Monday, April 27, 2020

கன்னி: 2020 மே மாத ராசி பலன்கள்



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : +91 9768 99 8888

கன்னி:

மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து நல்ல மாற்றங்களை கன்னி ராசிக்காரர்கள் எதிர் கொள்வீர்கள். ராசிநாதன் புத்னே தொழில் ஸ்தானதிபதியுமாகி குரு பார்வையோடு சுக்கிர இணைவில் சுபத்துவமாக இருப்பதால், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் இனிமேல் நன்றாக இருக்கும். வேலை, தொழில் விஷயங்களில் சிக்கல்களை சந்தித்துக்  கொண்டிருந்தவர்களுக்கு வேலையில் நிம்மதி தருகின்ற அமைப்பும், தொழில் விஷயத்தில் நல்லவைகளும் நடக்கும்.


தனிமனித ஜோதிட விதி செயலற்றுப் போகும் அளவிற்கு உலகம் முழுக்க உள்ள மனித சமூகத்திற்கு பொதுவான பிரபஞ்ச ஜோதிட விதி செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ராசிக்காரர்களுக்கு மட்டும் பொதுவான பலன்களை சொல்வது நகைப்பிற்கு இடமாகி போகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் அனைத்து ராசிக்காரர்களும் பாதிப்பிற்கு உள்ளாகி வீடுகளுக்கு இருக்கின்றோம். எல்லோரும் ஜெயிலுக்குள் இருக்கின்ற ஒரு நிலை போன்றது இது. எவருடைய ஜாதகமும் இப்போது செயல்படவில்லை. இந்த நிலை இந்த மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஆகவே அடுத்த மாதம் முதல் அனைவரும் இயல்புக்கு திரும்பும் மாற்றங்களை ஆரம்பிக்கும் மாதமாக இது இருக்கும்.

கொரோனாவின் தயவினால் சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும் குழப்பங்களை மட்டும் பார்த்தவர்களுக்கு தடைகள் விலக ஆரம்பிக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால்  பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். நினைக்கும் காரியத்தை சாதித்துக் காட்ட முடியும். ஒரு குறிப்பிட்ட பலனாக பணம் கொடுத்து வாங்குவதில் சிக்கல்கள் தோன்றி பணத்தையும், நட்பையும் இழந்து, ஏண்டா கொடுத்தோம் என்று யோசிக்கும் அளவிற்கு சம்பவங்கள் நடந்தவர்களுக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் மாதம் இது. சனி, செவ்வாய் சேர்க்கை விலகி விட்டதால் பிள்ளைகள் விஷயத்தில் நன்மைகள் இருக்கும். அவர்களுக்கானதை செய்ய முடியும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற இயலும். புரிந்து கொண்ட பிள்ளைகளால் தகப்பன், மகன் பாசம் அதிகரிக்கும்.

1,2,3,4,6,15,19,20,21,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 19 ம் தேதி இரவு 7.53 மணி முதல் 22 ம் தேதி காலை 7.37 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment