ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மிதுனம்:
மிதுனம்:
மாத
ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் வக்கிர நிலையில் வலுக்குறைந்து, ராகுவுடன் இணைந்திருந்தாலும் மாத பிற்பகுதியில்
புதன் குருபார்வைக்குள் வருவதால் எதையும்
சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.
உங்களில் சிலருக்கு சென்ற மாதம் முழுவதும் கணவன் மனைவிக்குள் மனக் கஷ்டங்களும்
போராட்டங்களும் இருந்தது.
அது இப்போது தீரும். முக்கிய பலனாக சிலருக்கு தந்தையின்
வழியில் மன வருத்தங்கள் மற்றும் செலவுகள் உண்டு. வயதான தகப்பனாரைக் கொண்டவர்கள்
அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிலருக்கு வீடு விஷயமான கடன்கள்
ஏற்படும். பழைய கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள்
எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
ஆறுக்குடையவன்
வலுப் பெற்று ஆறாமிடத்தைப் பார்ப்பதால் பெறுவதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க
வேண்டும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும்.
அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று
சிரமம் அதிகம் இல்லாமல் கிடைக்கும். தாய் வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.
வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய
பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். திருமணம் தொடர்பான நல்ல
விஷயங்கள் உண்டு. அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து
செயல்படுவீர்கள் என்பது நிச்சயம். ஆகஸ்டு மாதம் மிதுனத்திற்கு தொல்லைகள் எதுவும்
தராமல் நன்மைகள் மட்டுமே இருக்கும் மாதம்தான்.
விட்ட
குறை தொட்ட குறையாக சென்ற மாதம் போல ஈகோ பிரச்னையால் மாத பிற்பகுதில் கணவன்,
மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம்
என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின்
கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால்
மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். பிள்ளைகள் விஷயத்தில்
நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள்
கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா
விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment