Saturday, June 26, 2021

மிதுனம்: 2021 ஜூலை மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மிதுனம்:

ஜூலைமாதம் மிதுன ராசிக்கு சிறப்புகளைச் சேர்க்கும் மாதம்தான். ராசிநாதன் புதன் ராசியில் இருக்கும் நிலை பெறுவதால் கடந்த கால மன அழுத்தங்கள் இனி இல்லை. இனிமேல் உங்களுக்கு வருமானமும் இருக்கும். தொழில் ஸ்தானம் வலுப்பெறுவதால் இந்த மாதம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். 

அஷ்டமச் சனி நடப்பதால் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள். பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். பேராசைப்படும் எந்த விஷயமும் நடக்காது. ராகு,புதன் இணைவதால் வாய்ப்பு கிடைப்பவர்கள் ஒருமுறை ராகுபகவான ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு செல்வது நல்லது.

சனி எட்டில் இருப்பதால் உங்களில் சிலருக்கு கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும்.  இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். அந்தக் காதல் மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும். சுக்கிரன் வலிமையாக இருப்பதால் உங்களில் சிலர் இந்த மாதம் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள்.

தொழில், வேலை அமைப்புகளில் இருந்து வந்த தடைகள் விலகி  நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கு, புது வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவீர்கள். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் தாமதமாகும். பெண்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் அதிகம் இருக்கும்.

5,6,8,10,14,15,16,20,21,28 ஆகிய நாட்களில் பணம் வரும் 23 -ந்தேதி இரவு 7.57 மணி முதல் 25 -ந்தேதி இரவு 10.47 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment