Monday, April 27, 2020

தனுசு: 2020 மே மாத ராசி பலன்கள்



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : +91 9768 99 8888

தனுசு:

கடந்த மூன்று வருடங்களாக ஜென்மச் சனியின் ஆதிக்கத்தினால் கடுமையான மன அழுத்தத்திலும், பொருளாதார பிரச்சினைகளிலும், வேலை, தொழில் சங்கடங்களிலும் இருந்து வந்த தனுசு ராசிக்காரர்களுக்கு, ஜென்மச் சனி நீங்கும் சமயத்தில் உலகம் முழுவதையும் பாதித்த கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் மீண்டும் முடங்கிப் போகும் நிலை வந்து விட்டது. உலகம் முழுவதையும் பாதிக்கும் பிரபஞ்ச விதி செயல்படும்போது தனி மனித விதி செயலற்றுப் போகும் என்பதன்படி உலகில் உள்ள அனைவருமே சுதந்திரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு நீங்களும் விதிவிலக்கில்லை. கொரோனா வைரஸின் தாக்கம் இந்த மாத இறுதியில் இருந்து பூரணமாக விலகும் என்பதாலும் ஜென்மச் சனி விலகி விட்டதாலும் இனிமேல் தனுசு ராசிக்காரர்களுக்கு எதிலும் நன்மைகள் மட்டுமே உண்டாகும்.


மே மாதம் கெடுதலான பலன்கள் நடக்கும் என்று தனுசுவிற்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பலனாக சுப கிரகமான சுக்கிரன் ஆறில்  அமர்ந்து பனிரெண்டைப் பார்ப்பதால் உங்களில் சிலருக்கு இந்த மாதம் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஒன்று நடக்கும். பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவற்றில் எதிர்பாராத வகையில் 10ஆம் தேதிக்கு பிறகு லாபம் உங்களில் சிலருக்கு கிடைக்க இருக்கிறது. சிலருக்கு வீடு விஷயத்தில் ஏமாற்றங்களும், வாகனச் செலவுகளும், வயதான தாயார் மூலமாக மனவருத்தம் மற்றும் மருத்துவச் செலவுகள் உண்டு. மேற்கண்டவைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள் நல்ல காண்ட்ராக்டரிடம் ஒப்படையுங்கள். விரயங்கள் வரும் அமைப்பு இருக்கிறது.

உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. வழக்கு போன்ற முக்கியமான பிரச்னைகள் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தரும் நிகழ்வுகள் உண்டு. ஆன்மீக மைந்தர்களாகிய உங்களுக்கு இனிமேல் கெடுபலன்கள் வராமல் நன்மைகள் மட்டுமே வரும். சிலர் சிவ வழிபாட்டில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

2,3,5,6,11,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 27 ம் தேதி அதிகாலை 1.24 மணி முதல் 29ம் தேதி காலை 6.58 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment