மீனம்:
ராசிநாதன் குரு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் சாதகமான மாதம் இது. குருவின் பார்வை மாத ஆரம்பத்தில் சூரியனுக்கும், பிற்பகுதியில் யோகாதிபதி செவ்வாய்க்கும் அமைவதால் இந்த மாதம் நீங்கள் நினைப்பது நடக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச் செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும். செலவுகளை கடன் வாங்காமல் செய்வதற்கான வருமானங்களும் உண்டு. மாத பிற்பகுதி முழுவதும் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவிகள் கிடைத்தலும், குடும்பத்துடன் பிரயாணங்கள் செய்வதும் நடக்கும்.
மாத முற்பகுதியில் ஆறுக்கு அதிபதி சூரியன் குருவின் பார்வையில் இருக்கிறார். ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. அதேநேரம் குரு ஐந்தாமிடத்தையும் பார்ப்பதால் தாராளமான பணவரவு இருக்கும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.
சுக்கிரன் மூன்றில் வலுப்பெறுவதால் குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. மொத்த வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கூடுமானவரை அனைத்தையும் உங்களின் மேற்பார்வையில் நேரிடையாகச் செய்வது நல்லது. குறிப்பிட்ட ஒரு பலனாக இதுவரை பூர்வீக சொத்து விஷயத்தில் பங்காளித் தகராறு உள்ளவர்கள் சமரசத்திற்கான ஆரம்பங்களை இப்போது செய்வீர்கள். பிரச்னைகள் அனைத்தும் தீரும் மாதம் இது.
2,5,7,8,9,10,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி இரவு 11.21 முதல் 15-ம்தேதி அதிகாலை 4.01 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
.
No comments :
Post a Comment