கைப்பேசி : +91 8286 99 8888
சிம்மம்:
ராஜயோகாதிபதி செவ்வாய் நீச்சனாக இருந்தாலும், சுபத்துவமாக இருக்கிறார். இந்த அமைப்பு எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை தடுக்கும் கேடயமாக செயல்பட்டு உங்களை அனைத்திலும் காப்பாற்றும். குரு ராசியைப் பார்ப்பதால் சிம்மத்திற்கு எதிலும் ஜெயம்தான். சாதகமான கிரக நிலைகளால் தொழில், குடும்பம் போன்றவைகளில் இருந்து வந்த சங்கடங்களும் சாதகமற்ற விஷயங்களும் இந்த மாதம் முதல் விலகும் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செயலாற்றுவீர்கள். கொரோனாவினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட சிம்மத்தினர் கூட இந்த மாதம் மனதளவிலும் உடல்நிலையிலும் பத்து வயது குறைந்த நிலையை அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம்.
அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் நிலையும்
தாராளமான பணவரவு உள்ள மாதமாகவும் இது அமையும். தந்தை வழி உறவினருடன் சற்று
உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து
வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள்,
விவசாயிகள், வியாபாரிகள் போன்ற
துறையினருக்கு இந்த மாதம் ஓரளவு நல்ல மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பழைய
கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும்
பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும்.
மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment