கைப்பேசி : +91 8286 99 8888
கும்பம்:
ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் செவ்வாய், ஆட்சி நிலையில் சூட்சும வலுவுடன் அமர்ந்திருப்பதால் கும்ப ராசிக்கு இந்த மாதம் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டிருக்கும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் செவ்வாய் உங்கள் ராசிக்கு அவயோகிகள் என்பதால் செய்யும் வேலையில் லாபங்கள் குறைவாக இருக்கும். சிலருக்கு வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற அமைப்பும் உண்டு. இன்னும் சிலருக்கோ அலைச்சல்கள்தான் மிச்சம். காரியம் கை கூடவில்லை என்ற மனத்தாங்கல்களில் இருப்பீர்கள்.
விரயங்களை தடுக்கும் சுக்கிர, சனி சேர்க்கை மாதம் முழுவதும் உள்ளதால் இதுவரை
இருந்த வீண் செலவுகள் இனி மட்டுப்பட்டு வருகின்ற வருமானத்தை இனி ஓரளவிற்கு
சேமிக்கவும் முடியும். நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் யாவும் இனிமேல் நடக்க ஆரம்பிக்கும்.
வேலை இல்லாதவர்கள் மனதிற்கு பிடித்த நல்லவேலை கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம்
ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. செட்டில் ஆகாத நடுத்தர வயது கும்ப
ராசிக்காரர்கள் இந்த மாதம் முதல் நன்மைகள் நடக்க ஆரம்பித்து வாழ்க்கையில் நிலை
கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் லாபங்கள் இருக்கும். நீங்கள் கேட்கும்
பொருட்களை கணவரோ, மனைவியோ வாங்கி
தருவார்கள். சிலருக்கு மனைவி வழி சீதனமாக ஏதேனும் ஒரு நன்மை நடக்க வாய்ப்பு
இருக்கிறது.
3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம்தேதி காலை 11.14 முதல் 28-ம் தேதி மாலை 4.44 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment