ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மிதுனம்:
அதிசார குருப்பெயர்ச்சி மூலம் எட்டாமிடத்தில் இருந்த குரு, ஒன்பதாம் வீட்டிற்கு வந்து ராசியைப் பார்ப்பதால், பெரிய சங்கடங்கள் எதுவும் வந்து விடாத மாதமிது. மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் நல்ல நிலையில் இருப்பது தற்போது இருக்கும் பொருளாதார இன்னல்களை குறைக்கின்ற விதத்தில் இருக்கும். மிதுன ராசி இளைஞர்கள் தற்போது வேலை, தொழில்களில் சங்கட நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சிலருக்கு தற்போது இருக்கும் வேலை நீடிக்குமா என்பது போன்ற மிகப்பெரிய மன குழப்பங்கள் இருக்கிறது அஷ்டமச் சனி, ராசியில் ராகு போன்ற கடுமையான கிரக நிலைகளாலும், பூமி முழுவதுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காரணத்தினாலும், மிதுன ராசியினர் மற்ற ராசியினரைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக உங்களுடைய பொருளாதார நிலை
சொல்லிக்கொள்ள முடியாத ஒரு நிலையில் இருக்கிறது. எத்தனை பெரிய வசதி உள்ளவர்களாக
இருந்தாலும், நிரந்தர தொழில் அமைப்புகளை கொண்டவர்களாக
இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதம் வயது, தகுதிக்கு ஏற்றார் போல மன அழுத்தத்தை அடைந்து
விட்டீர்கள். அஷ்டமச் சனி நடக்கும் பொழுது நீங்கள் எதில் பெரிதும் நம்பிக்கை
வைத்து இருக்கிறீர்களோ அதில் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு பின்னடைவுகள்
இருக்கும். வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது என்பதை கற்றுக் கொடுக்கும் விதத்தில்
தற்போதைய கிரக நிலைகள் உள்ளதால் ஆதாயம் ஏதும் இன்றி அனுபவங்கள் மட்டுமே
கிடைக்கின்ற மாதமாக மே மாதம் இருக்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் மனக்குறை வரும்.
பருவ வயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் குறைகளை காது கொடுத்துக்
கேளுங்கள். குழந்தைகளிடம் நட்புடன்,
கனிவாக இருங்கள்.
என்ன இருந்தாலும் அவர்கள் உங்களின் குழந்தைகள், உங்களின் உழைப்பும் சேமிப்பும் அவர்கள் நன்றாக இருப்பதற்காகத்தான் என்பதை
மனதில் இருத்தி அவர்களின் பிரச்னைகளை அணுகுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயங்களை இந்த
மாதம் மிதுனத்தினர் செய்யக் கூடாது. அடுத்தவரை நம்பிச் செய்யக் கூடிய
விஷயங்களையும் செய்ய வேண்டாம். காலை வாரும் சம்பவங்கள் இருக்கும். சிறு
விஷயங்களில் கூட கவனம் அதிகமாக தேவைப்படும்.
2,5,7,9,10,15,17,18,19,25 ஆகிய நாட்களில்
பணம் வரும். 2ம் தேதி மதியம் 2.46 மணி
முதல் 4 ம் தேதி இரவு 8.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ
நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment