர் ஆகாமல் வேறு யார் டாக்டர் ஆக முடியும்?
மருத்துவ படிப்புக்குரிய குருவும், செவ்வாயும் வலுப்பெற்று சூரியனும் உச்சம்
    பெற்றுள்ளதால் உங்கள் மகள் நிச்சயமாக மருத்துவராவார். எட்டுக்குடையவன்
    வளர்பிறை சந்திரனாகி சுபத்துவமாகி உச்சம் பெற்று எட்டாமிடத்தில் ராகு அமர்ந்து
    தசை நடத்துவதாலும் அடுத்து நடைபெற போகும் குரு, சனி தசைகள் வெளிநாட்டோடு
    தொடர்பு கொண்டிருப்பதாலும் உங்கள் மகள் வெளிநாட்டில் பிரபலமான டாக்டராக
    இருப்பாள். இரண்டில் கேது இருப்பது பாதகமில்லை. சரியான பருவத்தில் ஆட்சிபெற்ற
    லக்னாதிபதி குருவின் தசை நடக்க இருப்பதால் மகளின் எதிர்காலம் சிறப்பாக
    செழிப்பாக இருக்கும்.
பி.கே. பரந்தாமன், குடியாத்தம்.
கேள்வி:
        மகனுக்கு திருமணம் எப்போது? மாட்டுப்பெண் எவ்வாறு அமைவார்? திருமணம்
        தடபுடலாக நடைபெறுமா? வியாபாரம் மேலும் மேன்மையாகி கலெக்சன் எட்டுமா?
        அரசியல் தேவையா? வங்கி பூரிப்பு சேமிப்பு உண்டா?
    
    
| 
சந்,
                     செவ் | 
குரு,
                     சு,பு | 
சூ
                 | |
| 
ரா
                 | 
ராசி
                 | ||
| 
ல
                 | |||
| 
சனி
                 | |||
பதில்:
( மகரலக்னம் மீனராசி திருக்கணிதப்படி இரண்டில் ராகு மூன்றில் செவ்வாய் ஐந்தில்
    குரு சுக் புத ஆறில் சூரி பனிரெண்டில் சனி)
திருக்கணிதப்படி கேதுதசை சுக்கிரபுக்தியில் 2017 ஆரம்பத்தில் திருமணம்
    நடக்கும். ராகுவிற்குரிய முறையான பரிகாரங்களைச் செய்யவும். மருமகள் மேம்பட்ட
    இடத்திலிருந்து வருவாள். திருமணம் நன்றாகவே நடைபெறும்.
எட்டில் இருக்கும் தற்போதைய கேது தசைக்குப் பிறகு யோகாதிபதி சுக்கிரனின் தசை
    நடக்க உள்ளதால் சுக்கிர தசையில் திருமணத்திற்குப் பிறகு தொழில் மேன்மையாகும்.
    சந்திரனுக்குப் பத்தாமிடத்தை சூரியன் பார்ப்பதால் உங்கள் மகன் இப்போது
    அரசியலில்தான் இருப்பார். அரசியலும் சுக்கிர தசையில்தான் கைகொடுக்கும்.
    நீங்கள் கேட்கும் பூரிப்பு சேமிப்பும் அப்போதுதான்.
ஆர். கே. ராஜன் கடலூர் (ஓ டி).
கேள்வி:
        ஏப்ரல் பனிரெண்டாம் தேதிக்குப் பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்று
        பேரனுக்கு சொந்தக்காரப் பெண்ணை நிச்சயம் பேசி முடித்தோம். இப்போது
        தடைப்பட்டு விட்டது. எப்போது திருமணம் முடியும்?
    
    
| 
சந்,செ
                     குரு | |||
| 
சூ,பு
                     சு,ரா | 
ராசி
                 | ||
| 
ல
                 | |||
| 
சனி
                 | |||
பதில்:
(சிம்மலக்னம் ரிஷபராசி ஐந்தில் சனி ஏழில் சூரி புத சுக் ராகு பத்தில் செவ்
    குரு)
ராசிக்கு எட்டில் சனி ராசியில் செவ்வாய் என்பதோடு மட்டுமல்லாமல் லக்னத்திற்கு
    ஏழாமிடத்தை சனி பார்க்க ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய் பார்க்கிறார். இது
    போதாதென்று ராசிக்கும் லக்னத்திற்கும் இரண்டாம் வீடுகளையும் சுக்கிரனையும்
    வேறு சனி பார்க்கிறார். தன் பங்கிற்கு ராகுவும் லக்னத்திற்கு ஏழில் அமர்ந்து
    சுக்கிரனோடும் இணைந்து தாம்பத்திய சுகம் கிடைக்க விடாமல் தடுக்கிறார்.
கடுமையான தாரதோஷத்தோடு ஐந்தில் சனி இருப்பதால் புத்திர தோஷமும் அமைந்து
    தற்போது சுபத்துவமோ சூட்சும வலுவோ அடையாத ராகு தசை நடப்பதால் உங்கள் பேரனுக்கு
    முப்பது வயதிற்கு மேல்தான் திருமணம் நடக்கும். முன்னதாக நடைபெற வேண்டுமெனில்
    லக்னாதிபதி சூரியனுக்கும் ராகுவிற்கும் உரிய பரிகாரங்களைச் செய்யுங்கள்.
குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்?
    
ஆ. வாசுதேவன், திருச்சி.
கேள்வி:
        மகன் மகள் ஜாதகத்தை இணைத்துள்ளேன். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் எப்போது
        கிடைக்கும்? மகனுக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் உள்ளதா?
    
    
| 
ல,சந்
                     ரா | |||
| 
ராசி
                 | |||
| 
செவ்,
                     கே | 
சூ,பு
                     சு,குரு சனி | ||
| 
ல,சந்
                 | 
ரா
                 | ||
| 
ராசி
                 | |||
| 
செவ்,
                     குரு | 
சுக்,
                     சனி | 
சூ,பு
                 | |
பதில்:
(கணவனுக்கு மிதுன லக்னம் மிதுனராசி லக்னத்தில் ராகு ஐந்தில் சூரி புத சுக்
    குரு சனி ஏழில் செவ் கேது மனைவிக்கு மேஷலக்னம் மேஷராசி இரண்டில் ராகு ஆறில்
    சூரி புத ஏழில் சுக் சனி ஒன்பதில் செவ் குரு)
உங்கள் மகன் ஜாதகத்தில் குரு சனியைத் தவிர ஏழு கிரகங்களும் லக்னமும் ராகுவின்
    திருவாதிரை சுவாதி நட்சத்திரத்திலும் கேதுவின் மூல நட்சத்திரத்திலும் இருப்பது
    ஒரு அபூர்வமான தடை அமைப்பு. இத்தகைய அமைப்பில் சனி உச்சமாகி சுக்கிரன்
    ஆட்சியான காரணத்தாலும் இவர்கள் சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும்
    தாம்பத்தியசுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் மகனுக்கு சனிதசை
    சுக்கிரபுக்தியில் திருமணம் ஆகியிருக்கும்.
ஆனால் சூரியனுடன் இணைந்துள்ள புதன் சுக்கிரன் குரு ஆகிய மூவருமே அஸ்தங்கம்
    அடைந்துள்ளதும் பெரும்பாலோர் ராகுவின் சாரத்தில் அமர்ந்து லக்னமும் ராசியும்
    ராகு சம்பந்தம் பெற்றதும் பாக்கியத்தடை அமைப்பு. மருமகளின் ஜாதகத்திலும்
    புத்திரஸ்தானதிபதியான சூரியன் ஆறில் மறைந்து ஆறுக்குடையவனுடன்
    இணைந்திருக்கிறார். மருமகளுக்கு அஷ்டமச்சனியும் நடக்கிறது.
தம்பதிகள் இருவரும் கணவனின் நட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு
    ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி மறுநாள் அதிகாலை ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து
    கொள்வதோடு புதனுக்குரிய முறையான பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும்.
    மகனுக்கு அடுத்து நடக்க இருக்கும் தசைகள் வெளிநாட்டு அமைப்பைக் காட்டுவதால்
    வெளிநாடு செல்வார்.
 

 
No comments :
Post a Comment