கைப்பேசி : +91 8286 99 8888
கடகம்:
வாக்கு ஸ்தானத்தை யோகாதிபதி குரு பார்ப்பதாலும், ஜீவனாதிபதி நீச்சனாக இருந்தாலும் சுக்கிரனுடன் ராசியில் இருப்பதாலும், இதுவரை தடையாகி வந்த உங்களின் தொழில் முயற்சிகள் இப்போது நிறைவேறும். செவ்வாயின் சுப வலுவால் கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கொரோனாவின் தயவால் இதுவரை இருந்த முடக்கங்கள் இந்த மாதம் முதல் நல்லபடியாக விலகும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது.
சிலருக்கு அலுவலகங்களில்
வேலைப்பளு அதிகமாக இருக்கும். அனாவசியமாக எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
எல்லா விஷயத்திலும் பொறுமை அவசியம். அனைத்து விஷயங்களிலும் ஒருமுறைக்கு இரண்டுமுறை
யோசித்து செயல்படுவது நல்லது. ஏழில் சனி உள்ளதால் தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன்,
மனைவிக்கிடையே
கருத்து வேற்றுமைகள் வரலாம். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும்
இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும்.
25-ம் தேதி இரவு 10.47 மணி முதல் 28 -ம் தேதி அதிகாலை 4.33 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்களோ எந்த ஒரு
புதியமுயற்சியோ இந்த நாட்களில் செய்வதை தள்ளி வைப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment