கைப்பேசி : +91 8286 99 8888
தனுசு:
உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. முக்கியமான பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தரும் நிகழ்வுகள் உண்டு. ஆன்மீக மைந்தர்களாகிய உங்களுக்கு இனிமேல் கெடுபலன்கள் வராமல் நன்மைகள் மட்டுமே வரும். சிலர் இறை வழிபாட்டில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மேமாதம் கெடுதலான பலன்கள் நடக்கும் என்று தனுசுவிற்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. சுப கிரகமான சுக்கிரன் ஆறில் அமர்ந்து பனிரெண்டைப் பார்ப்பதால் உங்களில் சிலருக்கு இந்த மாதம் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஒன்று நடக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவற்றில் 10ஆம் தேதிக்கு பிறகு லாபம் கிடைக்க இருக்கிறது.
சிலருக்கு வீடு விஷயத்தில் ஏமாற்றங்களும், வாகனச் செலவுகளும், வயதான தாயார் மூலமாக மனவருத்தம் மற்றும் மருத்துவச் செலவுகள் உண்டு. வீடு
கட்டிக் கொண்டிருப்பவர்கள் நல்ல காண்ட்ராக்டரிடம் ஒப்படையுங்கள். விரயங்கள் வரும்
அமைப்பு இருக்கிறது. இதுவரை தொழில் விஷயங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருந்து வரும் அதிர்ஷ்டமற்ற நிலைமைகள் மாறும்.
குறிப்பாக சொந்த வாழ்க்கையில் சென்ற வருடம் இழப்புகளை சந்தித்தவர்கள், இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாதவர்கள் மற்றும்
திருமணம், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக்
கொண்டிருப்பவர்களுக்கு மே மாதம் சந்தோஷத்தை தரும்.
குருவின் வலுவால் மனம் உற்சாகமாக இருக்கும்.
முகத்தில் புன்னகை தவழ காட்சி தருவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான
முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள்
உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. பத்தாம் இடம்
வலுப்பெறுவதால் மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். பெண்களுக்கு
அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் உண்டு. அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள்.
குறிப்பாக வரிவசூல் செய்யும் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை
கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். இந்த மாதம் நல்ல முறையில் செயலாற்றுவீர்கள்.
2,3,5,6,11,19,20,21,28,30 ஆகிய நாட்களில்
பணம் வரும். 17 ம் தேதி காலை 6.52 மணி முதல் 19ம் தேதி மாலை 3.48 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம்.
யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment