Monday, April 27, 2020

கடகம்: 2020 மே மாத ராசி பலன்கள்



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : +91 9768 99 8888

கடகம்:

மாதம் முழுவதும் இருக்கும் கிரக நிலைகள் கடகத்திற்கு யோகமாக இருக்கும் என்பதை காட்டுகின்றன. மாத பிற்பகுதியில் இரண்டாம் அதிபதியான சூரியன் லாபஸ்தானத்தில் இருப்பது  நன்மைகளை தரக்கூடிய அமைப்பு.  ஆறில் கேது, 12ல் ராகு போன்ற கிரக நிலைகள் நன்மை தரும் என்பதால் முயற்சிகளை மேற்கொண்டால் கடகத்தினர் இலட்சியத்தை அடையும் காலமாக இது இருக்கும்.


என்னதான் தனி மனித ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் பிரபஞ்ச ஜோதிட விதியின் கீழ் பூமியில் உள்ள அனைத்து மனித உயிர்களும் பாதிக்கப்படுகின்ற நேரத்தில் தனிமனித கிரக நிலைகள் செயலற்றுப் போய்விடும் என்பதன்படி கடக ராசிக்காரர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்போது உலகில் பரவி வரும் கொரோனா வைரஸ் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அனைவருமே வெளியே வர முடியாத ஒரு சூழலில் சிறைக்கைதிகள் போல கட்டுண்டு கிடக்கிறோம். இந்த நிலைமை மே 4-ஆம் தேதிக்குப் பிறகு சனி, செவ்வாய் இணைவு நீங்குவதால் மாறும்.

உங்களில் திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற மனக்குறையுடன் இருப்பவர்கள், விருப்பமில்லாமல் ஒரு தொழிலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மாற்றங்கள் கிடைக்கின்ற மாதம் இது. சிலர் வேலை விஷயமாக பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு தூரம் போக வேண்டி இருக்கும். சிலருக்கு வடக்கு திசை நோக்கிய பயணங்களும் அது சம்பந்தமான லாபங்களும் இருக்கும். குறிப்பிட்ட ஒருபலனாக செவ்வாய் எட்டாமிடத்திற்கு மாறுவதால் உங்களால் முடியும் என்று நம்புகின்ற விஷயங்களை மட்டும் செயல்படுத்துவது நல்லது. அதேநேரத்தில் பணவரவும், தன லாபங்களும் குறைவாகவே இருக்கும். அம்மாவைப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது சிறப்புகளைச் சேர்க்கும். நடுத்தர வயதில் இருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு கொரோனா பாதிப்பினால் இருந்த எதிர்மறை எண்ணங்களும், சங்கடங்களும் விலகும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்லவழி தெரியக் கூடிய அளவிற்கு தீர்வுகள் தேடி வரும்.

2,5,9,11,13,15,17,18,22,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 14ம் தேதி இரவு 7.22 மணி முதல் 17ம் தேதி காலை 7.14 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment