Monday, April 27, 2020

கும்பம்: 2020 மே மாத ராசி பலன்கள்



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : +91 9768 99 8888

கும்பம்:

ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தாலும் பெரும்பாலான கும்ப ராசிக்காரர்கள் அதை உணராத வண்ணமே நிகழ்ச்சிகள் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றன. கும்பம் சனியின் சொந்த ராசி என்பதால் மற்ற ராசிக்காரர்களுக்கு தருகின்ற துன்பங்களை சனி ஒருபோதும் கும்பத்திற்கு தருவதில்லை. ஏழரைச் சனியில் மற்ற ராசியினர்  100 சதவீத துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றால் கும்பத்தினருக்கு 40 சதவீத சங்கடங்களை மட்டுமே சனி தருவார். அதேநேரத்தில் பணக்கஷ்டம் வருவதற்கான சில அடிப்படைகள் இந்த மாதம் ஆரம்பிக்கும். எனவே பணவிஷயத்தில் கும்பத்தினர் கவனமாக இருக்க வேண்டிய மாதமிது.


வேலை, தொழில் விஷயங்களில் தவறான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, அனுபவம் இல்லாத தொழிலை ஆரம்பிப்பதோ இப்போது கூடாது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க வைக்கக் கூடிய சில ஆசைகள் தற்போது தூண்டப்படும் என்பதால் கும்பத்தினர் மற்றவர்களை நம்பாமல் தங்களுடைய சொந்த அறிவை மட்டுமே நம்ப வேண்டிய மாதமிது. ஏழுக்குடைய சூரியன் மூன்றில் உச்சமாகி, ராசியில் செவ்வாயும் பார்ப்பதால் சிலருக்கு மனைவியால் எரிச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம். எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் குறைவான மாதமாக இது தொடங்கினாலும், இறுதியில் கிடைக்கும் பணவரவால் உங்களுக்கு இது நிறைவான மாதமாகவே இருக்கும். அனைத்து கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நல்ல திருப்பங்கள் இப்போது நடக்கும்.

2,5,9,11,13,15,17,18,22,28, ஆகிய நாட்களில் பணம் வரும். 4ம் தேதி அதிகாலை 3.09 மணி முதல் 6ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment