கைப்பேசி : +91 8286 99 8888
கடகம்:
மாத ஆரம்பத்தில் தனாதிபதி சூரியன் வலுவான நிலையில் இருந்தாலும் அவரது எதிரியான கேதுவுடன் நெருங்கி இருப்பதாலும், மாதம் முழுவதும் ராசியை சனி பார்ப்பதாலும் பிடிக்காத ஒருவருடன் ஒரே அறையில் இருப்பது போன்ற சங்கடமான நிலைமை இந்த மாதம் கடக ராசிக்காரர்களுக்கு இருக்கும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை தவிர்க்க முடியாமல் இப்போது செய்ய வைக்கப்படுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் இந்த நிலைமை மாறும். யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதால் பிற்பகுதி நாட்களில் அனைத்தையும் நீங்கள் சீர்செய்து கொள்ளும் மாதமாக டிசம்பர் இருக்கும்.
ராசிக்கு
சனி பார்வை இருந்தாலும், சனி சுக்கிரனால் சுபத்துவம் அடைவதாலும் ராஜ யோகாதிபதி செவ்வாய் ஆட்சி நிலை பெறுவதாலும்
கடந்த காலங்களில் உடலிலும், மனதிலும் பின்னடைவுகளை
சந்தித்து கொண்டிருந்த கடக ராசிக்காரர்கள்
உற்சாகம் அடைவீர்கள். சனி சுக்கிர இணைவால் கடகத்தினர் இனிமேல் அனைத்து
சிக்கல்களில் இருந்தும் விடுபட தொடங்குவீர்கள். ஐந்திற்குடைய செவ்வாய் வலுத்தாலும்
காரகன் குரு எட்டில் மறைவதால் பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த
காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் பிரச்னையை
சுலபமாக சமாளித்து விடுவீர்கள்
ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன்
செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். தாமதித்து
வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள்
தீரத் தொடங்கும். செலவுகளை சுருக்க
வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு
கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு நீங்கள்தான்
உதவி செய்யும்படி இருக்கும். என்னதான் அவர்களுக்கு செய்தாலும் எனக்கு ஒன்றுமே
செய்யவில்லை என்று சொல்வதையும் கேட்க
வேண்டியிருக்கும்.
யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் வலுப் பெறுவதால் இந்த மாதம் உங்களுக்கு
நல்லமாதமே.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment