ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மிதுனம்:
மாத ஆரம்ப நாளில் இரண்டு சுபக் கிரகங்களான சுக்கிரனும், குருவும் ராசியைப் பார்ப்பதால் நீங்கள் தெளிவான மனதுடனும், முடிவெடுக்கும் திறனுடனும் இருக்கும் மாதம் இது. சனி எட்டில் அமர்ந்து இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களில் சிலரின் வருமானங்கள் குறைந்து நிதிநிலைமை பாதிக்கப்பட்டாலும் தனகாரகனான குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் மிதுனத்திற்கு டிசம்பர் குறைகள் எதையும் தராது.
என்னதான் இருந்தாலும் அஷ்டமச்சனி நடப்பதால் உங்களில் சிலருக்கு அதிர்ஷ்டத்
தடைகளும்,
வரவேண்டிய தொகை வராமல் இழுப்பதும், பிள்ளைகள் வழியில் மனச்சங்கடங்களும் இருக்கும். ராசிநாதன் வலுவால் எதையும்
சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் காலம் என்பதால்
எதிலும் அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. அலுலவலகப் பணியில்
இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி
பறிக்கும் வேலைகள் நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம்
வரும் நிலையில் அதிக கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார். வீண்பழி
வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு வரும் காலம் இது.
புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அதிகப் பணம் முதலீடு செய்து தொழில் எதுவும்
ஆரம்பிக்க வேண்டாம். கடன் வாங்கவே வாங்காதீர்கள். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய
நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல்
போகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆறில் கேது சுபத்துவமாக இருப்பதால் வேற்றுமத, மொழி,
இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள்
உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில்
செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத்
தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து
இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறையினருக்கு
கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம் இது.
1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம் தேதி காலை 7.44 முதல் 9-ம் தேதி காலை 10.09 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும்
எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால்
எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய
வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment