கைப்பேசி : +91 8286 99 8888
மகரம்:
ராசியில் சுபத்துவமான அமைப்பில் சனியும், சுக்கிரனும் சேர்ந்து இருப்பதால் 30 வயதுக்குட்பட்ட மகர ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி அமைப்பையும் மீறி வேலை, தொழில் அமைப்புகளில் லாபங்களை தரும் மாதமாக டிசம்பர் இருக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த மாதம் ஆறுதலை தருகின்ற மாதமாக இருக்கும். மூன்று, பனிரெண்டுக்குடைய உரிய குரு, இரண்டில் வலுத்திருப்பதால் இதுவரை கிடைக்காத இடத்திலிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். பெண்களிடம் உதவிகள் கேட்டிருந்த இளையவர்களுக்கு இந்த மாதம் கேட்டது கிடைக்கும்.
உங்களில் சிலர் வேலை விஷயமாக வடக்கு திசை நோக்கி போவீர்கள். மகரத்திற்கு
துயரங்கள் எதுவும் இல்லாத மாதம் இது. இளைஞர்களுக்கு சில முற்றுப்பெறாத அனுபவங்கள்
கிடைக்கும். ஜென்மச் சனி நடப்பதால் உங்களில் சிலர் தேவையற்ற பழக்கங்களை இந்த மாதம்
கற்றுக் கொள்வீர்கள். உங்களை திசை திருப்பக்கூடிய நட்புகள் அறிமுகமாகும் மாதம்
இது. எதிலும் அக்கறையும் கவனமும் தேவை. யோகாதிபதிகள் சுக்கிரனும், புதனும் நல்ல நிலையில் இருப்பதால் தொழில் அமைப்புகளில் சிக்கல்கள் எதுவும்
இருக்காது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு
எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.
1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம் தேதி அதிகாலை 2.41 முதல் 26-ம் தேதி காலை 11.14 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment