கைப்பேசி : +91 8286 99 8888
சிம்மம்:
ராசியைக் குரு பார்ப்பதால் சிம்ம ராசியினர் எதையும் சாதிக்கும் மாதம் இது. உங்களில் சிலர் இதுவரை முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை முடித்துக் காட்டி நல்ல பெயர் எடுப்பீர்கள். யோகாதிபதிகள் குருவும், செவ்வாயும் கேந்திர ஸ்தானங்களான ஏழு, நான்கில் வலுவடைவதால் உங்களின் உடலும், உள்ளமும் சந்தோஷமாக இருக்கும் மாதம் இது. சிம்மத்திற்கு அனைத்து சிறப்புக்களும் இப்போது கிடைக்கும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் சந்தோஷமான மன நிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். உங்களுக்கு தோல்வி இல்லை.
ஒரு குறிப்பிட்ட பலனாக சுக்கிரன், சனியுடன் ஆறாமிடத்தில் இணைவதால் ஒரு கருப்பு
நிறமுள்ள வேற்றுமதக்காரர் அல்லது காலை விந்தி விந்தி நடப்பவரால் குடும்பத்தில்
குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காமல் கண்ணால் காண்பதும்
பொய்,
காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை கடைப்பிடிப்பது நல்லது. குருபகவான் ராசியைப்
பார்ப்பதால் மனம் உற்சாகமாக இருக்கும். எந்தச் சிக்கலையும் எளிதாக தீர்ப்பீர்கள்.
எதையும்,
யாரையும் சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் கௌரவத்தோடு
நடத்தப்படுவீர்கள். அந்தஸ்து உயரும்படியான சம்பவங்கள் நடக்கும். உடல்நலமும்
மனநலமும் சீராக இருக்கும்.
நோய்கள் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க தேவை இருக்காது. கடன் வாங்கினால்
திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
அதிக முயற்சி இல்லாமலே சுப காரியங்கள் நடக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாக
இருக்கும். இதுவரை முயற்சி செய்தும் நடக்காத சில விஷயங்கள் இனி முயற்சி இல்லாமலே
வெற்றி பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களைப் பிடிக்காதவர்கள் தேடி வந்து
நட்பு பாராட்டுவர். இதுவரை அதிர்ஷ்டம் இல்லாதவராக கருதப்பட்டவர்கள் இனிமேல்
அதிர்ஷ்டசாலியாக புகழப்படுவீர்கள். அலுவலகங்களில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும்.
பதவி உயர்வு,
சம்பள உயர்வு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட
வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும்.
மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், சந்தோஷங்களை
அனுபவிப்பீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment