ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
விருச்சிகம்:
கடந்த சில வருடங்களாகவே ஏழரைச்சனியின்
ஆதிக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரைச் சனி
விலகுவதால், சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று
எண்ணியிருந்த சமயத்தில், உலகம் முழுக்க கொரோனா வைரசின் தாக்கம்
ஏற்பட்டு, அதன் மூலம் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை, வேலை, தொழில் சங்கடங்கள் உங்களையும் விட்டு
வைக்கவில்லை. வேத ஜோதிடத்தில் பிரபஞ்சவிதி என்று சொல்லப்படும் மனித
சமுதாயத்திற்கான உலகப் பொதுவிதி செயல்படும்போது அதனுள் அடங்கிய தனிமனித ஜோதிட விதி
செயலற்றுப் போய்விடும் என்பதால், கடந்த சில வாரங்களாக உலக மக்கள் அனைவருமே
அவர்களுடைய பிறந்த ஜாதகம் எப்படி இருந்தாலும் சிறைக்குள் அடைபட்ட கைதிகளாக
வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போகும் நிலைக்கு மாறிப் போனோம். இந்த நிலை மே 4-ஆம்
தேதிக்குப் பிறகு படிப்படியாக மாறும்.
விருச்சிகத்தின் மன உறுதி மேம்படும் மாதம்
இது. மே மாதம் முழுவதும் அவயோக கிரகங்கள் கெடுதல்களைச் செய்ய இயலாத நிலையில்
இருப்பது சிறப்பு. வேலை, தொழில் அமைப்புகளில் நல்லபலன்களைத்
தரக்கூடிய சூரியன் மாத பிற்பகுதியில் ஏழாமிடத்திற்கு மாறி குருவின் பார்வையில்
அமரப் போவதால் இதுவரை தொழில் அமைப்பில் சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்த
விருச்சிகத்தினர் தொழில் சங்கடங்கள் தீருவதை இப்போது உணர முடியும். சனி, குரு மூன்றில் இணைவதால் சிலருக்கு மறைமுக விஷயங்களில் இருந்து பணவரவு
இருக்கும். பணத்தின் காரணமாக பிரிந்த ஒரு உறவோ அல்லது நட்போ மனம் மாறி மீண்டும்
உங்களிடம் இணையும்.
ஈகோவினால் பிரிந்திருந்தவர்கள்
ஒன்றிணைவீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்ப சிக்கல்களுக்கு ஆளாகி
பிரிந்திருந்த கணவன்-மனைவியினர் உண்மை நிலையினை அறிந்து சேருகின்ற மாதம் இது.
பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம்
கிடைக்கும். வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும்.
கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.
2,5,6,10,15,19,20,26,27,28 ஆகிய
நாட்களில் பணம் வரும். 24ம் தேதி மாலை 5.34
மணி முதல் 27ம் தேதி அதிகாலை 1.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ
சண்டையோ செய்யாதீர்கள்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment