Monday, 24 April 2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (24.4.2017 - 30.4.2017)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் பணவரவைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் குரு பார்வையுடன் அமர்ந்திருப்பது மேஷத்திற்கு ஒரு சிறப்பான அமைப்பு. மேலும் செவ்வாய்க்கு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சநிலைமையில் இருப்பதால் இந்த வாரம் மேஷராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வாரமாகவும் அமையும். குறிப்பிட்ட சில மேஷத்தினரின் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க இருப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாரம் இது.

Wednesday, 19 April 2017

குருஜியின் மாலைமலர் பதில்கள் - 79 (29.03.2016)ஒரு மகன், மதுரை - 16.

கேள்வி:

இந்த 31 வயதுவரை சஞ்சலமான ஒரு விரக்தியான வாழ்க்கையைத்தான் உணருகிறேன். திருமணமாகி ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உண்டு. அப்பாவின் டீக்கடையில் வேலை செய்கிறேன். கடந்த சில மாதங்களாக ஆன்மிகத்தேடல் அதிகமாகி கோவில்களுக்கு சென்று வருகிறேன் சமீபத்தில் ஒரு ஜோதிடர் உனக்கு இன்னும் ஒரு திருமணம் ராகுதசையில் உள்ளது அது உனக்கு நல்ல எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் தரும். செய்து கொள் என்று சொல்லி என்னை அதிர வைத்துவிட்டார். உங்களைத் தந்தையாக நினைத்துக் கேட்கிறேன். இது நடக்குமா? இரண்டாவது திருமணம் என்பது என் ஜாதகத்தில் உண்மையான அமைப்புத்தானா? அது எனக்குப் பயனா? என் குடும்பம், குழந்தைகள் பாதிக்குமா? ராகுதசையில் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன தொழில் செய்யலாம்? வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாமா? நான் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? என் எதிர்கால ரகசியம்தான் என்ன? உங்கள் பதிலை ஈசனின் பதிலாக கருதுகிறேன். வழிகாட்டுங்கள்.

Tuesday, 18 April 2017

குருஜியின் மாலைமலர் பதில்கள் - 131 (18.4.2017)


வி. சுரேஷ் குமார், தாராபுரம்.

கேள்வி:

46 வயதான எனக்கு இந்த உலகத்தில் பிடித்தவர்கள் எனது தாத்தா, பாட்டி. ஆகிய இரண்டே பேர்கள்தான். ஏழுவயது வரை தாத்தாவிடம் வளர்ந்த நான் அவரது மறைவிற்கு பிறகு அதுவரை யாரென்றே தெரியாத என் தாய்,தகப்பனிடம் சேர்ந்து பெற்றோர்களின் ஓயாத புலம்பலுக்கிடையே வளர்ந்தேன். என்னை ஒரு பெண்பிள்ளையை போல கண்டிப்புடன் அடக்கி அடக்கியே வளர்த்தார்கள். தந்தை எப்போதும் என்னிடம் அதட்டல், அதிகாரத்துடன்தான் நடந்து கொள்வார். அவரை அப்பாவென இதுவரை மூன்று முறைகள் மட்டும்தான் கூப்பிட்டு இருக்கிறேன். பல நேரங்களில் என் அப்பாவையும், அம்மாவையும் கொலை செய்து விடலாம் என்று நினைக்கும் அளவிற்கு ஆத்திரம் வரும். என் 36 வயதில் எனக்கு பிடிக்காத பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார்கள். முதலிரவு அன்றே வாழ்க்கை வெறுத்து விட்டது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். மனைவி அருகில் வந்தாலே வெறுப்பாக இருந்தது. தனி அறையில் ஒரு ஆணுடன் படுத்து உறங்குவது போலவே இருந்தது. உடனே விவாகரத்து வழக்குத் தொடுத்து பிரிந்து விட்டேன். அவள் வேறு கல்யாணம் செய்து விட்டாள். மூன்று, நான்கு வருடங்களாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிடித்த பெண் கிடைக்கவில்லை. நல்லவேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்ப வாழ்க்கை இல்லை. ருசியான பிடித்தமான சாப்பாடு இல்லை. எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டி. என். பி. எஸ். சி பரீட்சை எழுதி இருக்கிறேன். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா? விதவையாக இருந்தாலும் மனதிற்கு பிடித்த பெண் வேண்டும் என்று நினைக்கிறேன். 2-வது திருமணம் சந்தோஷமாக இருக்குமா? மீதி இருக்கும் காலமாவது மகிழ்ச்சியாக இருப்பேனா? தயவு செய்து எனது குழப்பத்தில் இருந்து விடுதலை தரும்படி ஜோதிட ஞானியை கேட்டு கொள்கிறேன்.

Monday, 17 April 2017

தகப்பன்-மகன் உறவு கெடுவது எப்போது? குருஜியின் விளக்கங்கள்... dt 26.2.2017

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (17.04.2017 - 23.04.2017)

மேஷம்:

வார ஆரம்பத்தில் நான்கிற்குடைய சந்திரன் சனியுடன் இணைவதால் வீடு, வாகனம், தாயார் போன்ற விஷயங்களில் மேஷ ராசிக்காரர்கள் பின்னடைவினைச் சந்திக்கின்ற வாரமாக இது இருக்கும். சிலருக்கு வீட்டுக்கடன் தவணை கட்டமுடியாத நிலைமை அமைந்து அதன் மூலமான மனக்கஷ்டங்கள் இருக்கும். எப்படி இருந்தாலும் இன்னும் சில வாரங்களில் மேஷத்திற்கு நடந்து கொண்டிருக்கின்ற சாதகமற்ற பலன்கள் விலகும் நேரம் வந்து விட்டதால் எதற்கும் கவலைப்பட தேவையில்லாத வாரம் இது.