கைப்பேசி : +91 8286 99 8888
துலாம்:
மாத முற்பகுதியில் சூரியனும் ராசிநாதன் சுக்கிரனும் ஏழாமிடத்தில் இருப்பது மாதத்தின் முதல் பகுதியில் நல்லவைகளையும், 15-ம் தேதிக்குப் பிறகு பின்னடைவுகளையும் தரும் அமைப்பு என்பதால் மே மாதம் உங்களுக்கு மாற்றங்களை தருகின்ற மாதமாக இருக்கும். எட்டில் இணையும் ராகு, சுக்கிர, புதன் உங்களில் சிலருக்கு வட மாநில பிரயாணங்களையோ, சிலருக்கு வெளிமாநில வெளிநாடு வேலை மாறுதல்களையோ தருவார் என்பதால் துலாம் ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கின்ற மாதம் இது. ஒரு சிறு பயணமாவது இப்போது உங்களுக்கு இருக்கும்.
சுக்கிரன் ராகு இணைவது
சுற்றியிருப்பவர்கள் உங்களை வெறுப்பேற்றி கோபம் வரவழைக்கும் ஒரு அமைப்பு. எனவே
பேச்சிலும் செயலிலும் நிதானம் வேண்டும். எதற்கும் பொறுமை இழந்து எரிச்சல்
படுவீர்கள். நிதானமாக இருங்கள். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் லாபத்தை தரும்.
பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு
சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.
முயற்சிகளுக்கு பின்பு வெற்றிகளை
பெறுகின்ற அமைப்பு இந்த மாதம் இளைஞர்களுக்கு இருக்கிறது. இளையபருவத்தினருக்கு வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் இப்போது
இருக்கும். அது யாரேனும் ஒருவரை சந்திப்பதாக இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை
மாற்றக்கூடிய ஒரு சம்பவம் நடக்க கூடிய அமைப்பாக இருக்கலாம். ராசிநாதன் சுக்கிரன்
மாதம் முழுவதும் வலிமையான அமைப்பில் இருப்பதால் துலாத்தினர் அனைவரும் தங்களுடைய
வயதிற்கு ஏற்றார்போல நன்மைகளை அனுபவிப்பீர்கள்.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நன்றாக
இருக்கக்கூடிய சில மாற்றங்கள் இருக்கும் மாதமிது பிள்ளைகள் விஷயத்தில் நல்ல
பலன்கள் நடைபெறும். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் சாதகமாக நடைபெறும்.
சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் ஆதரவும் தகுந்த நேரத்தில் உதவியும்
கிடைக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள்
இருக்கும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
2,5,11,19,20,21,22,24,25,28,30 ஆகிய
நாட்களில் பணம் வரும். 12 ம் தேதி காலை 6.18 மணி முதல் 14ம் தேதி இரவு 7.13 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment