Thursday, January 9, 2025
Do astrologers know everything?...(EB - 021)
Astrologer Aditya Guruji
Cell : +91 9768 99 8888
I could understand from the letters and phone calls I
received from the readers that; these Pancha Maha Purusha Yoga articles have
influenced many.
More specifically the writeups about Mars and Saturn have been
perceived in the exact manner I anticipated.
A legendary astrologer aged about 84 years, from the locality of Tiruchi dist., spoke to me and blessed me after reading my articles.
I am sure I don’t deserve the words he used to praise me, but still, I bow down to accept the same with due respect.
Wednesday, January 8, 2025
Tuesday, January 7, 2025
Monday, January 6, 2025
Sunday, January 5, 2025
Saturday, January 4, 2025
Friday, January 3, 2025
Thursday, January 2, 2025
How does Saturn hold the ‘longevity Karakathva’?...(EB - 020)
Astrologer Aditya Guruji
Cell : +91 9768 99 8888
Some astrologers say it is good to have an exalted Saturn in
the birth chart, and the children born with Saturn’s exaltation are very lucky.
It is false.
If it is true that all exalted planets do good, the Rishis
would not have separated the planets as benefic and malefic.
They would not have segregated the planets Karakathva as good and bad. Instead, they would have said in a few lines that the exalted planets are beneficial.
Our Maharishis have never said anywhere that the powerful planets give good benefits to mankind.
They have clearly said, a powerful planet will powerfully give its Karakathva.
Tuesday, December 31, 2024
Monday, December 30, 2024
குருஜியின் வார ராசி பலன்கள் (30.12.2024–05.01.2025)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மேஷம்:
மேஷ ராசிக்கு பெரிய குறைகள் இல்லாத வாரம் இது. உங்களில் சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ எதிர்பாராத நன்மைகள் இருக்கும் வியாபாரிகளுக்கு நன்மைகளும் மறைமுகமான வருமானங்களும் இருக்கும். சகோதரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. ஆயுதங்களை கையில் வைத்து பணிபுரியும் டெய்லர் போன்ற துறையினருக்கு லாபங்கள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் பெரிய உதவிகளை செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும். எதையும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள்.
Sunday, December 29, 2024
Saturday, December 28, 2024
Friday, December 27, 2024
Thursday, December 26, 2024
Wednesday, December 25, 2024
மீனம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
மீனம்:
மீன ராசிக்கு இந்த
வருடம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி ஜென்மச் சனி ஆரம்பிக்க இருக்கும் நிலையில் 2025 ஆங்கிலப்
புத்தாண்டு பிறக்கிறது. அதே நேரம் உங்கள் ராசிநாதன் குருபகவானும் இந்த வருடம்
முழுவதும் சாதகமான பலன்களை செய்யும் நல்ல இடங்களில் இல்லை.
உங்கள் ராசிக்கான பலன்களை இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லுவேன். அதாவது இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான அனைத்து விஷயங்களிலும் முனைப்புடனும் அக்கறை மற்றும் கவனத்துடனும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு ஜென்மச் சனி அமைப்பு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்றுக்கான நன்மைகளைச் செய்யும்.
கும்பம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
கும்பம்:
கடந்த ஐந்து வருடங்களாக
ஏழரைச் சனியின் ஆதிக்கத்தினால் எந்த நல்லவைகளும் நடக்காமல் கும்ப ராசிக்காரர்கள்
முடங்கிப் போயிருக்கிறீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற
அமைப்புகளில் சங்கடங்களைத் தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கும்ப ராசிக்காரர்களில் அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இன்னும் கடுமையான குழப்ப நிலைகளில் இருந்து வருகிறீர்கள். சில சதயத்தினருக்கும் பிரச்சினைகள் தீருவது போன்ற தோற்றம் இருந்தாலும் முழுவதுமாக எந்த நல்லவைகளும் நடக்கவில்லை. இது போன்ற நிலைகள் இந்த வருடம் முதல் விலக ஆரம்பிக்கும் என்பதால் 2025 ம் ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தரும்.
மகரம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு
மிகப்பெரிய நிம்மதியாக கடந்த சில ஆண்டுகளாக
ஏழரைச் சனியாக உங்களுடைய சிந்தனை, செயல்திறன் ஊக்கம் ஆகியவற்றை முடக்கிப்
போட்டுக் கொண்டிருந்த சனிபகவான் இந்த வருடம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல்
விலகுவதால் 2025
-ம்
வருடம் நல்ல வருடமே.
கடந்த காலங்களில் பெரும்பாலான மகர ராசிக்காரர்கள் மனக் கஷ்டங்களையும் வாழ்வில் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இனிமேல் இருக்காது. எல்லா விஷயங்களும் இனி நிதானமாக நல்லபடியாக நடக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே உங்களுக்கு வெற்றியைத் தரும்.
தனுசு:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
தனுசு:
தனுசுக்கு நன்மைகளைத்
தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். இந்த வருடம்
இருக்கும் கிரக நிலைகள் உங்களுக்கு
ஆனந்தத்தையும்,
லாபத்தையும்
தரும் என்பதால் உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை.
வருடத்தின் பிற்குதியில் ராகுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரும் வலுவான மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். அதேபோல உங்கள் ராசிநாதன் குருவும் இந்த வருடம் மே மாதம் 14 ஆம் தேதியிலிருந்து யோகங்களை தரக்கூடிய ஏழாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போகிறார். இதன் மூலம் இந்த வருடத்தில் உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.
விருச்சிகம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
விருச்சிகம்:
விருச்சிக
ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும்
புத்தாண்டான 2025-ம் வருடம் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல
பலன்களைக் கொடுக்கின்ற வருடமாக இருக்கும்.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீச்சம், மற்றும் வக்ரம் எனும் பலவீன நிலையை அடைந்திருக்கிறார். ஜூன் மாதத்திற்கு பிறகே அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார். அதேநேரத்தில் இப்பொழுது ஏழாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருக்கும் குருவும் எட்டாமிடத்திற்கு மாறுவார் ஆகவே பெரிய முன்னேற்றங்கள், கஷ்டங்கள் எதுவும் இல்லாத ஒரு இயல்பான வருடமாகவே இது அமையும்.
துலாம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
துலாம்:
துலாம்
ராசிக்காரர்களுக்கு 2025 -ம் வருடம் நல்லபலன்களைத் தரும் வருடமாக இருக்கும்.
குறிப்பாக சென்ற வருடத்தை விட பொருளாதார மேன்மைகளும் நல்ல பணவரவும் நிலையான வேலை, தொழில், வியாபாரம்
அமைப்புகளும் இந்த வருடம் இருக்கும்.
இந்த வருடம் மார்ச் மாதம் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நல்லவிதமாக அமைந்துள்ள நிலையில், அடுத்து நடக்க விருக்கும் குருப் பெயர்ச்சியும் உங்களுக்கு மிகப் பெரிய நன்மைகளையும், அடுத்தவர்களிடமிருந்து சரியான நேரத்தில் நேர்மையான வகையில் உதவிகளையும், நல்ல பெயரையும் பெற்றுத் தரும் என்பதால் 2025 ம் வருடம் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறந்த வருடமாகவே இருக்கும்.
கன்னி:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ம் வருடம் மிகவும் நல்ல பலன்களை செய்யும். கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் நடக்க வாய்ப்பில்லை. வருடத்தின் ஆரம்ப நாளிலும், வருடம் முழுமையும் கிரக நிலைமைகள் நன்றாக இருப்பதால் 2025 ஆம் வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
சிம்மம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
சிம்மம்:
சிம்ம
ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் 2025 புத்தாண்டு நிதானமான பலன்கள் நடக்கும்
ஆண்டாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைகளுக்குப் பின்
நிறைவேறும் வருடம் இது.
இந்த வருடத்தின்
கிரகநிலைகளை எடுத்துக் கொண்டால் வருடத்தின் முதல் பகுதியில் உங்கள் யோகாதிபதியான குரு,
பத்தாம் இடத்திலும், அதன் பின்பு மிகப்பெரிய யோகங்களை செய்யக்கூடிய, நல்ல பண
வரவினை தரக்கூடிய பதினோராம் இடத்திலும் இருப்பது நல்ல அமைப்பு. எனவே வருடம்
முழுவதும் குருவின் மூலமாக நல்ல பலன்களும், கேட்கும்
இடங்களில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்தலும் இருக்கும்.
அதேநேரத்தில் இந்த
வருடம் மார்ச் மாதம் முதல் சனி பகவான் நன்மைகளை தர இயலாத அமைப்பில், அஷ்டமச்சனியாக
மாற இருப்பதால் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில்
மந்தமான பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
பணவரவு குறையும். ஆகவே எதுவும் புதியதாக ஆரம்பிப்பதற்கு இந்த வருடம் ஏற்றதல்ல.
சனிபகவான் நம்முடைய
மனதைக் குழப்பி புதிய முயற்சிகளில் இறங்க வைத்து அதில் சிக்கல்களை உருவாக்கி ஒன்றை
நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலி வாலைப் பிடித்தது போன்ற ஒரு நிலையை
உருவாக்குவார் என்பதால் இந்த வருடம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
மேலும் ஏதேனும் ஒரு
சொத்தை விற்றோ,
அடமானம்
வைத்தோ,
கொலட்ரால்
கொடுத்தோ தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். அதேபோல உங்களின் சேமிப்புகளையும்
ரிஸ்க்கான துறைகளில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த ஒரு பலனை தவிர்த்து 2025 புத்தாண்டு உங்களுக்கு நல்ல அமைப்புகளையே
தரும். எனவே சிம்ம ராசிக்காரர்கள் இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில்
கவனமாக இருப்பது நல்லது.
ஒரு சிறப்புப் பலனாக
எந்தக்காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில்
செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை
விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம்.
சிலருக்கு இப்போது
இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைவந்து அதைப் பறந்து பிடிக்கப் போய் “உள்ளதும்
போச்சுடா நொள்ளைக் கண்ணா” கதை வரும் என்பதால் வேலை பார்க்கும் இடங்களில்
கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இருக்கும் வேலையை
விடுத்து அடுத்த வேலைக்கு மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக வேலையில் இருந்து கொண்டே
மாறுதலுக்கு முயற்சி செய்ய வேண்டும். அடுத்த வேலைக்கான உறுதி ஆர்டர் வந்த பின்பு
இருக்கும் வேலையை விடுவது நல்லது. சிலநேரங்களில் வேலைமாற்றத்திற்குப் பின்
முன்பிருந்த வேலையே அருமை என்று நினைக்க வைப்பார் சனி.
முப்பது வயதுகளில்
இருப்பவர்கள் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள். குறிப்பாக
பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க
முடியாத நிலை போன்றவைகள் இருக்கும். பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள்
நடப்பவர்களுக்கு நான் மேலே சொன்ன சாதகமற்ற பலன்கள் இருக்காது.
ஆயினும் அஷ்டமச்சனி
என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல்
இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்
தரும் என்பதால் இளைய பருவ சிம்ம ராசிக்காரர்களைப் பொருத்தவரை இந்த வருடம்
அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த
வருடத்தின் பிற்பகுதியில் நடக்க இருக்கும் குருமாற்றம் உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே
அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே நடக்க
இருக்கும் எதையும் “நெகடிவ்” ஆக பார்க்காமல் சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற
வேண்டியது அவசியம்.
அரசு தனியார்துறை
ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை
இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள். முதுகுக்குப் பின்னே
பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை
ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.
மேலதிகாரிக.ளிடம்
அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு
இருக்கிறது. சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள்
எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு
விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.
பணியாளர்களுக்கு
உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு
வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும்
துறையினருக்கு இந்த வருடம் அலைச்சலான இடத்திற்கு மாறுதல்களும் அதிகமான வேலை
இருக்கும் நிலைகளும் உண்டு.
தொழிலாளர்களுக்கும்
வேலைசெய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில்
மாற்றம் வரலாம். பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு
விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே
சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.
தொலைக்காட்சி
சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத் துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி
சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான
அடிப்படை கட்டமைப்புக்கள் நடக்கும்.
சிலர் கோவில்
திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம்
செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும்
பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின்
திருவிடம் போன்ற புனிதத்தலங்களுக்குப் போக முடியும்.
நிலம் வீடு போன்றவைகளை
வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.
வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய
வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.
வியாபாரிகளுக்கு
கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம்
கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.
இளைஞர்கள் காதல்
விவகாரங்களில் திசை திரும்புவீர்கள். மன அழுத்தம் தரக் கூடிய விஷயங்கள் இப்போது
நடக்க வேண்டும் என்பதால் இந்த வயதிற்கே உரிய விஷயங்களில் உங்கள் கவனம் செல்லும்.
காதலித்து,
பிறகு
அதில் தோல்வியைக் கொடுத்து எதிர்பாலினத்தவரை புரிந்து கொள்ளும் அனுபவங்கள் இப்போது
நடக்கும். எனவே எதையும் திடமான மனதுடன் அணுகுவது நல்லது.
மாணவர்கள் படிப்பில்
கவனமாக இருங்கள். இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட்
அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளைய பருவத்தினர் தங்களின்
ஆக்க சக்தியை கேளிக்கை உல்லாசம் போன்றவைகளில் வீணடிக்காமல் எதிர்கால முன்னேற்றத்தில்
கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது.
படிப்பு, மற்றும்
வேலைக்காக வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள்.
சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய
நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர்
இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம்
மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.
மறைமுகமான வழிகளில்
சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும்
புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும்
விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி
செய்யுங்கள்.
தேவையற்ற விவகாரங்களில்
தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த
காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால் எங்கும்
எதிலும் எச்சரிக்கை தேவை.
யூகவணிகம், பங்குச்சந்தை
முதலீடு,
வட்டிக்கு
பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு
ஆளாகும் நிலை வரலாம்.
இந்த காலகட்டத்தில் சிறு
துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே
கடன் சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தேவையற்ற விஷயங்களில்
மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும்
என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும்
கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட
செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
மொத்தத்தில் இந்த ஆண்டு சிம்மத்திற்கு
எதிர்கால நன்மைகளைத் தரும் என்பதால் துளியும் கவலைகளுக்கு இடமில்லை.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
கடகம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு
2025 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில்
முன்னேற்றங்களையும் கொடுக்கும் வருடமாக இருக்கும். கடந்த மூன்று வருடங்களாக
கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத கடகத்தினருக்கு பிறக்க இருக்கும்
புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். இப்போது உங்களை வாட்டி வதைத்துக்
கொண்டிருக்கும் அஷ்டமச் சனி வரும் மார்ச் மாதம் முடிவடைகிறது.
மூன்று வருடங்களாக சனியின்
ஆதிக்கத்தினால் பெரும்பாலான கடகத்தினர் சாதகமற்ற பலன்களை அனுபவித்து வந்தீர்கள். அஷ்டமச்
சனி முடிந்த பிறகு வாழ்க்கை நல்ல விதமாக செட்டில் ஆகும் என்பது ஜோதிடப்படி
உறுதியான ஒன்று. எனவே 2025-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே சிக்கல்கள் அனைத்தும்
தீர்ந்து இந்த ஆண்டு கடகத்தினர் அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள் என்பது உறுதி. 2025
-ம் வருடம் நல்ல திருப்புமுனைகளையும் உங்களின் எதிர்கால நல்வாழ்க்கைக்கு தேவையான
அஸ்திவாரங்களையும் அடிப்படைகளையும் அமைத்து தரும்.
வருட ஆரம்பமே பதினோராமிடத்தில்
குரு அமர்ந்து அமர்க்களமாக ஆரம்பிப்பதால் இந்த வருடம் மிகுந்த நன்மைகள் உண்டு.
உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில்
தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும்
இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன.
சொந்தத் தொழில் தொடங்க
அருமையான நேரம் இது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்து
விட்டது. வியாபாரிகளுக்கு இது வசந்த காலம். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக்
கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
பணியாளர்களுக்கு நல்ல
சம்பளத்துடன் நினைத்து போலவே வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை
உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும். சில தொழில் முனைவோர்கள்
நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன்
எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.
விவசாயிகள் கலைஞர்கள்
போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும்
நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது.
இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள்.
அருமையான வீடு கட்டலாம்.
பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு.
வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல்
வாங்குவீர்கள்.
வருட ஆரம்பத்தில்
வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால்
பேச்சினாலேயே மற்றவர்களை கவர்ந்து அதனால் லாபமும் அடைவீர்கள். பேசுவதன் மூலம் பணம்
வரும் துறைகளான ஆசிரியர் பணி, மார்கெட்டிங் போன்ற விற்பனைப் பிரிவில்
உள்ளவர்கள்,
ரியல்
எஸ்டேட் தொழிலர்கள், கவுன்சிலிங் போன்ற ஆலோசனை சொல்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த
வருடம் மிகவும் நன்மைகளைத் தரும்.
வீட்டில் சுப
நிகழ்ச்சிகள் தடங்கலின்றி மனநிறைவுடன் நடக்கும். புத்திர பாக்கியம்
தாமதமானவர்களுக்கு வாரிசு உருவாகி தவழ்ந்து விளையாடப் போகிறது. பெண்கள் மிகுந்த
மேன்மை அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அவஸ்தைப்பட்ட நிலைமை இனிமேல் மாறி நிம்மதி
கிடைக்கும் வருடம் இது.
இளைய பருவத்தினருக்கு
படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும்.
வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன.
தொழிலதிபர்கள்,
அரசியல்வாதிகள், அரசு, தனியார்துறை
ஊழியர்கள்,
விவசாயிகள்
உள்ளிட்ட எல்லோருக்குமே இது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும் வருடமாக இருக்கும்.
மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை
மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள்.
எதிர்காலத்திற்கான சேமிப்பு இருக்கும்.
மகன் மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த முடியும். பேரன் பேத்திகள் மூலம் நல்ல
சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். வயதானவர்களின் உடல் நிலையில் நல்ல
முன்னேற்றம் இருக்கும்.
முதியவர்களின் பேச்சை
வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும்.
ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர
யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும்.
கேட்கும் இடத்திலிருந்து
உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள்
ஒருவருக்கு செய்த உதவியால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள் அவர்
மூலமாக கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும்
கை கொடுக்கும். எதிர்காலத்திற்கான சேமிப்புகள் செய்ய முடியும். பிறப்பு ஜாதகத்தில்
தசாபுக்திகள் சாதகமாக அமைந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பிரபலமாவதற்கான
வாய்ப்புகள் உள்ளன.
எல்லா வகையிலும் நல்ல
மாறுதல்கள் இருக்கும் வருடம் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி
விடுதி,
லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ்
போன்றவைகளில் சிலருக்கு வருமானம் வரும். மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்
துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான
சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
மாணவர்களுக்கு இது
மனதில் பதிந்து படிக்கும் வருடம். எல்லா வகையிலும் ஜாலியான இருப்பீர்கள்.
இளைஞர்களும்,
யுவதிகளும்
தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல்
வரும் வருடம் இது.
சிலருக்கு
பாகப்பிரிவினையாக உங்கள் பெயரில் ஏதேனும் சொத்து கிடைக்கும். சகோதர உறவு
அனுசரணையாக இருக்கும். சிலர் அறப்பணிகளில் ஈடுபடவோ, கோவில் கட்டி
கும்பாபிஷேகம் செய்வதற்கோ வாய்ப்பு இருக்கிறது. வருட பிற்பகுதியில் வீடு, வாகன, தாயார்
விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில்
செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.
சிலருக்கு வெளிநாட்டுக்
கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு
மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக்கும். பணவரவில்
தடைகளோ,
பொருளாதார
கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும்
உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.
வாக்கு ஸ்தானம்
வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.
குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான
அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். வருடத்தின் ஆரம்பத்திலேயே
சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.
இளைய பருவத்தினருக்கு
இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம்
நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில்
நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை
எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.
கணவன் மனைவி உறவு
சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம்
அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம்
போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று
வருவீர்கள்.,
ஏற்றுமதி இறக்குமதி
போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள், வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை
வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே
தொழில் செய்பவர்கள் போன்ற கடக ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும்.
குலதெய்வத்தின் அருளைப்
பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய
மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி
பெறும் பாக்கியம் கிடைக்கும்.
உடல்நிலையும் மனநிலையும்
தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில்
நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில்
இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார
வசதிகள்,
ஆதரவான
போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி
அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம்
அனைத்தும் சாதகமாகும்.
கிரகநிலைமைகள் கடகத்திற்கு
சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும்
முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள்
இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.
எது கிடைக்காமல்
இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது
நடக்கும். எனவே இந்த மேன்மைமிகு புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும்
தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
மிதுனம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
மிதுனம்:
மிதுனத்திற்கு பிறக்க
இருக்கின்ற புத்தாண்டு முன்னேற்றங்களையும், விரயங்களையும் தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
குறிப்பாக இந்த புத்தாண்டின் ஆரம்ப மாதங்களில் திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச் செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை நடத்தி முடிப்பீர்கள்.
ரிஷபம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு
பிறக்க இருக்கின்ற புத்தாண்டு கூடுதல் நன்மைகளை தரும் வருடமாக இருக்கும்.
மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனிபகவான் 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், வரும் மார்ச் 29 ஆம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலமாக ரிஷப ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு சனி வர இருப்பது ரிஷபத்திற்கு மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும்.
மேஷம்:2025 -ஆங்கில புத்தாண்டு பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
மேஷம்:
மேஷ ராசிக்கு பிறக்க
இருக்கின்ற புத்தாண்டு எதிர்காலத்திற்கான
மாற்றங்களை தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
மேஷத்திற்கு இந்த வருடம் முதல் ஏழரைச்சனி அமைப்பு ஆரம்பிக்கிறது. வரும் மார்ச் 29-ம் தேதி நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து விரையச்சனி எனும் நிலை பெறுகிறார். அதைப் போலவே இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் நீச்சம், வக்ரம் எனும் பலவீன நிலையிலும் இருக்கிறார்.
2025 - புத்தாண்டு பொதுப்பலன்கள்
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
2025- புத்தாண்டு இம்முறை செவ்வாய்க்கிழமை இரவு, புதன்
அதிகாலை,
மார்கழி 17ம் நாள், பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி,
கன்னி லக்னத்தில் உதயமாகிறது.
எந்த வருடமாக இருந்தாலும் டிசம்பர் மாதம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி எப்போதுமே கன்னி லக்னமாகவே இருக்கும். இது நிலையானது. ஒருபோதும் மாறாதது.
Tuesday, December 24, 2024
Monday, December 23, 2024
Saturday, December 21, 2024
Friday, December 20, 2024
Thursday, December 19, 2024
Wednesday, December 18, 2024
THE NUANCES OF BENEFIC AND MALEFIC...(EB - 019)
Astrologer Aditya Guruji
Cell : +91 9768 99 8888
In the last chapter, we discussed the inner-circle planets
Moon, Venus, and Mercury, as well as Mars which is in the outer-circle. Now we
can see Jupiter and Saturn’s distance and their point/kala.
The largest planet in the solar system is Jupiter which takes 12 years to rotate Sun.
Jyothish Sastras and texts say Jupiter is the prime natural benefic planet.
It is in the distance of 77.80 crore km from the Sun and it
is 3 times far away as compared to Mars’ distance.
Jupiter is at a distance of 62 crore km from the Earth. Despite this distance, Jupiter’s point/kala is 10 on the Earth i.e., 33.3% of the Sun’s.
Tuesday, December 17, 2024
Monday, December 16, 2024
Sunday, December 15, 2024
Saturday, December 14, 2024
Friday, December 13, 2024
Thursday, December 12, 2024
Wednesday, December 11, 2024
Tuesday, December 10, 2024
Monday, December 9, 2024
குருஜியின் வார ராசி பலன்கள் (09.12.2024–15.12.2024)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மேஷம்:
மேஷ ராசியின் நல்ல வாரம் இது. நான்காம் அதிபதி சந்திரன் பௌர்ணமியை நோக்கி சென்று கொண்டிருக்க, இந்த வாரம் குருவும், சந்திரனும் இணைந்து குருச்சந்திர யோகம் உண்டாவது, உங்களுக்கு நல்லவைகளைச் செய்யும் என்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை சம்பந்தமான முன்னேற்றங்கள் இருக்கும். குறிப்பாக முனைவர் பட்டம், எம்.பில், சி.ஏ போன்றவைகளை முடிக்க முடியாமல் இருந்தவர்கள் பட்டம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வீர்கள். சனி 11 ல் இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தையும் உங்களால் சமாளிக்க முடியும்.