ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
மகரம்:
மகர ராசி இளைஞர்களுக்கு ஜென்மச் சனி
நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக உத்திராடம்,
திருவோணம்
நட்சத்திர இளைஞர்கள் மிகவும் மன அழுத்தத்திலும், எதிர்காலம் பற்றிய
மன உளைச்சல்களிலும் இருக்கிறீர்கள். 40 வயதுகளில் இருக்கும் எந்த ஒரு மகர
ராசிக்காரரும் தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார் போல நன்றாக
இல்லை என்பதே உண்மை. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பெரிய கஷ்டங்கள்
எதுவுமின்றி தடைகளை மட்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்
தாழ்ப்பாள் என்பதைப்போல ஏற்கனவே ஏழரைச்சனியின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு
கொண்டிருக்கும் மகரத்திற்கு தற்போது உலகம் முழுவதும் பாதித்திருக்கும் கொரோனா
வைரஸின் பாதிப்பாலும் வேலை, தொழில் விஷயங்களில் சங்கடங்கள்
இருக்கின்றன. உங்களின் திறமைக்கேற்ற வேலை, தொழில் அமையாத காலம் இது. இருக்கின்ற
வேலையிலும் உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் அதிகம் இருப்பார்கள். நீங்கள்
கஷ்டப்பட்டு அடுத்தவர் பெயரை வாங்கிக் கொண்டு போகும் மாதம் இது. அதே நேரத்தில்
மகரத்தினர் எதிலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் குணம் உள்ளவர்கள்
என்பதால் இறுதி வெற்றி உங்களுக்குத்தான் என்பது உறுதியான ஒன்று.
இளைஞர்களுக்கு இந்த வருடம் முழுவதும் பணம்
என்றால் என்னவென்று புரிய வைக்கக் கூடிய நிகழ்வுகள் மட்டுமே இப்போது நடக்கும்.
வேலை, தொழில் விஷயங்களில் அடுத்தவரை நம்பாமல்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் அகலக்கால் வைத்து விட வேண்டாம்.
எப்படிப்பட்டவராக இருந்தாலும் நம்பவே வேண்டாம். இந்த காலகட்டத்தில் சனி, பணத்தை இழக்க வைத்து வாழ்க்கையை புரிய வைப்பார் என்பதால் காசு பணத்தில்
கவனமாக இருக்க வேண்டிய மாதமிது. சிலருக்கு இனம்புரியாத மனக்கலக்கங்களும் தவறாக
ஏதாவது நடந்து விடுமோ என்கிற பயஉணர்வும் இருக்கும். யோகாதிபதிகள் வலுவாக
இருப்பதால் எந்தவிதமான எதிர்மறை பலன்களும் நடைபெறாது. தன்னம்பிக்கையை வளர்த்துக்
கொள்ள வேண்டிய மாதம் இது.
6,8,9,10,20,21,22,27,28,29, ஆகிய நாட்களில் பணம் வரும். 2ம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 4ம் தேதி
அதிகாலை 3.09 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய
முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும்
வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment