கைப்பேசி : +91 8286 99 8888
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு யோகக் கிரக நிலைகளே இந்த மாதம் அமைகின்றன. குறிப்பாக மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் எட்டாமிடத்தில் இருப்பதும் அவரைக் குரு பார்ப்பதும் கடன், நோய், எதிர்ப்புகளை விலக்கும் ஒரு அமைப்பு. இந்த நிலையால் உங்களில் சிலருக்கு நீண்டகாலமாக தொல்லைகளை கொடுத்து கொண்டிருக்கின்ற கடன் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். சிலருக்கு வேலையிடங்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடியோடு விலகும். அனைத்திலும் திருப்தியான மாதம் இது. எண்ணியது எண்ணியபடி நடக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.
எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்காமல்
முன்னேற வேண்டிய மாதம் இது. சாதகமான கிரக அமைப்புகள் இருப்பதால் தயக்கமும், சோம்பலுமின்றி பரம்பொருளைப் பிரார்த்தித்து
நீங்கள் எந்த முயற்சிகள் எடுத்தாலும் அனைத்தும் வெற்றியாகும். சிலருக்கு மறைமுகமான லாபங்களும், எதிர்பாராத உதவிகளும் இருக்கும். வெளிநாடுகளில்
இருக்கும் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் உண்டு. சிலர் வெளிநாடு, வெளி மாநிலம் செல்வீர்கள். சிலருக்கு குருட்டு
அதிர்ஷ்டம் செயல்படும். எதிர்பாராத ஏதேனும் ஒரு நல்ல லாபத்தை இந்த மாதம் எதிர்பார்க்கலாம்.
விருச்சிகத்தின் மன உறுதி மேம்படும் மாதம்
இது. மே மாதம் முழுவதும் அவயோக கிரகங்கள் கெடுதல்களைச் செய்ய இயலாத நிலையில்
இருப்பது சிறப்பு. வேலை, தொழில் அமைப்புகளில் நல்லபலன்களைத்
தரக்கூடிய சூரியன் மாத பிற்பகுதியில் ஏழாமிடத்திற்கு மாறப் போவதால் இதுவரை தொழில்
அமைப்பில் சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்த விருச்சிகத்தினர் தொழில் சங்கடங்கள்
தீருவதை உணர முடியும். பணத்தின் காரணமாக பிரிந்த ஒரு உறவோ அல்லது நட்போ மனம் மாறி
மீண்டும் உங்களிடம் இணையும்.
ஈகோவினால் பிரிந்திருந்தவர்கள்
ஒன்றிணைவீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்ப சிக்கல்களுக்கு ஆளாகி
பிரிந்திருந்த கணவன்-மனைவியினர் உண்மை நிலையினை அறிந்து சேருகின்ற மாதம் இது.
பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும். வீடு விஷயமான
கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும்.
2,5,6,10,15,19,20,26,27,28 ஆகிய
நாட்களில் பணம் வரும். 14ம் தேதி இரவு 7.13
மணி முதல் 17ம் தேதி காலை 6.52 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய
முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ
செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment