கும்பம்:
கும்ப ராசியின் யோகாதிபதி சுக்கிரன் இந்த மாதம் வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் கும்பத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். அதே நேரத்தில் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய், ராகுவுடன் இணைந்து ஐந்தாமிடத்தில் இருப்பதால் இதுவரை வெளிநாடு போகாதவர்கள் கடல் தாண்டுவீர்கள். உங்களில் சிலருக்கு வடமாநிலங்களுக்குப் போவது போன்ற நீண்ட பிரயாணங்களும் இருக்கும். சொல்லிக் கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மைகளைத் தரும்.
ராசிநாதன் சனியோடு, கேது சம்பந்தப்படுவதால் சிலருக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி ஆலயங்களுக்குச் செல்வீர்கள். ஆலயத் திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஜாதகத்தில் சனி, குரு, கேது தசை நடப்பவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் மேன்மையான பலன்கள் நடக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு எவ்வித குறைகள் இருந்தாலும் பரம்பொருள் அவற்றைக் கனிவுடன் தீர்த்து வைப்பார். ஜூன் மாதத்தில் கெடுதல்கள் எவையும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லை. நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அதாவது டிரைவர்கள், டிராவல்ஸ் துறையினர், ஓரிடத்தில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் துறையினர் போன்றவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் உண்டு.
ஐந்தில் ராகு இருப்பதால் பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தொடர்பு இடைவெளி எனப்படும் தலைமுறை இடைவெளி இப்போது வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட ராகுவை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு சிறப்புக்கள் வீடு தேடி வரும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.
1,2,4,5,8,9,10,17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 10 ம் தேதி இரவு 8.00 முதல் 12-ம் தேதி இரவு 11.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment