ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
கன்னி:
மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து நல்ல மாற்றங்களை கன்னி ராசிக்காரர்கள் எதிர் கொள்வீர்கள். வேலை, தொழில் விஷயங்களில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வேலையில் நிம்மதி தருகின்ற அமைப்பும், தொழில் விஷயத்தில் நல்லவைகளும் நடக்கும். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் தொழில் இடங்களிலும், வீட்டிலும் உங்களை கோபப்படுத்தி எரிச்சல் ஊட்டும் சம்பவங்களை நடக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். எதையும் நீங்கள் சங்கடமாக எதிர்கொள்ளும் மாதம் இது. பிற்பகுதி மாதத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு அடுத்தவரின் உதவி இன்றி காரியங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். சிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.
பனிரெண்டாம் இடம் வலுப் பெறுவதால்
வீண்செலவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவு செய்வதற்கு தேவையான பணவரவும்
வருமானங்களும் கிடைக்கும். எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது. கணவன், மனைவி உறவு அனுசரணையாக
இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு.
அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். திருமணம் தாமதமான அக்கா அண்ணன்
போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள்
தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.
சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும் குழப்பங்களை மட்டும்
பார்த்தவர்களுக்கு தடைகள் விலக ஆரம்பிக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். நினைக்கும்
காரியத்தை சாதித்துக் காட்ட முடியும். ஒரு குறிப்பிட்ட பலனாக பணம் கொடுத்து
வாங்குவதில் சிக்கல்கள் தோன்றி பணத்தையும், நட்பையும் இழந்து, ஏண்டா கொடுத்தோம் என்று யோசிக்கும்
அளவிற்கு சம்பவங்கள் நடந்தவர்களுக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் மாதம் இது.
பிள்ளைகள் விஷயத்தில் நன்மைகள் இருக்கும். அவர்களுக்கானதை செய்ய முடியும்.
குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற இயலும். புரிந்து கொண்ட பிள்ளைகளால் தகப்பன், மகன் பாசம் அதிகரிக்கும்.
1,2,3,4,6,15,19,20,21,28,30 ஆகிய
நாட்களில் பணம் வரும். 9 ம் தேதி மாலை 5.28 மணி முதல் 12 ம் தேதி காலை 6.18 மணி
வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ
வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment