துலாம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் இருக்கிறார். இன்னொரு
    யோகாதிபதியான புதன் ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது இந்த மாதம் துலாம்
    ராசிக்கு பணவரவுகளையும், குடும்ப சந்தோஷங்களையும் தருகின்ற ஒரு அமைப்பு
    என்பதால் மேமாதம் துலாத்திற்கு நல்ல மாதமாக அமையும். ஒரு சிறப்பு பலனாக சிறிய
    மனஸ்தாபத்தினால் சண்டையிட்டுக் கொண்டு யார் முதலில் பேசுவது என்ற ஈகோவினால்
    பிரிந்திருந்தவர்கள் இந்த மாதம் ஒன்றிணைவீர்கள். மூன்றாம் மனிதரின்
    தலையீட்டினால் குடும்ப சிக்கல்களுக்கு ஆளாகி பிரிந்திருந்த கணவன்-மனைவியினர்
    உண்மை நிலையினை அறிந்து சேருகின்ற மாதம் இது.
ஐந்தில் இருக்கும் கேதுவால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் ஆதரவும்
    தகுந்த நேரத்தில் உதவியும் இப்போது கிடைக்கும். அரசு, தனியார்துறை
    ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. அம்மாவின் வழியில்
    மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின்
    உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு
    இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள்
    இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும்.
மாத ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் குறைவான மாதமாக இது தொடங்கினாலும் இறுதியில்
    கிடைக்கும் பணவரவால் உங்களுக்கு நிறைவான மாதமாகவே இருக்கும். தந்தை வழியில்
    நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம்
    உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு
    முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை
    பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு சுமாரான
    நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும்.
    சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள்.
2,5,11,19,20,21,22,24,25,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 25 ம் தேதி காலை
    8.29 மணி முதல் 27 ம் தேதி காலை 7.34 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
    புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ
    சண்டையோ செய்யாதீர்கள்.
 

 
No comments :
Post a Comment