கைப்பேசி : +91 8286 99 8888
கடகம்:
மாதம் முழுவதும் இருக்கும் கிரக நிலைகள் கடகத்திற்கு யோகமாக இருக்கும் என்பதை காட்டுகின்றன. அதே நேரத்தில் சனி ஏழில் இருப்பது சில திருப்தியற்ற நிலைகளைத் தரும் என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாத சில முடிவுகளை நீங்கள் செயல்படுத்த வேண்டிய மாதமாக இது இருக்கும். உங்களில் சிலருக்கு பிடிக்காத ஒன்றை சகித்துத்தான் ஆகவேண்டும் என்கின்ற நிலைமையும் ஏற்படும். என்ன இருந்தாலும் சூரியன் உச்சமாகி, யோகாதிபதி செவ்வாய்க்கு குரு பார்வை இருப்பதால் சமரசங்களிலும், நீங்கள் நிறைவுகளை பெறுகின்ற மாதம் இது. முயற்சிகளை மேற்கொண்டால் கடகத்தினர் இலட்சியத்தை அடையும் காலமாக இது இருக்கும்.
ஏடிஏம்மில் பணம் நிரப்புவது போன்று
பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள், பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு
கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள
வேண்டாம். சுக்கிரனின் பலம் நல்லவைகளைத் தரும். சிலருக்கு அதிகமுயற்சி இல்லாமலே
சில காரியங்கள் நடந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து
விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு
நல்ல பலன்கள் நடைபெறும்.
உங்களில் திறமைக்கேற்ற வேலை
கிடைக்கவில்லையே என்ற மனக்குறையுடன் இருப்பவர்கள், விருப்பமில்லாமல் ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாற்றங்கள் கிடைக்கின்ற
மாதம் இது. சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு தூரம் போக வேண்டி
இருக்கும். சிலருக்கு வடக்கு திசை நோக்கிய பயணங்களும் அது சம்பந்தமான லாபங்களும்
இருக்கும். குறிப்பிட்ட ஒருபலனாக குரு எட்டில் உள்ளதால் உங்களால் முடியும் என்று நம்புகின்ற விஷயங்களை
மட்டும் செயல்படுத்துவது நல்லது. அதேநேரத்தில் பணவரவும், தன லாபங்களும் நிறைவாகவே இருக்கும். அம்மாவைப் பிரிந்து இருப்பவர்கள்
அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது சிறப்புகளைச்
சேர்க்கும். எதிர்மறை எண்ணங்களும்,
சங்கடங்களும் விலகும்.
முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் இருந்தவர்களுக்கு தீர்வுகள் தேடி
வரும்.
2,5,9,11,13,15,17,18,22,28,30 ஆகிய
நாட்களில் பணம் வரும். 4ம் தேதி இரவு 8.43 மணி முதல் 7ம் தேதி காலை 5.54 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment